Creation

Egmore Nungambakkam, India
piped.video/VUlkfQgQzP4?si=O294… காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் - நான் கருவான இடம் ! இங்கே படித்த அன்றைய 5 ஆண்டுகள்... சூரியன் தரை தொடத் தயங்கும் அடர்ந்த மரங்களின் நிழல் ஒரு கடும் புயலில் காணாமல் போய் கால் சுட்டதும், ஈசல் போர்டுகள் எதிரே மாடல்களை முன் வைத்து சார்க்கோல் கோடுகள் கிழித்து அவர்களை பேப்பரில் இடம் மாற்றியதும், பழமையான லைப்ரரியும், ஆண்டு தோறும் ஓபன் ஹவுஸ் எக்ஸிபிஷனில் நாம் வரைந்தவற்றை காட்சிப்படுத்தி யாராவது ரசிக்கிறார்களா என வேவு பார்த்ததும், பின்பக்க ரயில் சத்தத்துடன் லஞ்ச் முடித்து கிளாஸ்மேட் நாராயணன் பாடிய எம்ஜியார் பாடல்களும், பெரியமேடு டீகடைகளும்... முத்தாய்ப்பாக டிப்ளமோவை டிகிரியாக மாற்றக்கோரி நான் உட்பட அறுவர் அணி இணைந்து நடத்திய இந்தியாவின் முதல் உள்ளிருப்பு போராட்டம் 15 நாட்களும் , ஏழு மாதம் தொடர்ந்த கல்லூரி கதவடைப்பும், செலவுகளுக்காக 20 மாணவர்களுடன் காந்தி பீச்சில் வருவோர் போவோரை அமர வைத்து 10 ரூபாய்க்கு போர்ட்ரெய்ட் வரைந்து சம்பாதித்ததும், போராட்டம் வெற்றி பெற்று டிகிரி படிப்பாக முற்றிலும் மாற்றி 5 ஆண்டு 4 ஆண்டாக குறைத்ததும் இன்னும் பலவும் நெஞ்சில் நிழலாடுகின்றன ! அந்த உள்ளிருப்பு போராட்டம் ஒரு உள்ளீடாக கேபி சாரின் 'ரயில் சிநேகம்' தொலைக்காட்சி தொடரிலும், என் ' காதல் மன்னன் ' படத்திலும் இடம் பெற்றது. கல்லூரி கால நினைவுகள் பொதுவானவைதான் ஆனால் 175 ஆண்டு கால வரலாற்றுச் சான்றாக நிற்கும் கவின்கலை கல்லூரி கால நினைவுகள் சற்றே ஸ்பெஷல்தானே?! நன்றி ஆர்ட் டைரக்டர் மணிராஜ் - நினைவுகளை கிளறியதற்கு !
3
1
5
446
நம்ம ராஜா சார் ! அவருடைய இசைதான் என்னை ஒரு இயக்குநராக செதுக்கியது! அவர் இசையின்றி என் ஒரு அணுவும் அசைந்ததில்லை... என் பிறவிப்பயன் அவர் இசையை கேட்பதற்கே ! கடவுளைக் காண வேண்டியதில்லை , அவரைக் கேட்டாலே போதும் !
6
22
168
2,782
தமிழ் சினிமாவின் சமீப பெருமைகளில் ஒன்று இந்த 'மொத ராத்திரி' ! சினிமா வெகு ஜனங்களுக்கானது என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிற படம் ! இயக்குநர் ராஜா கருப்பசாமியின் வரவு ஒரு நல்வரவு ! 'கேரக்டர் ஸ்டடி ' என்றால் என்ன என்பதை இந்தப் படம் பார்த்து என்னை அப்டேட் செய்து கொண்டேன்.அற்புதமான படம் , 100% உத்தரவாதம் !
3
31
156
3,647
வேற என்ன வேணும் நமக்கு? சட்ட கிழிய கிழிய தியேட்டருக்குள்ள முண்டியடிக்க , பேரு காட்டும்போது கத்தி கத்தி ரகள செய்ய, ஏகே ஒரு Glimpse ஆ ஸ்கிரீன்ல தெரியும் போது Goosebumps ஆகற Mass Moment தவிர, வேற என்ன வேணும் நமக்கு ? இதாம்லே நம்ம DARE ரேசு... இங்க நாமதாம்லே DEVIL டிரைவரு...! வாழ்த்துகள், 'நல்லா' எடுக்கப் போற டைரக்டருக்கும் 'கல்லா' கட்டப்போற தயாரிப்பாளருக்கும் !
22
231
828
18,262
CLASS OF TITANS ! Not a clash. A league of greatness.
119
551
7,228
தலை அசைத்ததால் கொடி அசைந்ததா... கொடி அசைத்ததால் தலை அசைந்ததா...
