தலைவர், பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய நலவாழ்வுத்துறை மேனாள் அமைச்சர். President-PMK, Former Union Minister for Health.

Chennai, India
ஆயுத பூசை, சரஸ்வதி பூசை வாழ்த்துகள்! உழைப்புக்கும், உயர்வுக்கும் துணை நிற்கும் கருவிகளுக்கு மரியாதை செலுத்தும் ஆயுத பூசை, கல்வி  மற்றும் கலைகளைத் தொடங்குவதற்கு உகந்த நாளாகக் கருதப்படும் சரஸ்வதி பூசை ஆகியவை இன்றும், நாளையும் கொண்டாடப்படும் நிலையில், அவற்றைக் கொண்டாடும் அனைத்துத்  தரப்பு மக்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உழைப்பையும், தொழிலையும் கொண்டாடுவதுடன் அதற்கு உறுதுணையாக இருக்கும் கருவிகளுக்கு நன்றி செலுத்துவது தமிழர்களின் தனிப்பண்பு. அதேபோல், கல்வியே அழிக்க முடியாத செல்வம்; அதுவே வாழ்வில் ஏற்றத்தை வழங்கும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கைக் கொண்டவர்கள் தமிழ்நாட்டு மக்கள். ஆயுதபூசையும், சரஸ்வதி பூசையும் கொண்டாப்படும் இந்த நாள்களில், தமிழ்நாட்டில் கல்வி, தொழில், வேலைவாய்ப்பு ஆகியவை அனைவருக்கும் வசமாக வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன். #ayudhapooja | #saraswatipuja
1
24
97
2,499
மனிதநேய மக்கள் கட்சி மற்றும் அதன் தாய் அமைப்பான தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைந்த தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பேராசிரியர் முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா அவர்களுக்கும், அந்த அமைப்புகளின் மற்ற நிர்வாகிகளுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இஸ்லாமிய மக்களின் சமூக நீதி, சமத்துவம், முன்னேற்றம், ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் நல்லிணக்கம் ஆகியவற்றுக்கான பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற எனது வாழ்த்துகள்.
1
19
79
7,766
I have never witnessed weather conditions like these before. What we are experiencing is a stark reminder that climate change is real, and its effects can no longer be ignored. With climate change and climate phenomena such as El Niño influencing weather patterns, we must remain alert, take scientific warnings seriously, and strengthen our preparedness for extreme weather events. When I filmed this video last night, I felt nature is sending us a warning. We must listen, act responsibly, and protect our people and our planet. #ClimateChange #ElNiño #ClimateAction #EnvironmentalAwareness
37
98
608
59,198
Cloudbursts May Become Frequent in Chennai: Thirupugazh Committee Report Must Be Released and Flood-Prevention Measures Strengthened! In the 24-hour period ending at 8.30 a.m. today, Chennai recorded extremely heavy rainfall, with Parrys receiving the highest rainfall of 36.34 cm. Kathivakkam recorded 34.44 cm, Chennai Central 27.45 cm, Tiruvottiyur 22.41 cm and Ennore 21.58 cm. It is noteworthy that several parts of Chennai received rainfall of an intensity comparable to a cloudburst. Apart from the extremely heavy rainfall recorded across Chennai, Kathivakkam received nearly 15 cm of rain in a single hour, while Meenambakkam and Sathangadu received more than 10 cm in an hour. Parrys, Tiruvottiyur, Ennore and Kargil Nagar also recorded rainfall just short of 10 cm in an hour. Therefore, the torrential rainfall in Chennai, resembling a cloudburst, is by no means surprising. For more than five years, the Pattali Makkal Katchi (PMK) has been warning that climate change could lead to cloudburst-like situations in Chennai and that the city's flood-prevention and stormwater drainage infrastructure must be strengthened to deal with them. Yesterday's rainfall has only reinforced this warning. There is also a risk of the situation worsening this year due to the impact of El Niño. Taking these factors into consideration, the government must intensify flood-prevention measures. The rain that lashed Chennai last night has caused flooding in several parts of the city. There is a possibility that Chennai could receive even heavier rainfall in the coming days than what it experienced yesterday. Climate change, which is threatening the world, could cause impacts beyond anyone's imagination. Keeping this in mind, it is the government's responsibility to undertake comprehensive flood-prevention measures. Among the recommendations submitted to the Tamil Nadu Government for flood prevention in Chennai, the recommendations made by the committee headed by disaster-management expert Thirupugazh are particularly important. The Thirupugazh Committee, constituted in November 2021, conducted various field studies and analysed the data collected from them for a total of 