Paradise - இன்று தான் பார்த்தேன்..படம் சுமார் தான். ஆனா திடீர்னு நிசாம் தெலுங்கானா மாநிலம் முழுக்க படம் நல்லாவே ஓடிட்டு இருக்கு. என்னன்னு பார்த்தா படத்தில் KCR கதாபாத்திரம் வருகிறது. தெலங்கானா என்று ஒரு மாநிலம் உருவாக KCR பங்கு பெரிது. எப்படி இந்த படத்தில் ஒரு இனம் அங்கீகாரத்தை நோக்கி இருந்ததோ அதைப்போலவே தெலங்கானா இருந்தது.
1984 NTR கட்சி வரும் வரை ஆந்திராவை ஆண்டது ரெட்டிகள் தான். அந்த ரெட்டிகளை விட பெரும் எண்ணிக்கையில் இருந்தாலும் நாயுடுக்களால் ஒரு தலைவரை உருவாக்க முடியவில்லை. அந்த நேரத்தில் தான் NTR புகுந்தார், வெற்றி பெற்றார். பின்னர் சந்திரபாபு நாயுடு வந்தார், அதற்கு எதிராக YS ராஜசேகர ரெட்டி வந்தார், பின்னர் ஜெகன் ரெட்டி.
இன்றும் ஆந்திரா நாயுடு Vs ரெட்டி தான். சந்திரபாபு நாயுடு Vs ஜெகன் மோகன். காங்கிரஸ் தலைவராக கவிதா ரெட்டி இருக்காங்க, பவன் கல்யாண் காப்பு நாயுடு, NTR மகள் புரந்தேஷ்வரி பிஜேபி என்று நாயுடு VS ரெட்டி தான்.
தெலங்கானாவில் இது வேலமா Vs ரெட்டி, பல நூறு ஆண்டுகளாக பகையில் உள்ள சமூகங்கள் இரண்டும். KCR வேலமா, தற்போதைய முதல்வர் ரேவந்த் ரெட்டி, சொல்லவா வேண்டும். இதுல ஒரு குறிப்பிட்ட விஷயம் என்னன்னா ஆந்திராவில் காங்கிரஸ் கட்சி என்றாலே ரெட்டிகள் என்ற நிலை தான் கடந்த 75 வருடமாக தொடர்கிறது. நடுவுல அஞ்சையா எனும் தலித்தை முதல்வராக ஒரு வருடம் உட்கார வைத்தார்கள் என்று சொல்லுவார்கள், ஆனா அவர் தலித்தே இல்லை, ரெட்டி என்று அவர் பேரன் போராடி கொண்டு இருக்கிறார்.
தெலங்கானாவில் இப்போ தான் காங்கிரஸ் ஜெயிச்சு வந்து இருக்காங்க, ஆனா மீண்டும் ரெட்டி ஆட்சி தான். பாரடைஸ் படத்தில் வரும் அரசியல்வாதி பாத்திரம் அச்சு அசல் KCR ஆக தான் convey செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 3 நாட்களாக அவங்க கட்சிக்காரர்கள் எல்லாரும் active ஆக போயி படத்தை பார்த்து வீடியோ போடுகிறார்கள். இன்றைக்கு KCR மகன் KTR போயி தியேட்டர்ல படம் பார்த்து நன்றி தெரிவித்து இருக்கிறார்.
இதுல நானி பண்ண விஷயம் தான் ஹைலைட். இந்த படத்துக்கு ரேவந்த் ரெட்டிகிட்ட hikeக்கு பெர்மிஷன் வாங்கி நன்றி தெரிவித்து RTC road தியேட்டரில் ரசிகர்களுடன் போயி படம் பார்க்கவா என்று ட்விட்டரில் கேட்டு, பதில் வந்தவுடன் உங்களுக்கு பிரச்னை என்றால் வேண்டாம் என்று வேற PR பண்ணி இருந்தார்.
இப்போதைக்கு negative ரிவ்யூ வந்தாலும் படம் நல்லா ஓடிட்டு இருக்கு. கிட்டதட்ட தெலுங்கானா போராட்டத்தை தெலுங்கானா மக்கள் இந்த படத்துடன் பொருத்திக்கொண்டு பார்ப்பதால் நல்லா போயிட்டு இருக்கு. ஆந்திரா தெலுங்கானா ரெண்டுமே ஒன்று போல தெரியும். ஆனா கலாச்சாரம் என்பதே முழுக்க வேறு. ஒரு சின்ன உதாரணம் சொல்லலாம் என்றால் கல்யாண விருந்து. ஆந்திராவில் கல்யாண விருந்தில் அசைவம் இருக்காது, ஆனா தெலங்கானாவில் மட்டன் இல்லாத கல்யாண விருந்தே இருக்காது.
அதே போல இந்த பாரடைஸ் படமும் தெலங்கானாவில் சிறப்பாகவும், ஆந்திராவில் சுமாராக போயிட்டு இருக்கு. நானி செய்த இன்னொரு புத்திசாலித்தனம் என்னவென்றால் netflix கிட்ட படத்தை விற்று சொன்ன தேதிக்கே ரிலீஸ் செய்துவிட்டால் குறைந்தபட்ச லாஸ் கூட இல்லாமல் தப்பித்துவிட்டார்.
எனக்கு படம் முதல் பாதி ஓகே. இரண்டாம் பகுதி செட் ஆகல..ஆனா மோகன்பாபு screen presence சிறப்பாக இருந்தது, இன்னும் தமிழ் படங்களில் அவரை use பண்ணலாம்.