நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கம் | naamtamilar.org +91-9092529250 / +044-43804084 join.naamtamilar.org donate.naamtamilar.org

தமிழ்நாடு
நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi retweeted
நாம் தமிழர் கட்சி - பாபநாசம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த தமிழ்ப் பழங்குடியினர் பாதுகாப்புப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி பூஞ்சேரி குரு.சக்தி அவர்களின் தாயாரும், பாபநாசம் மண்டலச் செயலாளர் அன்புத்தங்கை நளினி சக்தி அவர்களின் மாமியாருமான அம்மா குரு.கல்யாணி அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன். அம்மாவை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். அம்மா குரு.கல்யாணி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!
3
37
89
4,655
நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi retweeted
நாம் தமிழர் கட்சி - ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி, மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி ஏகநாதன் அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன். மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக் கொண்டு, களப்பணியாற்றி வந்த தம்பி ஏகநாதன் அவர்கள் நம்மை விட்டு பிரிந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது. ஈடுசெய்யவியலா பேரிழப்பினால் வாடும் தம்பியின் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன். தம்பி ஏகநாதன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!
2
47
124
5,305
நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi retweeted
பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணியையும், பின்புலத்தில் உடந்தையாக இருந்த குற்றவாளிகளையும் கண்டறிந்து, விசாரணையையும், வழக்கையும் துரிதமாக நடத்தி, மரணத்தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். @CMOTamilnadu @Chief_Secy_TN @jagadeshwarioff @VanniTamizhVCK @tnpoliceoffl சமூகத்தில் தொழிலதிபராக அறியப்பட்ட ஜெம் வீரமணி நிகழ்த்திய பாலியல் குற்றங்களும், அதுதொடர்பாக அடுத்தடுத்து வரும் செய்திகளும் பேரதிர்ச்சி தருகின்றன. உலகையே அதிர வைத்த எப்ஸ்டீன் கோப்புகள் போல, பெண் குழந்தைகள் மீது நிகழ்த்தப்பட்ட கோரப் பாலியல் வன்முறைகள் தமிழ்நாட்டையே உறைய வைத்திருக்கின்றன; பெரும் அதிர்வை நாடெங்கிலும் ஏற்படுத்தியிருக்கின்றன. கல்விக்கு உதவி செய்வதாகக் கூறி, விளிம்பு நிலையிலிருக்கும் பெண் பிள்ளைகளைக் குறிவைத்து, நடத்தப்பட்ட பாலியல் குற்றங்கள் ஒட்டுமொத்தச் சமூகத்தையும் வெட்கித் தலைகுனியச் செய்திருக்கிறது. முந்தைய திமுகவின் ஆட்சியிலேயே ஜெம் வீரமணி மீது ஆதாரத்தோடு புகார் அளிக்கப்பட்டபோதிலும் வழக்கு மட்டும் தொடுத்துவிட்டு, கைதுசெய்யாதுவிட்டதும், போதிய ஆதாரங்கள் இல்லையெனக் கூறி, நீதிமன்றத்தில் காவல்துறை கையைவிரித்து, வழக்கை நீர்த்துப் போகச் செய்ய முனைந்ததும் கடும் கண்டனத்திற்குரியது. பெண் குழந்தை வன்கொடுமை செய்யப்படும் காணொளி ஆதாரம் சமர்பிக்கப்பட்டும், ஜெம் வீரமணி உள்ளிட்டக் குற்றவாளிகளைக் கைதுசெய்யவும், அவர்களது முகத்திரையைக் கிழித்து, தண்டனையைப் பெற்றுத் தரவும் முயற்சி எடுக்காதது வெட்கக்கேடானது. மேடைகளில் பெண்ணுரிமை, சமத்துவம், விளிம்பு நிலை மக்களின் மேம்பாடு என்றெல்லாம் வாய்கிழியப் பேசிவிட்டு, பெண் குழந்தைகள் மீதான பாலியல் குற்ற வழக்கில் முந்தைய திமுக அரசு காட்டிய மெத்தனப்போக்கானச் செயல்பாடு ஏற்கவே முடியாத கொடுந்துரோகமாகும். இவ்வன்கொடுமை வழக்கில், முந்தைய அரசின் காவல்துறை தாக்கல் செய்த அறிக்கையை ஏற்காது, நடவடிக்கை கோரிய சிறப்பு போக்சோ நீதிமன்றத்தின் செயல்பாடே வழக்கில் நீதியை நோக்கிய முன்நகர்வைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது. ஜெம் வீரமணி பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையைப் பல ஆண்டுகளாக செய்து வந்ததும், அதன் பின்புலத்தில் பெரும் வலைப்பின்னல் இருக்கிறது என்பதுவுமான செய்திகள் இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன. இதில் தொடர்புடைய அத்தனைக் குற்றவாளிகளும், துணைபோன முந்தைய அரசின் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் தண்டிக்கப்பட