17 months, up to March 2023, before submitting its final report in March 2023. However, even after 43 months, the report has still not been made public. The previous DMK government had stated that the Thirupugazh Committee's report contained a total of 161 recommendations and that 101 of them were being implemented. However, no one knows what those 161 recommendations were or which 101 recommendations had actually been implemented. Even after the DMK government was replaced by the TVK government, the same situation continues. Chennai must not be allowed to be submerged by floods once again. Considering both the increasing possibility of cloudburst-like rainfall in Chennai and the need to prepare for heavier rainfall in the future, the government must take all necessary precautionary measures. The government must release the Thirupugazh Committee's report and, based on its recommendations, strengthen Chennai's flood-prevention and stormwater drainage infrastructure. @CMOTamilnadu
6
42
107
19,637
சென்னையில் மேக வெடிப்புகள் அதிகரிக்கலாம்: திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிட்டு வெள்ளத்தடுப்பு பணிகளை மேம்படுத்த வேண்டும்! சென்னையில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் மட்டும் அதிகபட்சமாக பாரிமுனையில் 36.34 செ.மீ மழை பெய்திருக்கிறது. கத்திவாக்கத்தில் 34.44 செ.மீ, சென்னை சென்ட்ரலில் 27.45 செ.மீ, திருவொற்றியூரில் 22.41 செ.மீ, எண்ணூரில் 21.58 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னையின் பல இடங்களில் மேக வெடிப்புக்கு இணையான அளவில் மழை பெய்திருப்பது குறிப்பிடத்த்தக்கது. சென்னையில் அதிக அளவில் மழை பெய்தது ஒரு புறமிருக்க, கத்திவாக்கத்தில் ஒரு மணி நேரத்தில் 15 செ.மீ அளவுக்கும், மீனம்பாக்கம்ம், சாத்தங்காடு ஆகிய இடங்களில் ஒரு மணி நேரத்தில் 10 செ.மீட்டருக்கும் கூடுதலாகவும், பாரிமுனை, திருவொற்றியூர், எண்ணூர், கார்கில் நகர் ஆகிய இடங்களில் 10 செ.மீக்கு சற்று குறைவான அளவிலும் மழை பெய்திருக்கிறது. மேக வெடிப்பு ஏற்பட்டதைப் போல சென்னையில் மழை கொட்டித் தீர்த்திருப்பது எந்த வகையிலும் ஆச்சரியமளிக்கவில்லை. காலநிலை மாற்றம் காரணமாக சென்னையில் மேக வெடிப்பு போன்ற சூழல்கள் ஏற்படலாம் என்றும், அதை சமாளிக்கும் வகையில் வெள்ளத்தடுப்பு மற்றும் மழைநீர் வடிகால் கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக பாட்டாளி மக்கள் கட்சி எச்சரித்து வருகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில் தான் நேற்றை ய மழைப்பொழிவு அமைந்துள்ளது. நடப்பாண்டில் எல் -நினோ தாக்கமும் இருப்பதால் நிலைமை மோசமடையும் ஆபத்தும் உள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேலும் தீவிரப்படுத்த வேண்டும். சென்னையில் நேற்றிரவு பெய்த மழைக்கு நகரின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. இனிவரும் காலங்களில் நேற்று பெய்ததை விட இன்னும் கூடுதலான மழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் காலநிலை மாற்றம் யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பாதிப்ப்புகளை ஏற்படுத்தக் கூடும். அதை மனதில் கொண்டு வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அரசின் கடமையாகும். சென்னையில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தமிழக அரசுக்கு அளிக்கப்பட்ட பரிந்துரைகளில் மிகவும் முக்கியமானது பேரிடர் மேலாண்மை வல்லுனர் திருப்புகழ் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவால் அரசுக்கு அளிக்கப்பட்ட பரிந்துரைகள் ஆகும்.2021-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமைக்கப்பட்ட திருப்புகழ் குழு, 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை மொத்தம் 17 மாதங்களுக்கு பல்வேறு கள ஆய்வுகளையும், அதில் கிடைத்த தரவுகளின் மீதான பகுப்பாய்வுகளையும் மேற்கொண்டு தான் 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது. ஆனால், அதன்பின் 43 மாதங்களாகியும் அந்த அறிக்கை இப்போது வரை வெளியிடப்படவில்லை. திருப்புகழ் குழு அறிக்கையில் மொத்தம் 161 பரிந்துரைகள் இடம்பெற்றிருந்ததாகவும், அவற்றில் 101 செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் முந்தைய திமுக ஆட்சியில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அறிக்கையில் இடம்பெற்றிருந்த 161 பரிந்துரைகள் என்னென்ன? செயல்படுத்தப்பட்ட 101 பரிந்துரைகள் என்னவென்ன? என்பது யாருக்கும் தெரியவில்லை. திமுக ஆட்சி முடிந்து தவெக ஆட்சிக்கு வந்த பிறகும் அதே நிலை தான் தொடர்கிறது. சென்னை மாநகரம் இன்னொரு முறை வெள்ளத்தில் மிதக்கக் கூடாது. இதையும், சென்னையில் மேக வெடிப்பு போன்ற நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதையும் கருத்தில் கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். திருப்புகழ் குழுவின் அறிக்கையை வெளியிட்டு அதில் இடம்பெற்றுள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் சென்னையின் வெள்ளத்தடுப்பு மற்றும் மழைநீர் வடிகால் கட்டமைப்புகளை அரசு மேம்படுத்த வேண்டும். @CMOTamilnadu
