Official Twitter id of Arappor Iyakkam

Chennai, India
அறப்போர் புகாரில் முன்னாள் அமைச்சர் திரு எவ வேலு மீது பதியப்பட்ட FIR வழக்கில் எவ வேலு மற்றும் அவர் மகன் மீதும் வற்புறுத்தல் நடவடிக்கை (கைது நடவடிக்கை) எடுக்காமல் இருக்க அவர்கள் கோரிய இடைக்கால தடையை தர சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!
BREAKING Justice V. Lakshminarayanan of #MadrasHighCourt refuses to grant an ex-parte interim relief to DMK former Minister E.V. Velu (76) and his son E.V. Kumaran (48) in a case booked against them for allegedly excavating 45,72,058 cubic feet of sand from Malappambadi lake in Tiruvannamalai district for levelling the venue of the party’s north zone youth wing conference held on December 14, 2025. The judge orders notice, returnable by November 6, to DVAC on their plea to quash the FIR registered against them. @THChennai
4
81
361
9,900
கனிம வளத்துறையில் அரசுக்கு ரூ 20000 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்படுத்தும் வகையில் சட்ட விரோத குவாரி மாபியாக்களுக்காக கடந்த திமுக அரசில் தேர்தலுக்கு முன்பாக கொண்டுவரப்பட்ட One Time Regularization திட்டத்தை திரும்ப பெறுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்து இருப்பதை வரவேற்கிறோம். இந்த அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என்று அறப்போர் இயக்கம் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தது. மேலும் அமைச்சர் திரு பிரபு அவர்களை ஜூன் 3 ஆம் தேதி நேரில் சந்தித்து இதை திரும்ப பெறுவதற்கான அவசியம் குறித்து தெரிவித்து மனு வழங்கினோம். அவரும் இதன் மீது ஆலோசிப்பதாக தெரிவித்து இருந்தார். இந்த அரசாணையை திரும்ப பெற வேண்டும் என்று விவசாயிகள் சார்பில் ஏபல் மூர்த்தி மற்றும் சிலர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்து இருந்தனர். அந்த வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது தமிழ்நாடு அரசு இதை திரும்ப பெற முடிவெடுத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த முடிவு சரியானது. விரைவில் அரசாணை திரும்பப் பெற வேண்டும். அடுத்ததாக சட்டவிரோத குவாரி அதிபர்கள் திருடிய கற்களுக்கான அபராதத்தை தொடுத்து அரசு கஜானாவை நிரப்ப வேண்டும் ! மேலும் சட்டவிரோத கல் குவாரி மாபியாக்கள் மீது வழக்குகளும் தொடுக்கப்பட வேண்டும் ! இந்த அரசாணை குறித்து அறப்போர் வெளியிட்டு இருந்த விளக்க வீடியோவை இங்கே பார்க்கலாம் youtu.be/h-508j_ucPE?si=RbA0…
13
259
649
22,881
சாலை உயரம் மக்களின் துயரம்! தமிழ்நாடு முழுவதும் சாலை உயரம் அதிகரிப்பது மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்பு குறித்த நமது அறிக்கையையும், சாலை உயரம் அதிகரிக்க கூடாது என்று கிட்டத்தட்ட 2300 நபர்கள் கையெழுத்திட்ட விவரங்களையும், அரசிடம் இருந்து மக்கள் எதிர்பார்க்கும் உடனடி நடவடிக்கைகள் குறித்தும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் திரு ககன்தீப் சிங்க் பேடி IAS அவர்களை சந்தித்து மனு வழங்கினோம். மேலும் ஊழலை ஒழிக்க டெண்டர் சம்பந்தமான மாற்றங்கள், இணையதள வழி சேவை முறைகள் மற்றும் புகார் வழிமுறைகள் சம்பந்தமாக செய்யவேண்டிய மாற்றங்கள் குறித்தும் மனு வழங்கினோம்! அறப்போரின் சாலை உயரம் சம்பந்தமான அறிக்கையை இங்கே படிக்கலாம் arappor.org/Road-Height-Audi… இனி