விஜய் அரசியலுக்கு வந்து விட்டார் என்பதற்காக, அவரைப் போலவே திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்து நானும் முதல்வராகிவிடலாம் என்று நினைப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல.
தனுஷ், சிவகார்த்திகேயன், போன்ற இந்த நடிகர்களும் அரசியலுக்குள் வருவதற்கான ஆசை இருக்கலாம். ஆனால் அரசியல் என்பது திரை நட்சத்திர அந்தஸ்தை மட்டும் வைத்து உருவாகிவிடக்கூடிய களம் அல்ல.
விஜய்க்கு உருவாகியுள்ள அரசியல் ஆதரவு, நீண்டகால ரசிகர் வட்டாரம், அவரைச் சுற்றி உருவான அரசியல் எதிர்பார்ப்பு என பல காரணிகள் உள்ளன.
எல்லோரும் விஜயாகிவிட முடியாது.
திரையில் கிடைக்கும் புகழை அரசியலில் மக்கள் ஆதரவாக மாற்றுவது இரு வேறு விஷயங்கள்.
அரசியலில் இறங்குபவர்கள் தங்களுக்கென தனித்த அரசியல் பாதையையும், கொள்கையையும், மக்கள் தொடர்பையும் உருவாக்க வேண்டியிருக்கும் எனவே
விஜய் என்பவர் ஒருவர் தான்