1
102
396
8,747
சமீப குயில்கள் ! இந்த முகங்களும் குரல்களும் ஏனோ என் மனதில் என்னையறியாமல் அமைதியை விதைத்துப் போகும்... ஸ்வேதா மோகன் , ராஜா சாரின் முத்துமணி பாடலில் இழைந்து பொருந்திப் போயிருப்பார்! முக்கியமாக அந்த ' தங்கத்துக்கு...' என்ற வார்த்தைப் பிரயோகம்...! ஸ்ரேயா கோஷல் , கொல்கத்தாவில் பிறந்து பாரதமெங்கும் பறந்து திரியும் கான பறவையின் மலையாள ஆல்பம் பாடல் ' கல்யாணி ' !சான்சே இல்லை...! இந்த குரல் ராணிகளின் ஆட்சி தொடரட்டும் !
1
5
18
803
piped.video/rs0gQ-3hbPQ?si=ZTMA… நேபாள துயரத்தில் தோய்ந்திருந்த மனதுக்கு அருமருந்தாக ராகதேவன் இளையராஜாவின் இந்த இசை ! இரைச்சலை சலித்து சலித்து இசையை மட்டும் பிரித்தெடுத்திருக்கிறார் ! படாரென ஆர்ப்பரித்து ஆரம்பிக்கும் அந்த தாளலய இரயிலில் நிலவு தூங்கும் இரவில் நெடுந்தூரம் பயணிக்கும் உணர்வு ! கூடவே ஓடி வரும் ஸ்வேதா மோகனின் தேன் குரலை லாவகமாக கடந்து மேலேறி வரும் இசைராஜாவின் காந்தர்வக் குரல் என் காதுகளைக் கௌரவப் படுத்தி விட்டது ! நன்றி கார்த்திக் சுப்புராஜ் ! 'டோரதி'மேல் பார்க்காமலே காதல் வரவழைத்து விட்டது இந்தப் பாடல் ! பார்த்து விட்டால் ஊரறிய மேளதாளம்தான் ! உங்கள் தாள் பணிகிறேன் இசைஞானி அவர்களே !
2
314
piped.video/DC8b26dO2yQ?si=TZFP… ஜேசன் சஞ்சய் அவர்களின் இந்தப் பேட்டி வெகு சுவாரஸ்யம் ! சில முக பாவனைகளில் சாயல் தெரிவதை ரசித்தேன் . 90 காலகட்டத்தில் நான் 'சிகரம்' படத்தின் உதவி இயக்குநராக பணிபுரிந்த போது திரு.எஸ்ஏசி அவர்களது இல்லம்தான் படப்பிடிப்புத் தளம் . பிளஸ் டூ முடித்திருந்த திரு . விஜய் இருக்கும் அறையில் லைட் வைக்க அவரிடம் இடம் கேட்பேன். அவர்அடுத்த அறைக்குச் செல்வார் , அரை மணியில் அங்கும் போய் காமெரா வைக்க வேண்டும் எனக் கேட்பேன் . தொந்தரவாக இருந்தாலும் இயக்குநரின் மகன் அல்லவா? புரிந்து கொண்டு விட்டுக் கொடுப்பார் . இது முப்பது நாட்களும் தொடர்கதைதான் . அவர் ஹீரோவான பிறகு திரையுலக பார்ட்டிகளில் சந்திப்பேன் ! என் 'ஓ போடு ' படமாக்கப்பட்ட போது அவரது பட ஷாட் இடைவெளிகளில் வந்து இந்தப் படப்பிடிப்பை ரசிப்பார் . 'ஜெமினி' ரிலீஸான போது பெருந்தன்மையோடு நேரில் வந்து பாராட்டினார் .'தலைவா' ஷூட்டிங் மும்பையில் நடந்த போது அவர் தங்கிய ஓட்டலில் நானும் ஒரு வேலையாக தங்கியிருந்தேன் . மாலைகளில் சில நேரம் அவரோடு அரட்டைக் கச்சேரி இருக்கும் . 26 ல் அதே இயல்பான மேனரிஸங்களை ஜேசன் சஞ்சயிடத்திலும் காண்கிறேன் !நிச்சயம் நடிக்க வந்து உயரங்களை எட்டிப் பிடிப்பார் ! ' காதல் மன்னன் ' சமயத்தில் நான் பழகிய திரு.அஜித் அவர்களின் பிராக்டிகல் மனோபாவமும் இவரின் மனோபாவமும் ஒரே மாதிரி எனக்குத் தோன்றுகிறது . இந்த அழகிய தமிழ் மகன் தேர்ந்த இயக்குநராகவும் ,உச்சத்தில் மின்னும் நட்சத்திரமாகவும் மிளிர வாழ்த்துகள் கோடி !