எந்த ஒரு சாலையின் உயரத்தையும் நாம் அதிகரிக்க விடக்கூடாது. அதற்கான மக்களின் ஒன்றுகூடல் கேளு TN கேளு அக்டோபர் 25ஆம் தேதி சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நடைபெற உள்ளது. சாலை உயரம் அதிகரிப்பதற்கு எதிரான மக்கள் இயக்கத்தில் இணையுங்கள் . இதனால் பாதிக்கப்படும் நாம் ஒவ்வொருவரும் குரல் எழுப்ப வேண்டிய அவசியம் உள்ளது. அக்டோபர் 25ஆம் தேதி வர விரும்புபவர்கள் இங்கே பதிவு செய்யலாம் Registration link: forms.gle/AaDZKVSXrLiksTpKA தேதி : 25.10.2026, Sunday நேரம்: 9.30 AM இடம்: ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே, சென்னை எழும்பூர்
2
31
124
4,279
Kelu TN Kelu changed to Oct 25 from Oct 11! கேளு TN கேளு - சாலையின் உயரத்திற்கு எதிரான மக்களின் ஒன்று கூடல் நிகழ்வு அக்டோபர் 25ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது . Registration link: forms.gle/AaDZKVSXrLiksTpKA தேதி : 25.10.2026, Sunday நேரம்: 9.30 AM இடம்: ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே, சென்னை எழும்பூர். பதிவு செய்யுங்கள் ! நேரில் சந்திப்போம்!
2
23
64
3,513
அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் விவரங்கள் - வெளிப்படைத்தன்மைக்கு அடுத்த கட்டம் Ghost Faculty மற்றும் Paper Faculty போன்ற முறைகேடுகளைத் தடுக்க, அண்ணா பல்கலைக்கழகம் பேராசிரியர் தரவுகளை தனது இணையதளத்தில் வெளியிட வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களின் உண்மையான எண்ணிக்கை, பணிநிலை மற்றும் தகுதி குறித்த விவரங்களை வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்று அறப்போர் இயக்கம் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில், தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் Centre for Affiliation of Institutions புதிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. 30.09.2026 தேதியிட்ட இந்த சுற்றறிக்கையில், அனைத்து இணைப்புக் கல்லூரிகளும் தங்களது துறைவாரியான தற்போதைய பேராசிரியர் விவரங்களை கல்லூரியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 09.10.2026க்குள் வெளியிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதில் AU-FIN, AICTE ID, பேராசிரியர் பெயர் மற்றும் பதவி, புகைப்படம் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற வேண்டும். பணியிலிருந்து விலகிய பேராசிரியர்களின் விவரங்களை பதிவிலிருந்து நீக்கி, அதனை CAI-க்கு தெரிவிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க ஒரு வெளிப்படைத்தன்மை நடவடிக்கை. ஆனால் இத்துடன் நின்றுவிடக் கூடாது. கல்லூரிகள் வெளியிடும் தகவல்கள் உண்மையானவையா என்பதை உறுதிப்படுத்தும் பொறுப்பு அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் உள்ளது.மேலும் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் தரவுகளை உறுதி செய்யும் பொருட்டு, பல்கலைக்கழக மேற்கொண்ட இணைவு ஆய்வு தரவுகளை வழக்கம் போல பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிட வேண்டும். @CMOTamilnadu @TVKVijayHQ @Viswanathan_INC #AnnaUniversity #FacultyTransparency #GhostFaculty #ArapporIyakkam #Transparency #FacultyData
2
53
133
5,576
