நாம் தமிழர் கட்சி - தகவல் தொழில்நுட்பப் பாசறை - 2.0 Official NTK ITWing

Chennai, India
ஆட்சிக்கு வந்து முதல் நாளிலேயே பணி நிரந்தரம் செய்வோம் என்று உறுதியளித்து வாக்குகளைப் பெற்றுவிட்டு, அதனை நிறைவேற்றக்கோரினால் கைது செய்வதா? செவிலியர்களுக்குச் செய்த துரோகத்திற்கு தவெக அரசு பதில் சொல்லியே ஆகவேண்டும்! - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி @CMOTamilnadu @TVKVijayHQ
1
57
112
1,600
அரசு இன்றைக்குத்தான் பெண்களுக்கு பேருந்தில் இலவசப் பயணம் என்று அறிவிக்கிறது. அரசு அறிவிப்பதற்கு முன்பே, பிரசவத்திற்கு இலவசம் என்று அறிவித்தவன் என்னுடைய ஆட்டோ ஓட்டுநர்தான். #ntk #seeman #politicalnews #autodrivers
8
151
336
4,277
கடலோரப் பகுதிகளில் அரசு வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தும்போது, மீனவ மக்களின் வாழ்வாதாரமும் குடியிருப்புகளும் பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுவது இயல்பானது. கடற்கரை ஒழுங்குமுறை மண்டல (CRZ) விதிகளில் உள்ள பலவீனங்களையும், திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் குழுவில் அரசு அதிகாரிகளின் ஆதிக்கமே அதிகம் இருப்பதையும் சுட்டிக்காட்டி மக்கள் நலன் காக்கப்பட வேண்டும்
69
131
2,191
சனநாயகத்தின் மீதான நம்பகத்தன்மையைக் காக்க, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரைப் பதவிநீக்கம் செய்வதோடு, அவரது தலைமையில் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களையும் ரத்து செய்து, நேர்மையான முறையில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்! - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
13
94
178
2,233
‘உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்குப் பதிலாகப் பசியில் இருப்போர்க்கு வயிறார உணவு கொடுப்பதே கடவுளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்’ என்று கற்பித்து வடலூரில் அணையா அடுப்பை ஏற்றி வழிகாட்டிய வள்ளல்..! வாடிய பயிரைக் கண்டு வாடிய உயிர்ம நேயர்..! சனாதனத்திற்கு எதிராக சமரச சன்மார்க்கம் கண்ட புரட்சியாளர்..! கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிக! அருள் நயந்த நன்மார்க்கர் ஆள்க! என்று முழங்கிய பேராண்மையாளர்! தமிழர்களின் சமத்துவ மெய்யியலை மீட்டெடுத்த திருவருட்செல்வர்..! உண்மை ஒளியைக் காண வடலூர் பெருவெளியை அமைத்த அருளாளர்..! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்கவென திருவருட்பா அருளிய தெய்வத் திருமகன்..! ‘தமிழர் மெய்யியல் மீட்பர், திருவருட்செல்வர் வள்ளலார் பெருமானார் திருப்புகழ் போற்றுவோம்! நாம் தமிழர்!
