இன்னொரு குண்டை போட்டுள்ளது தேர்தல் ஆணையம் . தமிழ்நாடு வரலாறு காணாத மௌனத்தில் !
ECINET, 2026 ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ஒருங்கிணைந்த இணையதளம். வாக்காளர் சேவைகள், வாக்காளர் பட்டியல் நிர்வாகம் மற்றும் தேர்தல் தொடர்பான பணிகளுக்கு ECINET பயன்படுகிறது. முக்கியமாக, தேர்தல் அதிகாரிகள், வாக்காளர் பட்டியல் தொடர்புடைய தரவுகளையும் இதில் மேற்பார்வையிடுவர்.
SNO (State Nodal Officer) என்பவர் ஒரு மாநிலத்தின் ECINET பணிகளை ஒருங்கிணைக்கும் அதிகாரி. SNO, வாக்காளர் பட்டியல் தொடர்பான தரவுகள், விண்ணப்பங்கள், கணக்கெடுப்பு விவரங்கள் போன்றவற்றை அந்த இணையதளம் வழியாகக் கண்காணிக்க முடியும்.
ECINET தொடர்பான சமீபத்திய ஆய்வு ஒன்றில், SNO கணக்கை முடக்கும் வசதி அதில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, மாநில வாரியாக, மாநில அதிகாரிகளின் கணக்குகளை ON/OFF வசதி வழியாக முடக்க முடியும். SNO கணக்கை முடக்கினால், அந்த அதிகாரியால் செயலியை அணுக முடியாது என்று ECINET தளம் எச்சரிக்கை செய்தி காண்பிக்கும். எனவே, அந்த சம்மந்தப்பட்ட அதிகாரியால் ECINET தளத்தை அணுக முடியாது. கணக்கெடுப்புப் படிவ விவரங்களையும் பார்க்க இயலாமல் போகலாம்.
இந்த கட்டுப்பாடு யாரிடம் உள்ளது?
ECINET-ன் மைய நிர்வாக அமைப்பு, அதாவது புதுதில்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தின் IT/தொழில்நுட்பப் பிரிவிடம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
மாநில அளவிலான தேர்தல் அதிகாரிகளின் ECINET பயன்பாடு டெல்லியிலிருந்து கட்டுப்படுத்தப்படுகிறது. இது வாக்காளர் பட்டியல் பணிகளில் மாநில அதிகாரிகளின் கட்டுப்பாட்டைக் குறைக்கக்கூடும்.
26 செப்டம்பர் 2026-இல் நடந்த கூட்டத்தில், ECINET சட்டங்கள் மற்றும் விதிகளுக்கு உட்பட்டு செயல்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய IIT/IIIT நிபுணர் அடங்கிய குழுவை அமைத்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் தான் இந்த தனிப்பட்ட ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
EVM-இல் முறைகேடு குற்றச்சாட்டு, SIR வழியாக வாக்காளர்கள் நீக்கப்பட்ட குற்றச்சாட்டு, தேர்தல் ஆணைய அதிகாரிகளின் முரண்பட்ட நிலைப்பாடு, தற்போது ECINET-இல் மாநிலங்களின் அதிகாரங்களை முடக்குவதற்கான தொழில்நுட்ப வசதி…
ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள, ஜனநாயகத்தை முடக்க இந்த ஆளும் பாஜக இன்னும் என்னென்ன தான் செய்யும்!