ஒரு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் நடைபெறும் முறைகேடு என்பது, ஒரு கல்லூரியின் பிரச்சினை மட்டுமல்ல; ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கக்கூடிய பிரச்சினை! ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள்தான் நாளைய ஆசிரியர்கள். அவர்கள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்கப்பட உள்ளது. அப்படிப்பட்ட ஆசிரியர்களை உருவாக்கும் கல்வி நிறுவனங்களின் தரம், ஆசிரியர்களின் தகுதி, கற்பித்தல் பயிற்சி ஆகியவற்றில் எந்தவிதமான சமரசமும் இருக்கக் கூடாது. 2023–2025 காலகட்டத்தில், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் இணைவு ஆய்வுகுழு 74 கல்லூரிகளில் நடத்திய மோசடியான ஆய்வு குறித்து விசாரிக்க அறப்போர் இயக்கம் புகார் அளித்துள்ளது. ஒரே நாளில் பல கல்லூரிகளில் ஆய்வு செய்ததாகப் பதிவுகள் இருப்பது உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்கள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். ஆசிரியர்களை உருவாக்கும் நிறுவனங்களிலேயே விதிமீறல்கள் இருந்தால், தரமான கல்வியை எப்படி உறுதி செய்வது? 🔴 முன்னாள் பதிவாளர்கள், இந்நாள் பதிவாளர், பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக் குழு மற்றும் தொடர்புடைய கல்லூரி நிர்வாகங்களின் பங்கு உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் பாரபட்சமற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். 🔴 74 கல்லூரிகளிலும் உரிய விதிமுறைகளின்படி நேரடி ஆய்வு நடத்தப்பட வேண்டும். 🔴 முறைகேடுகள் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 🔴 இன்று வரை அங்கீகாரம் பெற்ற தனியார் கல்லூரிகளின் பேராசிரியர்களின் முழு விவரங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிட வேண்டும். @CMOTamilnadu @Viswanathan_INC @TVKVijayHQ இது அறப்போர் இயக்கத்தின் கோரிக்கை மட்டுமல்ல; தரமான கல்வியையும், மாணவர்களின் எதிர்காலத்தையும் பாதுகாப்பதற்கான பொதுநலக் கோரிக்கை. ஆசிரியர் கல்வியில் தரம் வேண்டும்! இணைவு ஆய்வுகளில் வெளிப்படைத்தன்மை வேண்டும்! குற்றச்சாட்டுகள் மீது சுதந்திரமான விசாரணை வேண்டும்! மோசடியாக நடந்த ஆய்வு பற்றி அறிய : youtube.com/watch?v=XfNa4f60… #ArapporIyakkam #TNTEU #TeacherEducation #EducationTransparency #GhostFaculty
12
81
182
5,373
கேளு TN கேளு Registration link: forms.gle/AaDZKVSXrLiksTpKA தேதி : 11.10.2026, Sunday நேரம்: 9.30 AM இடம்: ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே, சென்னை எழும்பூர். பதிவு செய்யுங்கள் ! நேரில் சந்திப்போம்!
8
59
176
5,516
முதலமைச்சர் விஜய் அவர்கள் தன் கட்சிக்காரர்கள் பேனர் வைக்கக்கூடாது என்பதை பலமுறை பொதுவெளியிலும் ஊக்கட்சி கூட்டங்களிலும் சொல்ல வேண்டியது அவசியம். மேலும் காவல்துறையும் உள்ளாட்சி நிர்வாகங்களும் அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் ஆணை இடவேண்டும். அப்படி எதுவும் செய்யாமல் காரில் போகும்போது பிரமாண்ட பேனரை பார்த்து ரசித்துக்கொண்டே சென்றார் என்றால் சுபஸ்ரீ , ரகுவை போல மேலும் பல உயிர்கள் பலியாகும். இந்த மனநிலை இருக்குமே ஆனால் அது தமிழ்நாட்டிற்கு ஆபத்தானது. தமிழ்நாடு காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு எதற்கு எங்கள் வரிப்பணத்தில் சம்பளம்?. TVK கட்சியில் சேர்ந்து அங்கு வேலை பார்த்து உங்கள் சம்பளத்தை வாங்கிக் கொள்ளுங்கள்! @TVKVijayHQ @chennaicorp @tnpoliceoffl
வீட்டுக்கு எதிரே அபாய பேனர்; கண்டிப்பாரா CM விஜய்? #VikatanReels
21
123
296
18,641