39
321
774
13,047
சனநாயகத்தின் மீதான நம்பகத்தன்மையைக் காக்க, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரைப் பதவிநீக்கம் செய்வதோடு, அவரது தலைமையில் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களையும் ரத்து செய்து, நேர்மையான முறையில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்! வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் என்ற பெயரில் இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகளை கடுமையாக எதிர்த்த நாம் தமிழர் கட்சி, அதன் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை குறித்து தொடக்கம் முதலே கேள்வி எழுப்பிவந்தது. தகுதியுள்ள வாக்காளர்களின் வாக்குரிமை பாதுகாக்கப்படுகிறதா? பெயர் சேர்த்தலும் நீக்குதலும் உரிய சட்ட நடைமுறைகளின்படி நடைபெறுகின்றனவா? தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்படுகிறதா? என்று நாம் தமிழர் கட்சி எழுப்பிய ஐயங்கள் அனைத்தும் சரியானவை என்பதை நிறுவும் வகையில் வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி தொடர்பான முடிவுகள் குறித்து, தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் பதினான்கு முறை எதிர்ப்பினை பதிவு செய்துள்ளதை எளிதில் கடந்துவிட முடியாது. சில நடவடிக்கைகள் அவர்களுடைய கவனத்திற்குக் கொண்டுவரப்படாமலேயே மேற்கொள்ளப்பட்டதும், வாக்காளர் தரவுகளைக் கையாளும் நடைமுறைகள் குறித்து அவர்கள் எழுப்பிய கேள்விகளும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீதான ஐயத்தை மேலும் அதிகரிக்கிறது. வாக்காளர் பட்டியலில் யாருடைய பெயரைச் சேர்ப்பது, யாருடைய பெயரை நீக்குவது என்பதைத் தீர்மானிக்கும் நடைமுறையே நேர்மையானதாக இல்லையென்றால், அதன் அடிப்படையில் நடைபெறும் தேர்தல்கள் மட்டும் எப்படி நேர்மையானதாக இருக்க முடியும்? எங்களைப்போன்ற அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பியபோது தட்டிக்கழித்த தேர்தல் ஆணையமும், உச்சநீதிமன்றமும் இன்றைக்கு துணை தேர்தல் ஆணையர்களே எழுப்பிய கேள்விகளுக்கு பதில் கூற முடியுமா? படிவம் 6 தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்கள், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை மேலும் கேள்விக்குள்ளாக்குகின்றன. சிறப்புத் தீவிரத் திருத்தப்பணிக்காகப் படிவம் 6 உடன் இணைக்கப்பட்ட உறுதிமொழியை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாக, செப்டம்பர் 26 அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. ஆனால், மாற்றியமைக்கப்பட்ட படிவம் 6-க்கு தாங்கள் ஒப்புதல் அளிக்கவில்லை என்று அக்டோபர் 5 அன்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. நீதிமன்றம் வழங்காத ஒப்புதலை வழங்கியதாக தேர்தல் ஆணையம் கூறியது ஏன்? உச்சநீதிமன்றத்தின் பெயரிலேயே 140 கோடி மக்களை ஏமாற்றும் அதிகாரத்தை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு கொடுத்தது யார்? எந்த அடிப்படையில் வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டன? பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய அறிவிப்பும், விளக்கமளிக்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டதா? முறையீடுகள் எவ்வாறு கையாளப்பட்டன? என்பதற்குத் தெளிவான பதில் வேண்டும். எதிர்ப்புகள் பதிவான கோப்புகள் எவை, அவற்றுக்கான பதில்கள், ஒப்புதல் வழங்கப்பட்ட பதிவுகள் ஆகியவற்றைப் பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட வேண்டும். கருத்து வேறுபாடுகள் இயல்பானவைதான், ஆனால் முடிவுகள் ஒருமித்த முறையில் எடுக்கப்பட்டவை என்று தேர்தல் ஆணையம் அளிக்கும் விளக்கத்தை ஒருபோதும் ஏற்க முடியாது. மூன்று தேர்தல் ஆணையர்களில் இருவர் எதிர்ப்பு தெரிவித்தார்களில் எனில், தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தல் விதிகளின்படியே அம்முடிவு தோற்றுப்போன முடிவாகும். அதன் அடிப்படையில் நடைபெற்ற தேர்தல்களும் செல்லத்தக்கவை