வேண்டுமென்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் எண்ணவோட்டமாக உள்ளது. பெண் குழந்தைகளுக்கு இவ்வளவு பெரிய பேரவலம் நிகழ்த்தப்பட்டது தெரிந்தும், நடவடிக்கை எடுக்காது அலட்சியம் காட்டி, குற்றவாளிகளைத் தப்பிக்கவிடத் துணிந்த காவல்துறை அதிகாரிகள் அத்தனைப் பேர் மீதும் துறைசார்ந்த நடவடிக்கையும், குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டியது பேரவசியமானதாகும். இந்த வழக்கை அரசியல் சண்டையாகவோ, தேர்தல் காலப் பரப்புரைக் கூச்சலாகவோ மட்டும் பயன்படுத்திவிட்டு முடித்துவிடக் கூடாது. இந்த வழக்கின் பின்னணியில் உள்ள அனைத்து நபர்கள், உயர் அதிகாரிகள், இடைத்தரகர்கள் உள்ளிட்ட அனைவரையும் கண்டறிந்து, அவர்களைச் சட்டத்தின் முன்நிறுத்தி, அவர்களுக்கு அதிகபட்சத் தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும். ஏறக்குறைய அறுபது ஆண்டுகளாக மேலாகத் தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து வந்த திமுக, அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளுமே பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்வதில் முற்றிலுமாகத் தோற்றுப்போய்விட்டன. பொள்ளாச்சி பாலியல் கொடூரம், சிவகங்கைச்சம்பவம் முதல் நாள்தோறும் செய்தித்தாள்களில் வரும் பிஞ்சுக்குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் வரை தமிழகத்தில் நிலவும் மிக மோசமான நிலையை எடுத்துக் காட்டுகின்றன. குற்றம் செய்தால் பணத்தையும், அதிகாரத்தையும், அரசியல் செல்வாக்கையும் பயன்படுத்தி மிக இலகுவாகத் தப்பித்துவிடலாம் என்ற எண்ணமே ஜெம் வீரமணி போன்றவர்கள் துளியும் பயமின்றி, இத்தகையக் குற்றங்களில் ஈடுபடக் காரணமாக அமைந்திருக்கிறது. ஒரு தொழிலதிபர் 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பெண் குழந்தைகளைப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார் என்பது எவ்வளவு மோசமான ஒரு இழிநிலை? இந்த 40 ஆண்டுகாலத்தில் இங்கு ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களும், காவல்துறையினரும் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? பெண் குழந்தைகளின் பாதுகாப்பையே முழுமையாகக் கேள்விக்குறியாக்கிவிட்டு, வாக்கு வங்கி அரசியலுக்காகப் பெண்களைப் போற்றி மேடைகளில் பேசியதெல்லாம் எவ்வளவு போலித்தனமானது? என்பதை நாட்டு மக்கள் இனியாவது உணர்ந்துகொள்ள வேண்டும். திமுக, அதிமுக, தவெக எனும் மூன்று கட்சிகளுமே பெண்களுக்கு மாதா மாதம் தொகையை வழங்குவதை மட்டுமே தங்களது அதிகபட்சமான பெண்ணுரிமைச்செயல்பாடு எனக் கருதிக் கொண்டு, செயல்படுவது மிக மோசமானப் போக்காகும். ஒரு பெண் வீட்டைவிட்டு வெளியே சென்று, பயமின்றிப் பாதுகாப்பாக வீடு திரும்புவதற்கான புறச்சூழலை உருவாக்குவதே அவர்களுக்கு அளித்திட வேண்டிய அடிப்படை உரிமையாகும். இத்தோடு, பெண்களுக்கும், பிஞ்சுக்குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் வன்கொடுமைகள் முற்றிலுமாக ஒழிய வேண்டுமானால், அக்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரணத்தண்டனையை உறுதி செய்ய வேண்டும். ஆகவே, பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணி, உடந்தையாக இருந்த குற்றவாளிகளான சாந்தி, மகேந்திரசிம்மன் மட்டுமின்றி, இதற்குப் பின்னால் வலைப்பின்னலில் இருக்கும் அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள், தொழிலதிபர்கள் கொண்ட ஒட்டுமொத்த குற்றச் சங்கிலியையும் கண்டறிந்து, அத்தனைப் பேரையும் கைதுசெய்ய வேண்டும் எனவும், இவ்வன்கொடுமை வழக்கையும், விசாரணையையும் துரிதமாக நடத்தி, தொடர்புடைய குற்றவாளிகள் அத்தனைப் பேருக்கும் மரணத்தண்டனைக் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தவெக அரசை வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
232
598
1,561
273,383
நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi retweeted
நாம் தமிழர் கட்சி - புதுச்சேரி மாநிலம் உருளையன்பேட்டை பொறுப்பாளர் அன்புத்தம்பி சிவக்குமார் அவர்களின் அன்புமகன் சி.மனோஜ் அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன். அன்புமகனை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். அன்புமகன் சி.மனோஜ் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!