இயற்பியல் விதியை மிஞ்சிய ஆய்வாளர்கள்: பதிவாளர் Dr.K.இராஜசேகரன் அவர்கள் 28.03.2023 அன்று ஒரே நாளில் 3 தனியார் கல்லூரிகளுக்கு ஆய்வு, அதே நாளில் அவரது ஆய்வுக்குழு உறுப்பினர் Dr.A.R.S.Kannan அவர்கள் இரண்டு கல்லூரிகளுக்கு ஆய்வு. சுமார் 560 கிமீ இடையிலான கல்லூரிகளை எப்படி இருவரும் ஒரே நாளில் வேறு வேறு திசையில், வேறு வேறு தொலைவில் இருக்கும் கல்லூரிகளில் ஆய்வு செய்தனர்? ஆண்டாண்டு காலமாக தனியார் கல்லூரிகளுக்கு நலன் பயக்க வெறும் கண் துடைப்பு ஆய்வுகளை மேற்கொள்ளும் பல்கலைக்கழக நிர்வாகம் மோசடியாக நடந்த ஆய்வு பற்றி அறிய : youtube.com/watch?v=XfNa4f60…
17
245
525
21,112
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் (TNTEU), 74 தனியார் கல்லூரிகளுக்கு 2023 - 2025 காலகட்டத்தில் வழங்கிய இணைவு அங்கீகாரத்தில் மோசடி தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் (TNTEU) 2023–24 மற்றும் 2024–25 கல்வியாண்டுகளுக்கான தனியார் ஆசிரியர் கல்விக் கல்லூரிகளின் இணைவு ஆய்வுப் மேற்கொண்டதில் கடுமையான மோசடி இருப்பதாக, RTI இல் தகவல் கிடைத்துள்ளது. இயற்பியல் விதியை மிஞ்சி - ஒரே நாளில் 5 கல்லூரிகளில் ஆய்வு செய்ததாகப் பதிவு! 29.03.2023 அன்று Dr.M.Rajakumar - ஆய்வுக்குழுத் தலைவர், A)Sri Ramakrishna College of Education,பெரம்பலூர், B)E.S.Subramaniain Memorial College of Education,திருவள்ளூர் C)TVM College of Education,திருவள்ளூர் D)Punitha Ohm College of Education,தூத்துக்குடி E)Institute of Education,திருச்சி ஆகிய ஐந்து கல்லூரிகளுக்கு நேரில் ஆய்வு மேற்கொண்டதாக பல்கலைக்கழகப் பதிவுகள் தெரிவிக்கின்றன. இக்கல்லூரிகளுக்கு இடையிலான பயணத் தூரம் சுமார் 560 கி.மீ. இருக்க்கிறது. பயண நேரம் சுமார் 11மணி நேரம் ஆகும் நிலையில் ஒரே நாளில் ஆய்வு எப்படி சாத்தியம்?. இது போன்று 27 நபர்கள் ஒரே நாளில் 2 முதல் 5 கல்லூரிகள் வரை ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இவர்கள் மொத்தமாக 64 கல்லூரிகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.   மேலும், ஒரே பெயர் மற்றும் பெயரின் முதல் எழுத்துகளைக் கொண்ட 37 பேராசிரியர், பல்கலைக்கழகத்தின் அங்கீகரித்த பேராசிரியர் பட்டியலில் 222 இடங்களில் கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. இவைகள் போலி பேராசிரியர்களாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அது போன்று 5 பேராசிரியர்களை, 10 கல்லூரிகளில் முதல்வராக அதாவது, ஒரு பேராசிரியரை, ஒரே நேரத்தில் இரு கல்லூரிகளில், கல்லூரி முதல்வராக அங்கீகாரம் செய்துள்ளனர். இந்த மோசடிகளின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகள் மீது குற்றவியல் நடவடிக்கை மற்றும் சட்டநடவடிக்கை மேற்கொள்ள கோரி இன்றைய தினம் அறப்போர் இயக்கம், உரிய ஆதாரங்களுடன் முதலமைச்சர் திரு.C.ஜோசப் விஜய், ஆளுநர் திரு.இராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், உயர்கல்வித்துறை அமைச்சர்,திரு.P.விஸ்வநாதன், செயலாளர் திரு. தீரஜ் குமார், இ.ஆ.ப., திரு. பேராசிரியர் பங்கஜ் அரோரா - Chairman, NCTE, Delhi  மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்கள் ஆகியோருக்கு அனுப்பியுள்ளது. @CMOTamilnadu @Viswanathan_INC
12
180
354
10,209
கடந்த ஆட்சியில் நடந்த பல்கலைக்கழக இணைவு அங்கீகார மோசடி! எந்த பல்கலைக்கழகம் இதை செய்தது ? எப்படி செய்தது ? நாளை அறப்போர் புகார் ! இனியாவது மாறுமா ?