அல்ல! இது ஒரு கட்சியின் வெற்றி, தோல்வி பற்றிய கேள்வியல்ல; மக்களுக்காக மக்களே வழங்கிய மக்களின் தீர்ப்பை நேர்மையாகப் பிரதிபலிக்க வேண்டிய தேர்தல் முறையின் நம்பகத்தன்மை பற்றிய கேள்வி. வாக்களித்தால் மாற்றத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை வருங்காலத் தலைமுறையிடம் நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அந்த நம்பிக்கையைச் சிதைக்கும் கேள்விகளுக்கு வெறும் அமைதி மட்டுமே பதிலாக இருக்க முடியாது. எனவே, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்வதற்கான உரிய அரசியலமைப்புச் சட்ட நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுப்பதோடு, வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி, பெயர் நீக்கங்கள், தரவுகள் கையாளப்பட்ட விதம், ஆணையத்தின் முடிவெடுக்கும் நடைமுறை ஆகியவற்றை நீதித்துறை விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், ஞானேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களையும் உரிய சட்ட நடைமுறைகளின் வாயிலாக ரத்து செய்வதுடன், சரிபார்க்கப்பட்ட வாக்காளர் பட்டியலுடன், தகுதியுள்ள ஒவ்வொரு குடிமகனின் வாக்குரிமையும் உறுதிசெய்தப் பின்னர் உச்சநீதிமன்ற கண்காணிப்பில், நேர்மையான முறையில் மீண்டும் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
150
630
1,092
105,883
சத்தியபாமா கண்ணீர் வடித்தால் அரவணைத்து ஆறுதல் கூறுவார் விஜய். செவிலியர்கள் கண்ணீர் வடித்தால் காவல்துறையை ஏவி விரட்டி அடிப்பார்! -இடும்பாவனம் கார்த்தி மாநில ஒருங்கிணைப்பாளர் இளைஞர் பாசறை நாம் தமிழர் கட்சி @idumbaikarthi
15
157
254
3,407
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு செவிலியர்களின் போராட்டத்தில் கலந்துகொண்டு, “நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக கோரிக்கையை நிறைவேற்றுவோம்” என்று நாடகமாடிவிட்டு, ஆட்சிக்கு வந்த பிறகு காவல்துறையைக் கொண்டு போராட்டத்தைத் தடுத்து, அடக்குமுறையைக் கையாள்வது நியாயமா? @CMOTamilnadu @TVKVijay #tvkfails
25
574
999
9,504
உழவு இல்லையேல்; உணவு இல்லை! உணவு இல்லையேல்; உயிர்கள் இல்லை! உயிர்கள் இல்லையேல்; உலகு இல்லை! உழவை மீட்போம்! உலகைக் காப்போம்! - அண்ணன் செந்தமிழன் சீமான் #ntk #seeman #tamilnationalisam #political_superstar
35
174
510
5,565
ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளில் கழிவுநீரும் குப்பையும் தேங்கி நிற்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், தமக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தால் கழிவுநீர் வாய்க்காலாக மாறியுள்ள ராஜவாய்க்காலை முதற்கட்டமாகச் சுத்தம் செய்து தருவேன் - தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் பரப்புரையில் வேட்பாளர் கார்த்திகா திரள் நிதி அளிக்க: donate.naamtamilar.org/let_n…
62
118
1,833
கக்கனார், ஜீவானந்தம், காமராஜர் போன்ற மாபெரும் அறிவார்ந்த தலைவர்கள் அலங்கரித்த சட்டமன்றத்தில், இன்று 'கர்மவீரர் காமராஜரை' 'காமவீரர்' என்று வாசிக்கக்கூடிய தற்குறிகள் வீற்றிருப்பது வேதனையளிக்கிறது. இத்தகைய தற்குறிகளை வேட்டையாட ஒற்றைப் புலியாக, அண்ணன் சீமானின் தங்கையாகச் சட்டமன்றத்திற்குள் என்னை அனுப்பி வையுங்கள்; உண்மையான சட்டமன்றப் பணி என்றால் என்ன என்பதைச் செய்து காட்டுகிறேன் - தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் பரப்புரையில் வேட்பாளர் கார்த்திகா திரள் நிதி அளிக்க: donate.naamtamilar.org/let_n…
3
81
180
1,838
தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகா அவர்களுக்கு வாக்குப்பதிவுப் பட்டியலில் முதல் எண்ணில் அமைந்திருக்கும் 'விவசாயி' சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் - தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் பரப்புரையில் அண்ணன் செந்தமிழன் சீமான் திரள் நிதி அளிக்க: donate.naamtamilar.org/let_n…