5
50
117
4,874
நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi retweeted
நாம் தமிழர் கட்சி - வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த முன்னாள் பாதுகாப்புப் படைவீரர்கள் பாசறைப் பொறுப்பாளர் அன்புத்தம்பி ஜோசுவா அவர்களின் அன்புமகன் ஜோகனாஸ் மாஸ் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். அன்பு மகனை இழந்து வாடும் தம்பி ஜோசுவா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உறவுகளுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கின்றேன். அன்புமகன் ஜோகனாஸ் மாஸ் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!
8
49
126
6,019
நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi retweeted
நாம் தமிழர் கட்சி - பரமக்குடி சட்டமன்றத் தொகுதி, அரியனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த மாவட்டப் பொறுப்பாளர் அன்புத்தம்பி ச.தாமோதரக்கண்ணன் அவர்களின் தாயார் அம்மா ச.பச்சவர்ணம் அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன். அம்மாவை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். அம்மா ச.பச்சவர்ணம் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!
4
35
82
3,816
வருகின்ற புரட்டாசி 19ஆம் நாள் 06-10-2026 அன்று நடைபெறவிருக்கும் #தாராபுரம் சட்டமன்றத்தொகுதிக்கான இடைத்தேர்தலில் #நாம்தமிழர்கட்சி சார்பாகப் போட்டியிடுகின்ற வேட்பாளர் மு.கார்த்திகா அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் #சீமான் அவர்களின் தலைமையில் தாராபுரம் மணக்கடவு, அலங்கியம் ஆகிய பகுதிகளில் வாகனப்பரப்புரையிலும், தளவாய்ப்பட்டினம் பரப்புரைப் பொதுக்கூட்டத்திலும் பரப்புரை மேற்கொண்டார். #DharapuramByElection | #Seeman | #Vivasayi | #சட்டமன்றத்தில்_நாம்தமிழர் | #Dharapuram | #Byelection | #தாராபுரம்_கார்த்திகா
47
106
4,356
வருகின்ற புரட்டாசி 19ஆம் நாள் 06-10-2026 அன்று நடைபெறவிருக்கும் #தாராபுரம் சட்டமன்றத்தொகுதிக்கான இடைத்தேர்தலில் #நாம்தமிழர்கட்சி சார்பாகப் போட்டியிடுகின்ற வேட்பாளர் மு.கார்த்திகா அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் #சீமான் அவர்களின் தலைமையில் தாராபுரம் முருகன் கோவில் அருகில் பரப்புரைப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. #DharapuramByElection | #Seeman | #Vivasayi | #சட்டமன்றத்தில்_நாம்தமிழர் | #Dharapuram | #Byelection
1
27
80
2,157
நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi retweeted
நாம் தமிழர் கட்சி - சேலம் மேற்கு தொகுதி, இரண்டாவது கோட்டத்தைச் சேர்ந்த அன்புத்தம்பி சஞ்சய் அவர்களின் தாயார் அம்மா ராதா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன். அன்னையை இழந்து வாடும் தம்பி சஞ்சய் அவர்களுக்கும், குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். அம்மா ராதா அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!
10
50
107
5,268
நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi retweeted
நாம் தமிழர் கட்சி - கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி, கையூட்டு-ஊழல் ஒழிப்புப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி ம.ஜார்ஜ் ஸ்டீபன் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன். மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக்கொண்டு கையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறைப் பொறுப்பாளராகக் களப்பணியாற்றிவந்த தம்பி ம.ஜார்ஜ் ஸ்டீபன் அவர்கள் நம்மை விட்டு பிரிந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது. ஈடுசெய்யவியலா பேரிழப்பினால் வாடும் தம்பியின் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன். தம்பி ம.ஜார்ஜ் ஸ்டீபன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!
18
53
130
6,355
நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi retweeted
நாம் தமிழர் கட்சி - சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி, கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த மாவட்டப் பொருளாளர் அன்புத்தம்பி காளியப்பன் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக் கொண்டு, துடிப்புடன் களப்பணியாற்றிவந்த தம்பி காளியப்பன் அவர்களை இழந்திருப்பது மிகுந்த மனத்துயரத்தைத் தருகிறது. தம்பியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். தம்பி காளியப்பன் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!