1
28
1,735
நீர் மேல் எழுத்துகள் — சரண் pidil.in/book/69 படைப்பு பதிப்பகம் என் ஹைக்கூ கவிதைகளை புத்தகமாக கொண்டு வந்து இலக்கிய வாசகர்களின் கவனத்தை வெகுவாக பெற்றுக் கொடுத்திருக்கிறது என்பதை மகிழ்வுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் ! ஒரு இயக்குநரின் தேடலுக்கு வானமே எல்லை !
7
18
134
8,292
இன்று ' ராஜ கோபுரங்கள் ' பிரமாண்டமான நிகழ்ச்சி ! திரைப்பட ராஜாங்கம் நடத்திய இரு ராஜாக்களை நெஞ்சில் ஏந்தி கௌரவிக்கும் விழா ! மாண்புமிகு தமிழக முதல்வர் , சூப்பர் ஸ்டார் , உலகநாயகன் என ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே கூடுகிறது ! FLASHBACK 1 இயக்குநர் இமயம் நான் அவருக்காக 'அல்லி அர்ஜுனா ' இயக்கிக் கொண்டிருந்த போது அவரது அறையில் வைத்து ஒரு நாள் 'முதல் மரியாதை' படப்பிடிப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அப்போது நடிகர் திலகம் சிவாஜிகணேசன் தன்னிடம் எப்படி பேசினார் என அவர் நடித்துக் காட்டிய போது ஒரு வினாடிக்குள் என் எதிரே சிம்மக்குரலோனே நேரில் ! உடல்மொழி,பாவனை, குரல் எல்லாம் தத்ரூபமாக ! என்னையே கிள்ளிக் கொண்டு அந்த மாயையில் இருந்து விடுபட்டேன். அதுதான் உண்மைக் கலைஞன்... அதுதான் பாரதிராஜா ... FLASHBACK 2 இரண்டு வருடம் இருக்கும் , ஒருநாள் திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து பேசிக் கொண்டிருந்த போது " சார் ! நீங்கள் முன்னெப்போதோ ஒரு பேட்டியில் ஒரு டைரக்டர்னா படப்பிடிப்பில் பலபேர் பார்க்கிறார்களே என்று டைரக்ட் பண்ற மாதிரி நடிக்கக்கூடாது. உண்மையாவே ஈடுபடணும்னு சொன்னீங்க...அது ஒரு பெரிய இன்ஸ்பிரேஷன் சார் " என்று அவர் கையைப் பற்றிக்கொண்டேன் ! வாஞ்சையுடன் தட்டிக்கொடுத்தார்... 'காதல் மன்னன்' ரிலீஸ் ஆனபோது என்னை போனில் தொடர்பு கொண்டு வாழ்த்தி பேசிய கன்டென்ட்டை வாக்கியம் பிசகாமல் மீண்டும் சொன்னார்.என்ன ஒரு ஞாபகசக்தி! அதுதான் உண்மைக்கலைஞன்... அதுதான் கே.பாக்யராஜ் ... எண்ணமெல்லாம் சென்னையில் வைத்துக் கொண்டு இங்கே மும்பையில் என் திரைப்பட பணி தொடர்பாக இருக்க வேண்டியதாகி விட்டது. விழாவை சிறப்பற நடத்தும் திரையுலக சங்கங்கள் இதில் நிச்சயம் முத்திரை பதிக்கும் ! வாழ்க எங்கள் ராஜாக்களின் புகழ் !
Made with AI
1
10
91
4,287
piped.video/HPoqHfth4Eo?si=Eb8C… தாயின் மணிக்கொடி பாரீர்! - அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்! ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் - அதன் உச்சியின் மேல் வந்தே மாதரம் என்றே பாங்கின் எழுதித் திகழும் - செய்ய பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்! மனதிற்கினிய சுதந்திரதிருநாள் வாழ்த்துகள் !
10
60
1,005
வெய்ட் எ மினிட் ஃபார் ஃபைவ் மினிட்ஸ் மாமூ !
SUN NXT
2
70
282
5,582
SARAN retweeted
27 Years of அமர்க்களம் ❤️ #SunNews | #Amarkkalam | #Ajithkumar | #Shalini
6
225
1,228
16,689
27 வருட வைன் ! இது நகமும் சதையும் செய்த அமர்க்களம் ! நீங்கள் கேட்கும் போதெல்லாம் தியேட்டர்களில் திரையிட துல்லியமான புது டிஜிட்டல் பிரிண்ட் சமீபத்தில் ரீரிலீஸ் பண்ணிய கார்த்திக் அவர்களின் Sparrow Cinemas வசம் இருக்கிறது ! வாழ்த்துகள் AK வைத் தாங்கும் ரசிக நெஞ்சங்களே !