37
76
1,306
இடைத்தேர்தலை சாதாரண நிகழ்வாகக் கருதாமல், தமிழ்நாட்டின் அரசியலில் மாபெரும் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான வரலாற்று வாய்ப்பாக மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் - தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் பரப்புரையில் அண்ணன் செந்தமிழன் சீமான் திரள் நிதி அளிக்க: donate.naamtamilar.org/let_n…
5
55
109
1,639
வருகின்ற தேர்தலை வழக்கமான ஒன்றாகக் கடந்து போகாமல், தமிழ்நாட்டின் தலைவிதியை மாற்றும் வரலாற்று வாய்ப்பாக மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் - தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் பரப்புரையில் அண்ணன் செந்தமிழன் சீமான் திரள் நிதி அளிக்க: donate.naamtamilar.org/let_n…
3
59
128
1,508
கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் நலனிற்காக நாம் தமிழர் கட்சி கொள்கைப் பிரச்சாரத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறது. திரைக்கவர்ச்சி என்பது தற்காலிகமானது, ஆனால் இன எழுச்சி என்பது என்றும் பொங்கக் கூடியது. திரையில் உள்ள முகத்தைப் பார்ப்பதற்காகக் கூடும் கூட்டத்திற்கும், கொள்கைப் பேச்சைக் கேட்பதற்காகத் தானாகத் திரளும் கூட்டத்திற்கும் பெரும் வேறுபாடு உள்ளது. - தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் பரப்புரையில் அண்ணன் செந்தமிழன் சீமான் திரள் நிதி அளிக்க: donate.naamtamilar.org/let_n…
3
59
117
1,401
மாணவர்களுக்குக் கல்வி நிதி உதவி அளிப்பதை விட, கல்வியைத் தரப்படுத்தி அனைவருக்கும் இலவசமாகக் கொடுப்பதே அரசின் முதன்மைக் கடமையாகும். மாணவர்கள் கடன் வாங்கிப் படிக்கும் அவல நிலையை உலகிலேயே எந்த நாடும் அனுமதிப்பதில்லை. - தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் பரப்புரையில் அண்ணன் செந்தமிழன் சீமான் திரள் நிதி அளிக்க: donate.naamtamilar.org/let_n…
37
78
1,298
நாங்கள் திரையில் துப்பாக்கியை ஏந்தி நடித்த போலியான ரீல் ஹீரோக்கள் அல்ல, உலகின் ஆகச்சிறந்த ஆயுதங்களைக் கொண்டு தன் இனத்தின் விடுதலைக்காக உண்மையாகவே களத்தில் நின்று போரிட்ட மாபெரும் வரலாற்று வீரன் தேசியத் தலைவர் பிரபாகரனின் வழிவந்த ரியல் ஹீரோக்கள்! - தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் பரப்புரையில் அண்ணன் செந்தமிழன் சீமான் திரள் நிதி அளிக்க: donate.naamtamilar.org/let_n…
40
73
1,347
ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தாக அனைத்துப் பிள்ளைகளுக்கும் தரமான கல்வியை இலவசமாக வழங்குவேன். கல்வி என்பது அரசின் முதன்மைக் கடமை; ஏழை-பணக்காரர் என்ற பாகுபாடின்றித் தொடக்கப் பள்ளி முதலே உலகத்தரம் வாய்ந்த கல்வியைச் சமமாக அளிப்பதே எங்களது இலட்சியம். - தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் பரப்புரையில் அண்ணன் செந்தமிழன் சீமான் திரள் நிதி அளிக்க: donate.naamtamilar.org/let_n…
8
63
113
1,911
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தண்ணீர் இலவசமாகக் கொடுக்கப்படும், கல்வித் தரம் உயர்த்தப்படும், மணல் மற்றும் மலைகளை வாரி விற்கும் குவாரிகள் அனைத்தும் மூடப்படும். இதனால் தனியார் முதலாளிகளும் குவாரி உரிமையாளர்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் தன்னைத் தோற்கடிக்க முயல்கிறார்கள். - தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் பரப்புரையில் அண்ணன் செந்தமிழன் சீமான் திரள் நிதி அளிக்க: donate.naamtamilar.org/let_n…
8
111
215
2,920
என்னைச் சட்டமன்றம் அனுப்பிப் பாருங்கள்; கேட்கின்ற ஒவ்வொரு கேள்வியும் துப்பாக்கியிலிருந்து வெளியேறும் தோட்டாவைப் போல் இருக்கும்! மு.கார்த்திகா தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் #ntk #seeman #Dharapuram #byelection2026 #சட்டமன்றத்தில்_நாம்தமிழர் @NTK_Dharapuram @Karthika_MCK
67
176
383
5,921