13
47
114
5,112
நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi retweeted
தம் வாழ்வு முழுவதையும் தமிழீழ விடுதலைக்காகவும், தமிழ்த்தேசிய எழுச்சிக்காகவும், தமிழர்களின் நல்வாழ்வுக்காகவும் அர்ப்பணித்து தமிழ்த்தேசிய அரசியல் களத்தில் எமக்கு முன்னத்தி ஏராக விளங்கிய என்னுயிர் தாய்மாமன் தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று! நான் திரைத்துறையில் இருந்த தொடக்க காலம் தொட்டு என் மீது பேரன்பு கொண்டு பேருதவிகள் பல புரிந்த பெருந்தகை மாமா சாகுல் அமீது அவர்கள், நாம் தமிழர் கட்சி தொடங்கியவுடன் என் தோளுக்கு துணையாக நின்று, தன்னைவிட வயதில், அரசியல் அனுபவத்தில் இளையவன் என்ற பாகுபாடு இன்றி, ஒரு சிறு முரணுக்கோ, முணுமுணுப்பிற்கோ இடமளிக்காது நான் இட்டப்பணியை தம் வாழ்நாள் கடமையாக ஏற்று செயல்பட்ட பேரன்புக்காரர்! தமிழ்த்தேசிய அரசியல் கருத்துகள் நிறைந்த ‘தமிழ் முழக்கம் வெல்லும்’ இதழை பல ஆண்டுகளாக நடத்தியப் பெருமைக்குரியவர். ஈழத்தாயகத்தின் மீதும், தமிழ்த்தேசியத் தலைவர் மீதும் அளவு கடந்த பற்றுக்கொண்ட மாமா சாகுல் அமீது அவர்கள், 2002ஆம் ஆண்டு, தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் கிளிநொச்சியில் உலகச் செய்தியாளர்களுக்கு அளித்த நேர்காணலைத் திறனாய்வு செய்ய, சென்னையில் திறனாய்வுக் கூட்டத்தை ஏற்பாடு செய்ததற்காக, பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு 17 மாதங்கள் சிறையில் வதைப்பட்டார். ஐயா பழ.நெடுமாறன் எழுதிய, ‘தமிழீழம் சிவக்கிறது’ எனும் நூலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தனது வணிகக் கிடங்கில் வைத்திருந்ததால், தேசத்துரோக வழக்குத் தொடுக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். சிறைக்கொட்டடியிலும், இன மீட்சிப் போராட்டக் களத்திலும், வாழ்வின் பெரும் பகுதியைக் கழித்த மாமா சாகுல் அமீது அவர்கள், பெரும் செல்வந்தராக சுகபோக வாழ்க்கையினை அனுபவிக்க இருந்த வாய்ப்புகளை எல்லாம் உதறித்தள்ளி, அளப்பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்து, ஒன்றரை ஆண்டுக்கு மேலாய் சிறையில் வாடியபோதும் எவ்வித சமரசத்திற்கும், தற்சோர்வுக்கும் ஆட்படாது, இறுதிவரை உறுதியாக களத்திலேயே நின்ற ஆகச்சிறந்த தமிழ்த்தேசியப் பெரும் போராளி! நாம் தமிழர் கட்சி முன்னெடுத்த மண்ணுக்கும், மக்களுக்குமான உரிமைப் போராட்டங்களில் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராகப் பங்கெடுத்ததுடன், தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளைப் பரப்பிய பெருமைக்குரியவர். தமிழினத்தின் மீதும், தமிழ்த்தேசியத் தலைவர் மீதும், நாம் தமிழர் கட்சியின் மீதும் அளவற்ற பற்று கொண்ட தமிழ்த்தேசியப் போராளி, அன்பிற்குரிய தாய்மாமன் தமிழ்  முழக்கம் சாகுல்  அமீது  அவர்களின் நினைவைப் போற்றுவோம்! - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
5
311
695
10,042
நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi retweeted
16 ஆயிரம் பேர் பாதிக்கப்படும் அளவிற்கு தமிழ்நாட்டில் வேகமாகப் பரவிவரும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காத தவெக அரசின் அலட்சியப்போக்கு நிர்வாக சீர்கேட்டின் உச்சம்! @CMOTamilnadu @TVKVijayHQ தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வேகமாகப் பரவிவரும் டெங்கு காய்ச்சலால் பல நூற்றுக்கணக்கான மக்கள் நாள்தோறும் பாதிக்கப்பட்டு வருவது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் 244 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் சென்னையில் மட்டும் 87 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வேகமாக அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலால் தற்போதுவரை, தமிழ்நாட்டில் 16,577 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனைத் தடுக்க எவ்வித ஆக்கப்பூர்வமான நோய்த்தடுப்பு நடவடிக்கையையும் எடுக்காத தவெக அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 9 பேர் உயிரிழந்த