1
35
106
4,193
கேளு TN கேளு வாருங்கள் ஒன்றுகூடுவோம் அக்டோபர் 11, 2026 ஞாயிறு காலை 9.30 மணிக்கு சாலை மேலே சாலை போட்டு, வீடுகள் கீழே போய், மழை வெள்ளம் வீட்டுக்குள் நுழையும் அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்! இனி ஒரு சாலையின் உயரமும் அதிகரிக்காமல் இருக்க, மக்கள் சொல்வதை காது கொடுத்து கேட்க தமிழ்நாடு அரசுக்கு அழுத்தம் கொடுக்க வாருங்கள் கேளு தமிழ்நாடு கேளு நிகழ்விற்கு ! தமிழ்நாட்டில் சாலை உயரத்தால் பாதிக்கப்படும் உங்கள் ஒவ்வொருவரையும் அறப்போர் இயக்கம் இந்த நிகழ்விற்கு அழைக்கிறது. ஒன்று சேர்வோம் ! குரல் கொடுப்போம் ! இன்றே பதிவு செய்யுங்கள் ! Registration link: forms.gle/AaDZKVSXrLiksTpKA தேதி : 11.10.2026, Sunday நேரம்: 9.30 AM இடம்: ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே, சென்னை எழும்பூர். பதிவு செய்யுங்கள் ! நேரில் சந்திப்போம்!
2
91
267
4,727
அறப்போர் புகாரில் முன்னாள் அமைச்சர் எ வ வேலு மீது 45 லட்சம் கன அடி மண் திருட்டு மற்றும் ஊழல் வழக்கு லஞ்சஒழிப்பு துறையால் பதிவு செய்யப்பட்டு உள்ளது. FIR சொல்வது என்ன ? அறப்போர் தொடரும் !
18
127
379
10,609
ரூ 10000 லஞ்சம் கொடுத்தால் தான் பிணத்தை புதைப்போம் ! கண்ணகி நகரின் இந்த நிலை மாறுமா ? வாழும்போது தான் கண்ணியம் இல்லை என்று பார்த்தால் இறப்பிலும் கண்ணியம் இல்லை துரைப்பாக்கம் கண்ணகி நகர் எழில் நகர் மக்களுக்கு. அரசின் இலவச மயானம் மக்களுக்கு இலவசமாக கிடைக்கவில்லை. தொடர்ந்து மக்கள் புகார் எழுப்பியும் எந்த ஒரு பயனும் இருப்பதாகத் தெரியவில்லை. புகார் அளிப்பது மட்டுமே தீர்வு என்று ஏன் மாநகராட்சி அதிகாரி கூறுகிறார். அவர்கள் லஞ்சம் கேட்காமல் இருப்பதை ஏன் அவர் உறுதி செய்வேன் என்று கூற மறுக்கிறார்! புகார் அளிப்பவர்கள் பாதுகாப்பாக உணர்வார்களா? பெரிய பலகை வைத்து இலவச சேவை என்று அனைவருக்கும் தெரியப் படுத்துவது மாநகராட்சியின் கடமை. MLA saravanan இதை உறுதி செய்வாரா!! @CMOTamilnadu இது போன்ற தவறுகள் தமிழகத்தில் எங்கும் நடக்காமல் இருப்பதை உங்களால் உறுதி செய்ய முடியுமா? @TNUHDB_Official @chennaicorp dtnext.in/news/chennai/expen…
5
112
192
6,291
அறப்போர் இயக்கத்தின் கேள்வி எதிரொலி : மாதாந்திர இணையவழி - ஆதார் வருகை பதிவை மீண்டும் துவங்கியது அண்ணா பல்கலைக்கழகம் தனியார் கல்லூரிகளில் கணக்கு காண்பிக்கப்படும் பேராசிரியர்கள் மோசடி தடுக்க இணையவழியிலான மாதாந்திர - ஆதார் பயோமெட்ரிக் வருகை துவங்கப்பட்டது. இது கடந்த ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் இந்த ஆண்டு ஜனவரி ஆகிய மாதங்கள் மட்டும் இது குறித்த அறிவிப்பு வெளியானது. பிறகு தனியார் கல்லூரிகளின் அழுத்தம் காரணமாக