மார்டின் அறக்கட்டளை சார்பில், புதுச்சேரியிலேயே முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ள இலவச UPSC பயிற்சி வகுப்புகளின் தொடக்க விழா புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மேதகு துணைநிலை ஆளுநர் திரு. K. கைலாஷ்நாதன் (IAS, ஓய்வு) அவர்கள் கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி பயிற்சி வகுப்புகளைத் தொடங்கி வைத்து, UPSC பயிற்சிக்கான புத்தகங்களையும் மாணவர்களுக்கு வழங்கினார்.
மேலும், மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் உரையாற்றி, மாணவர்களுக்கு உற்சாகமளித்த மேதகு துணைநிலை ஆளுநர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நிகழ்வில் ACE கல்விக் குழுமத்தின் நிறுவனர் திருமதி. அபிநயா அரவிந்தன், புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் திரு. முத்து, LJK நிர்வாகப் பொதுச்செயலாளர் திரு. ராம்குமார், பொதுச்செயலாளர் டாக்டர் திரு. துரைசாமி, உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
#JCM #LJK #Puducherry #TamilNadu #UPSCTraining