துயரச்செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன். மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், பருவநிலை மாறுதல் காரணமாக சளி, காய்ச்சல் உள்ளிட்ட தொற்றுநோய்கள் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரிடமும் வேகமாகப் பரவுகிறது. குறிப்பாக கொசுக்களின் மூலம் பரவக்கூடிய டெங்கு காய்ச்சல், தலைநகர் சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும் வேகமாக பரவி வருவதால் மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் 300 பேர் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவதால், டெங்கு காய்ச்சல் குறித்த பயமும், பீதியும் மக்களிடத்தில் ஏற்பட்டுள்ள நிலையில், நிகழும் உயிரிழப்புகள் அச்சத்தை இன்னும் அதிகமாக்குகின்றது. டெங்கு காய்ச்சலிலிருந்து தங்களை தற்காக்க முடியாமல் தமிழ்நாட்டு மக்கள் தத்தளித்து வருகிறார்கள். டெங்கு காய்ச்சல் பாதித்தவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் குவியத் தொடங்கியுள்ள நிலையில், நோய்த்தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தாமல், என்ன செய்துகொண்டிருக்கிறது தமிழ்நாடு சுகாதாரத்துறை? மிக மெத்தனமாக செயல்பட்டு மக்களின் உயிரோடு விளையாடும் தமிழ்நாடு சுகாதாரத்துறையின் அலட்சிய அணுகுமுறை நிர்வாக சீர்கேட்டின் உச்சம். தமிழகத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தி, அதனால் நிகழும் உயிரிழப்புகளைத் தடுக்க, தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை இனியாவது விழித்துக்கொண்டு சிறப்பு மருத்துவர் குழுவை அமைத்து, டெங்கு காய்ச்சல் குறித்த விளக்கங்களையும், முன்னெச்சரிக்கை தகவல்களையும், பாதுகாப்பு வழிமுறைகளையும் உடனடியாக வெளியிட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். மேலும், நடமாடும் மருத்துவ முகாம்கள் மூலம் தமிழ்நாட்டின் மாநகரங்கள் முதல் சிற்றூர்கள் வரை டெங்கு பரவல் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிடுவதோடு, மக்களை டெங்கு பாதிப்பிலிருந்து பாதுகாக்க அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் மக்கள் அதிகம் கூடுமிடங்களில் நிலவேம்பு கசாயம் கபசுர குடிநீர், உள்ளிட்ட நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் தமிழர் பாரம்பரிய மருந்துகளைப் போர்க்கால அடிப்படையில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
42
382
698
30,623
நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi retweeted
தமிழ்நாட்டில் சாதிய அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்ட மக்களின் இழிவு நீங்கவும், சமவுரிமை பெற்றுக் கண்ணியமாக வாழவும் பாடுபட்டதோடு, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், விடுதலைக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் போராடிய சமூகநீதிப்போராளி..! “எந்தச் சொல் உன்மீது இழிச்சொல்லாகச் சுமத்தப்படுகிறதோ, அந்தச் சொல்லை நீ எழுச்சிச் சொல்லாக மாற்றாத வரை உனக்கு விடுதலை இல்லை” என்று முழங்கிய புரட்சியாளர்! வர்ணாசிரம கோட்பாட்டிற்கு எதிராக ஒரு மாற்றுக் கோட்பாட்டை நீ உருவாக்கிக்கொள்ளாத வரை உனக்கு விடுதலை இல்லை என்று கற்பித்த பெருந்தகை..! இலண்டன் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்குக் குரல்கொடுத்த போராளி..! சாதியக் கொடுமைகளுக்கு எதிராக சட்டமன்றத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்களை முன்மொழிந்து அவை நிறைவேற காரணமான சமூகச் சீர்திருத்தவாதி..! அண்ணல் காந்தியடிகளுக்கு தமிழ்ப் படிக்கவும், தமிழில் கையெழுத்திடவும் கற்றுக்கொடுத்த தமிழறிஞர்..! தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் நினைவு நாளில் சமத்துவச் சமுதாயம் உருவாக்கிட வேண்டும் என்ற அவருடைய உயரிய கனவினை நிறைவேற்ற தொடர்ந்து அயராது பாடுபடுவோம் என்ற உள உறுதியோடு, அவருடைய பேரப்பிள்ளைகளாகிய நாம் பெருமிதத்தோடும், திமிரோடும் நம்முடைய புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்! நம்முடைய தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்! நாம் தமிழர்!