இந்தச் செயல்பாடு முற்றிலும் நின்று போனது. இது முழுமையாக செயல்படுத்தபட்டால் தனியார் கல்லூரிகள், வெறும் பேப்பரில் காண்பித்து வரும் பேராசிரியர்களுக்கு (Paper Faculty) மாதந்தோறும் ரூ3,000/- முதல் ரூ5,000/- வரை கொடுத்து வருகை பதிவு செய்ய வேண்டியதாகிறது. அதை உறுதிபடுத்துவது போல இன்று வரை பயோமெட்ரிக் வருகை சம்மந்தமான நமது RTI இக்கு தகவல் தரப்படவில்லை. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனியார் கல்லூரிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுத்தரவுகள், பணிபுரிவதாக சொல்லப்படும் பேராசிரியர் விவரங்கள் போன்றவையும் இன்று வரை வெளியிடவில்லை. இது போன்றத்தரவுகள் வெளியிடாமல் இருந்தால் தனியார் கல்லூரிகளே பலன் அடையும். பல்கலைக்கழகம் என்பது மாணவர்கள் நலன் சார்ந்து நடைபெற வேண்டியது மிகமிக அவசியம். ஆயிரகணக்கான மாணவர்களின் நலன் கருதி அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் முற்றிலும் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறவேண்டும். @Viswanathan_INC @CMOTamilnadu @TVKVijayHQ அறப்போர் தொடரும்!
9
111
291
13,844
அறப்போர் இயக்கத்தின் புகாரின் மீது DVAC ஆரம்பக்கட்ட உண்மைத்தன்மையை சரிபார்த்துள்ளது . முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு, அவரது மகன் மற்றும் சிலர் தங்கள் சொந்த நிலத்தை நிரப்புவதற்காக மலப்பம்பாடி ஏரியிலிருந்து 45 லட்சம் கன அடி மணலைத் திருடியதாகக் அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை வரவேற்கிறோம். அறப்போர் தொடரும். DVAC has done initial factual verification of Arappor's complaint about the 45 lakh cubic feet sand theft of former Minister EV Velu, his son and others from Malappambadi lake to fill his own land and has registered a FIR against it. We welcome this action. Arappor will continue
18
160
515
9,938
தாம்பரம் மாநகராட்சி ஆணையர் சரண்யா IAS அவர்களே, பாலச்சந்தர் ஐஏஎஸ் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றியதற்கு பிறகு முன் தேதியிட்டு கையெழுத்திட அவருக்கு கோப்புகள் செல்லாமல் இருப்பதை பார்க்க வேண்டியது உங்கள் கடமை! மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்! @Tambaram_Corp @GSBediIAS @imsaranyar
3
96
379
17,728
மலப்பம்பாடி ஏரியில் மண் திருடியதாக அறப்போர் லஞ்ச ஒழிப்புத் துறையில் தொடுத்த புகாரில் முன்னாள் அமைச்சர் எவ வேலு, அவர் மகன் எவ குமரன் மற்றும் பலர் மீது லஞ்ச ஒழிப்பு துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை இங்கே காணலாம்! அறப்போர் தொடரும்!
21
334
1,071
19,484
FIR 5th and 6th page
2
5
21
1,763