13
304
944
9,267
இதே நாளில் 2004 ல் வெளியான வசூல்ராஜா எம் பி பி எஸ் அசுரவேகத்தில் எடுக்கப்பட்ட படம் .ஜெமினி பிலிம் சர்க்யூட்டுடன் ஒப்பந்தம் கையெழுத்தான நாளிலிருந்து 80 வது நாளில் பொதுமக்கள் பார்வைக்கு திரையரங்குகளில் வந்து விட்டது.எனக்கும் என் டீமுக்கும் தூக்கம் என்பது காரில் பயணிக்கும் நேரம் மட்டுமே வாய்த்தது . கிரேசி மோகன் சார் படப்பிடிப்பு முழுவதும் ஒரு Stress buffer ஆக இருந்தபடியால் வசூல்ராஜா இன்று வரை ரசிகர்களின் Stress buster ஆக விளங்குகிறது. பரத்வாஜ்,கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் அசுர பலம் ! நன்றி , என்னை இயக்குநராக ஏற்றுக்கொண்ட கமல் அவர்களுக்கும் , 'அட்டகாசம் ' பாதி முடிந்திருந்த நிலையில் என்னை விட்டுக்கொடுத்த என் அஜித் அவர்களுக்கும் ! piped.video/G3aN8i0MS1I?si=AdcT… piped.video/t0Mvoo_rook?si=QOPP…
29
149
802
45,520
அமர்க்களம் , பார்த்தேன் ரசித்தேன் , வசூல்ராஜா எம் பி பி எஸ் இந்த மூன்று படங்களுமே என் ஆகஸ்ட் ரிலீஸ் Blockbuster திரைப்படங்கள் !
19
97
555
8,474
இயக்குநர் சிகரம் & மக்கள் திலகம் ! நான் எட்டாவது படிக்கும் போது கோடை விடுமுறைக்கு திருப்பூர் சென்றிருந்த போது காந்தி நகரில் அப்போதிருந்த ராஜா டூரிங் கொட்டாயில் 'நிழல் நிஜமாகிறது ' படத்தை மங்கலாகப் பார்த்தேன். என் கண்ணாடி உடைந்து போய் விட்ட படியால் ( Minus 4.5 ) கமல்ஹாசன் , சுமித்ரா,ஷோபா என அனைவருமே மழுப்பலாகவே தெரிந்தனர். ஆனால் தெளிவாக உணர்ந்தது கே.பாலசந்தர் என்கிற என் எதிர்கால ஆசானை ! அதே போன்ற டூரிங் கொட்டகைகளில் நான் விரும்பிப் பார்த்தவை எம்ஜியார் படங்கள் ! எரால் ஃபிளைன் என்ற எம்ஜியாரின் முக சாயல் கொண்ட அமெரிக்க நடிகரின் படங்களை முன்னுதாரணமாக கொண்ட எம்ஜியார் சாயலை நீங்கள் அஜித் அவர்கள் நடித்த என்னுடைய படங்களில் பார்க்கலாம் . நான் கமர்ஷியல் இயக்குநர் ஆவதற்கு எம்ஜியாரும் ,அஜித்துமே காரணம். கேபி சார் பட்டறைப் பயிற்சி என் கமர்ஷியல் படங்களை வித்தியாசமான கோணத்தில் எடுக்க வைத்தது . அதனால்தான் என் திரைப்படங்களை மசாலா வகையில் சேர்க்க முடிவதில்லை ! என்னை ஆகர்ஷித்த தலையாய ஆளுமைகளை நான் ஆராதிக்கத் தவறுவதுமில்லை !
5
112
444
13,544
piped.video/1ptKgvJcrMw?si=gJXp… கொரோனா ஆரம்ப களேபரத்தில் காணாமல் போன என் 'மார்க்கெட் ராஜா MBBS ‘ படம் Z5 ல் காணக்கிடைக்கிறது. ஆரவ் வின் தேர்ந்த நடிப்பு,ராதிகா மேம் ன் அசால்ட்டான மனோரமா பாணி நடிப்பு,ரோகிணி மேம் ன் உணர்வு பூர்வமான நடிப்பு , பிரதீப் ராவத் , நாசர்,மதன்பாப். ஆதித்யா,ஜாவா சுந்தரேசன் ,காவ்யா தாப்பர் ஆகியோரின் கலக்கல், கிரேஸியின் அடிச்சுவட்டில் காமெடி முலாம் பூசி வந்த படம் ! சைமன் கிங்கின் மாஸ் இசை,என் தம்பி கேவி.குகனின் தரமான ஒளிப்பதிவு , சுரபி பிலிம்ஸ் மோகன் அவர்களின் செலவைப் பார்க்காத தயாரிப்பு என உருவான இந்த மார்க்கெட் ராஜாவை பார்க்கத் தூண்டுகிறதா இந்த காட்சித் தொகுப்பு என பார்க்கலாம் !
3
6
54
5,831