6
260
538
6,990
தவெகவின் 100 நாள் ஆட்சி! இதுவா மக்களுக்கான மாற்றம்? நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் எங்கள்தேசம் வலையொளிக்கு அளித்த சிறப்பு நேர்காணல். 👉piped.video/VNurLnKMCQE?si=j_nU… @EngalDesamTV
10
62
121
5,469
நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi retweeted
அருவிபோல் கொட்டும் அருந்தமிழ் பேச்சால் அறிவுக்கு விருந்தினைப் படைக்கும் ஆற்றல்மிகு சொற்பொழிவாளர்! இதழியல் மொழிநடையை உருவாக்கி தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட தந்தை! அரசியல், இலக்கியம், சமயம் என பல்துறைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் இயற்றி அன்னைத் தமிழுக்கு அணி சேர்த்த தமிழறிஞர்! இந்தியத் துணைக்கண்டத்தின் முதல் தொழிற்சங்கமான சென்னை தொழிலாளர் சங்கத்தைத் தோற்றுவித்து, தொழிலாளர் உரிமைபெறத் தோள்கொடுத்துத் துணைநின்ற புரட்சிப்போராளி! செந்தமிழும், சிவநெறியும் போற்றி வளர்த்த சைவப் பேரறிஞராகத் திகழ்ந்தபோதும் சைவம், வைணவம், சமணம், பௌத்தம், இசுலாம் உள்ளிட்ட பல மதக்கோட்பாடுகளையும் கற்றுத்தேர்ந்த சமயப் பேதமற்ற சமூகச் சிந்தனையாளர்! அரசியல் அறிஞர், ஆகச்சிறந்த ஆசிரியர், படைப்புத் திறன்மிக்கப் பத்திரிகையாளர், தனித்தமிழியக்க முன்னோடி, பெண்ணுரிமைப் போராளி, சாதிய தீண்டாமையை எதிர்த்துப் போராடிய தீரர், சமரச சன்மார்க்க அருளாளர், காந்தியவாதி, பொதுவுடைமை சிற்பி என்ற பன்முகச் சிறப்பிற்குரிய பெருந்தகையாளர்! தமிழாகவே வாழ்ந்த, தமிழர் நலத்திற்காகவே வாழ்ந்த, தமிழ்த் திருநாட்டின் வளர்ச்சிக்காகவும், இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காகவும் தன் வாழ்வெலாம் அரும்பாடுபட்ட நம்முடைய தாத்தா தமிழ்த்தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனார் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்! நாம் தமிழர்!
2
165
391
5,808
நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi retweeted
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! தமிழ்நாட்டில் தற்போது தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளிலும், புதுச்சேரி மாநிலத்தின் தட்டாஞ்சாவடி தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. வழக்கம்போல இந்தத் தேர்தலையும் நாம் தமிழர் கட்சி தனித்துக் களத்தில் எதிர்கொள்கிறது. தேர்தல் களத்தை விட்டு வெளியேறுவது எங்களுடைய அரசியல் அல்ல. தேர்தல் தோல்விகளை நாங்கள் நிரந்தரத் தோல்வியாகப் பார்ப்பதில்லை; தற்காலிகப் பின்னடைவாக மட்டுமே பார்க்கிறோம். எப்போதும்போல எமது மக்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கையும் பற்றும் கொண்டு இம்முறையும் தனித்துக் களத்தில் போட்டியிடுகிறோம். மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் அன்புத்தம்பி கோ.ஜானகிராமன், தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் அன்புத்தங்கை மு.கார்த்திகா, புதுச்சேரி மாநிலத்தின் தட்டாஞ்சாவடி தொகுதியில் அன்புத்தங்கை ச.கார்த்திக் குமாரி ஆகியோர் நாம் தமிழர் கட்சியின் சார்பில் களம் காண்கிறார்கள். எங்களிடம் படை இருக்கிறது; கருத்து இருக்கிறது; களத்தில் நின்று உழைப்பதற்கான வலிமை இருக்கிறது. எல்லாம் இருந்தும் எங்களுக்கிருக்கிற ஒரே பின்னடைவு பொருளாதார வலிமைதான். எப்போதுமே எமது மக்கள்தான் சிறுகச் சிறுக நிதிப் பங்களிப்பை அளித்து எங்களை வலிமைப்படுத்தி, அரசியல் களத்தில் பணியாற்ற வைத்திருக்கிறார்கள். இம்முறையும் எமது மக்கள் அதனைச் செய்ய வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். ஒரு மக்கள் இயக்கத்திற்கு இனமாகவும், பணமாகவும், வளமாகவும், வலிமையாகவும் மக்கள்தான் துணை நிற்க வேண்டும். ஏனெனில், மக்களிடமிருந்தே மக்களுக்காக வந்த அரசியல் இயக்கம்தான் நாம் தமிழர் கட்சி. நாம் தமிழர் என்பது ஒரு கட்சியின் பெயரோ, வெறும் அடையாளமோ அல்ல. அது நாம் பிறந்த பெருமைமிக்க தமிழினத்தின் அடையாளம். ஒரு இனத்தின், நிலத்தின் அரசியல் என்பது மொழி, இனம், கலை, கலாச்சாரம், பண்பாடு, வழிபாடு, நிலம், வளம் ஆகியவற்றைப் பேசாமல் இருக்க முடியாது. இந்நிலத்தில் மொழி என்றும், இனம் என்றும், இனத்தின் நலம் என்றும், நிலம் என்றும், வளம் என்றும் தொடர்ந்து பேசுகின்ற அரசியல் இயக்கமாக நாம் தமிழர் கட்சி களத்தில் நிற்கிறது. எமது மக்கள் பன்னெடுங்காலமாக அனுபவித்து வரும் துன்பங்களையும் துயரங்களையும் எடுத்துப் பேசி, அவற்றிற்கான விடிவையும் முடிவையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பும் கடமையும் எங்களுக்கு இருக்கிறது. இந்தத் தேர்தலை ஒரு சாதாரண இடைத்தேர்தலாக மட்டும் பார்க்க முடியாது. இந்தத் தேர்தல் எதற்காக வந்தது என்பதை மக்கள் ஆழ்ந்து கவனிக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய பதவியை விட்டு விலகுகிறார்கள். அதன் பிறகு வேறொரு கட்சியில், குறிப்பாக ஆளும் கட்சியில் இணைந்து, மீண்டும் அதே சட்டமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுகிறார்கள். அப்படியானால் அவர்களுக்கு மக்களுக்கான சேவை முதன்மையா? அல்லது தங்களுக்கான தேவை முதன்மையா? என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. அதே பதவி! அதே சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பு! ஆனால் கட்சியை மட்டும் மாற்றிக்கொண்டு மீண்டும் அதே பதவிக்குப் போட்டியிடுவது எந்த அளவுக்கு அவசியமானது என்பதை அறிவார்ந்த எமது மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒருவரின் பதவி விலகலால் மீண்டும் ஒரு தேர்தல் மக்கள்மீது திணிக்கப்படுகிறது. அந்தத் தேர்தலை நடத்த பல கோடி ரூபாய் மக்கள் பணம் செலவிடப்படுகிறது. நேரமும் காலமும் செலவாகிறது. அதிகாரிகள் அனைவரும் தேர்தல் பணியில் ஈடுபட வேண்டியுள்ளது. தொடர்புடைய பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளின் இயல்பு நடவடிக்கைகளும் பாதிக்கப்படுகின்றன. மக்கள் பணம் இப்படித் தேவையில்லாமல் செலவிடப்படுவதற்கு காரணமானவர்கள் அதற்குப் பொறுப்பேற்க வேண்டாமா? “ஆளும் கட்சியில் இருந்தால்தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும்” என்று கூறினால், எதிர்க்கட்சி எதற்காக? எதிர்க்கருத்து எதற்காக? ஒரு சட்டமன்றத்திற்குள் எதிர்க்கருத்தே இல்லாமல் போனால் அது எத்தகைய ஜனநாயகம்? மக்கள் மன்றத்திற்குள் மாற்றுக்கருத்தைப் பதிவு செய்ய உறுப்பினர்களே இல்லாமல் அனைவரும் ஆளும் கட்சியிலேயே இருக்க வேண்டும் என்ற நிலை உருவாவது ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல என்பதே எங்களுடைய நிலைப்பாடு. நாம் தமிழர் கட்சி முன்வைக்கின்ற அடிப்படை அரசியல் அமைப்பு மாற்றங்களில் இதுவும் ஒன்று. மக்கள் கொடுத்த பதவியிலிருந்து இடையில் விலகிவிட்டு கட்சி மாறுபவர்களுக்கு 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒருவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்றால், அவருடைய பதவி விலகலால் ஏற்பட்ட இடைத்தேர்தலுக்கான செலவை முதலில் அவரிடமே வசூலிக்க வேண்டும். ஒரு தொகுதியில் இடைத்தேர்தலை நடத்துவதற்கு பல கோடி ரூபாய் செலவாகிறது என்றால், தனிப்பட்ட அரசியல் விருப்பத்தால் அந்தத் தேர்தலை உருவாக்கியவர் அந்தச் செலவுக்குப் பொறுப்பேற்க வேண்டும். மக்கள் பணத்தில் அந்தச் செலவைச் செய்யக்கூடாது. அதன் பிறகே தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுத்தொகையைச் செலுத்த அனுமதிக்கும் விதியை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். அப்படியொரு அமைப்பு மாற்றம் வந்தால், மக்கள் கொடுத்த பதவியை எளிதில் யாரும் தூக்கி எறிய மாட்டார்கள். மக்கள் அளித்த பொறுப்பை மதித்து, அந்தப் பதவியில் இருந்து பணியாற்றுவார்கள். மக்கள் நீண்ட வரிசையில் நின்று, ஒரு நம்பிக்கையோடு வாக்களித்து ஒருவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்கள் கொடுத்த அந்தப் பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு, வேறொரு கட்சியில் சேர்ந்துவிட்டு, மீண்டும் அதே பதவிக்கு வந்து வாக்குக் கேட்பது மக்களின் தீர்ப்பை அவமதிப்பதாகும். “நாங்கள் எங்கு நின்றாலும், எதைச் செய்தாலும் மக்கள் மீண்டும் வாக்களிப்பார்கள்” என்ற மெத்தனப்போக்கோடு மக்களைக் குறைத்து மதிப்பிடுவது ஏற்புடையதல்ல. இந்தக் கருத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும் இந்த இடைத்தேர்தல் களத்தை நாம் தமிழர் கட்சி பயன்படுத்தும். பல கட்சிகளுக்கும் சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக இந்த மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் தொடர்ந்து போராடி வரும் நாம் தமிழர் கட்சிக்குச் சட்டமன்றத்தில் இடம் கிடைக்கவில்லை. மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்காகத் தொடர்ந்து களத்தில் நின்றதால் என் மீது மட்டும் நூற்றுக்கணக்கான வழக்குகள் உள்ளன. எமது பிள்ளைகளும் பல்வேறு வழக்குகளையும் சட்ட நடவடிக்கைகளையும் எதிர்கொண்டிருக்கிறார்கள். கடந்த 15 ஆண்டுகளில் மக்களின் எந்தப் பிரச்சினையையும் நாம் தவிர்த்துவிட்டோம் என்று சொல்ல முடியாது. மக்களோடு மக்களாக மழையிலும், பனியிலும், வெயிலிலும் நின்று, மக்களின் துயரங்களைப் பற்றிப் பேசி, உறக்கத்தைத் தொலைத்து, அவர்களுக்காகப் போராடியிருக்கிறோம். அப்படிப்பட்ட எங்களை இன்று ஆட்சியில் இருப்பவர்கள் “ஜீரோ” என்று சொல்கிறார்கள். ஆனால், இந்த ஜீரோவைப் பார்த்துத்தான் அந்த ஹீரோக்கள் பயப்படுகிறார்கள்! எதுவுமே இல்லாதவர்கள், கட்டுத்தொகையைக்கூட பெற முடியாதவர்கள் என்று எங்களைப் பேசுபவர்கள், நாம் முன்வைத்த அரசியல் இன்று தேவையா, தேவையில்லையா என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம் பேசிய அரசியலின் தேவை இன்று மக்களுக்குப் புரிகிறது! குடிப்பதற்குத் தூய நீர் இல்லை. உணவு நஞ்சாகிறது. தூய காற்றைச் சுவாசிக்க முடியாத நிலை உருவாகிறது. புவி வெப்பமடைகிறது. பருவநிலை மாறுகிறது. இவையெல்லாம் என்ன என்பதைப் பற்றிய புரிதலே இல்லாதவர்களிடம் ஆட்சியும் அதிகாரமும் இருந்தால் அதன் விளைவுகள் என்னவாகும் என்பதையும் மக்கள் சிந்திக்க வேண்டும். இந்த நிலையிலும் நாம் தமிழர் கட்சியின் பிள்ளைகள் தொடர்ந்து இந்த அரசியலை முன்னெடுத்து வருகின்றோம். எப்போதும்போல எமது மக்கள் வலிமையாகவும், வளமாகவும், இனமாகவும், பணமாகவும் எம்மோடு இணைந்து நின்று எங்கள் கைகளை வலிமைப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன். நன்றி! திரள்நிதி திரட்டல்: donate.naamtamilar.org/let_n… - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
592
617
1,688
382,310
நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi retweeted
மரந்தான் மரந்தான் எல்லாம் மரந்தான்! மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்! மனிதா! மனிதனாக வேண்டுமா? மரத்திடம் வா..! ஒவ்வொரு மரமும் போதிமரம்.! என்று பாடுகிறார் கவிப்பேரரசு ஐயா வைரமுத்து. "மரங்களை அழிப்பது என்பது பூமியின் சுவாசப் பைகளை நாமே சேதப்படுத்துவதற்குச் சமம்." என்கிறார் ஃப்ரங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் ஒரு மரத்தை நடுவது என்பது மனித குலத்தின் எதிர்காலத்திற்குச் செய்யும் மிகச்சிறந்த முதலீடு என்ற கொள்கை முழக்கத்துடன், தன் வாழ்நாள் முழுவதும் மரக்கன்றுகள் நட்டுப் பேணி வளர்ப்பதிலும், விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்துவதிலும் செலவிட்டு, மரங்களுக்காகவே வாழ்ந்து மறைந்த மாமனிதர்! ஐயா ‘மரம் தங்கசாமி’ அவர்களின் நினைவு நாளில் ஐயா அவர்களின் அரும்பணியைப் போற்றி வணங்குகிறேன்! இன்றைய நாளில் தத்தம் பகுதியில் ஆளுக்கொரு மரம் நட்டு ஐயா மரம் தங்கசாமி அவர்களை நன்றியுடன் நினைவுகூர்வோம்! மரம் மண்ணின் வரம்! அதை வளர்ப்பதே நம் அறம்!
6
256
574
7,992