6
58
161
21,241
புகழ்பெற்ற இசையமைப்பாளர் தேவா மறைவுக்கு இரங்கல். புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளரும், தேனிசைத் தென்றல் என்று போற்றப்பட்டவருமான தேவா உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். தமிழ்த் திரையுலகுக்கு இசையமைப்பாளர் தேவாவின் பங்களிப்பு மிகப்பெரியதாகும். எளிய பின்னணியிலிருந்து வந்த தேவா, தமிழ்த் திரையுலகை இசைஞானி இளையராஜா அவர்களும், இசைப்புயல் ஏ.ஆர்.இரகுமான் அவர்களும் ஆட்சி செய்து கொண்டிருந்த நிலையில், தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்து இசை சாம்ராஜ்யம் நடத்தியவர். தமிழ்த்திரையுலகின் முன்னணி நடிகர்கள் அனைவரின் படங்களுக்கும் இசையமைத்த சிறப்பு தேவாவுக்கு உண்டு. இரஜினிகாந்த், கமலஹாசன், இன்றைய முதலமைச்சர் விஜய், அஜித் உள்ளிட்டோரின் இரசிகர்களால் கொண்டாடப்படும் அவர்களின் பெரும்பாலான பாடல்களுக்கு இசை அமைத்தவர் தேவா. எளிய மக்களின் இசையான கானா இசையை திரையில் அறிமுகம் செய்தவரும் தேவா அவர்கள் தான். சில நாள்களுக்கு முன்பு வரை திரைப்படங்கள், தொலைக்காட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், திடீரென நம்மை விட்டு பிரிந்ததைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கடந்த ஆண்டு கிட்டத்தட்ட இதே காலத்தில் அவரது சகோதரர் சபேஷ் மறைந்தது அவரை மனதளவில் கடுமையாக பாதித்திருந்தது. மிகவும் நல்ல மனிதரான தேவா அவர்களின் மறைவு இசையுலகிற்கு பெரும் இழப்பு ஆகும். தேனிசைத் தென்றல் தேவா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், இசையுலகினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
16
114
687
7,705
மதம் மாறிய மக்களுக்கும் இட ஒதுக்கீட்டு உரிமை நீடிப்பதை உறுதி செய்ய அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தம் வேண்டும்! @CMOTamilnadu
134
30
103
22,346
பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து! பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் @NainarBJP அவர்களின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு எனது உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டு வாழ்ந்து, நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் தொண்டாற்ற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
1
25
97
11,926
Tender for 1,000 Electric Buses Cancelled One Day, Revived the Next: Why Is the Govt Struggling to Make Administrative Decisions? The Tamil Nadu government cancelled the tender invited for the procurement of 1,000 electric buses for the Metropolitan Transport Corporation (MTC) in Chennai last Wednesday, only to revoke the cancellation the very next day and announce that the tendering process would continue. These contradictory decisions reflect the serious indecision prevailing within the Tamil Nadu government on matters of administration. Tenders for the procurement of 1,000 electric buses for the Metropolitan Transport Corporation were invited in March this year. Subsequently, the Tamil Nadu Assembly elections were announced, followed by a change of government, and the deadline for submitting bids was postponed several times. Against this backdrop, the Tamil Nadu government announced on Wednesday, the 14th, that the tender notification was being cancelled for administrative reasons. This triggered considerable confusion. However, the Metropolitan Transport Corporation subsequently stated that the cancellation notice had been issued inadvertently, that it was being withdrawn, and that the tendering process would continue. It is difficult to understand how a tender notification issued by the Tamil Nadu government could be cancelled without the government itself being aware of it. Any government decision must pass through several levels of officials, from section officers to directors and secretaries. An individual official may make a mistake, but how could all the officials involved make the same mistake? Therefore, the confusion surrounding the cancellation of the tender cannot be attributed to the officials. Those responsible for making policy decisions are the ones who must be held accountable. Electric buses are being procured for the Metropolitan Transport Corporation under the Gross Cost Contract (GCC) model adopted by the DMK government in its agreement with the World Bank. The Pattali Makkal Katchi (PMK) strongly opposes this arrangement because it would pave the way for the privatisation of the Metropolitan Transport Corporation. If the government cancelled the tendering process for this very reason, it should have stood firm on its decision instead of reversing it. For a state's development, its government must carefully examine issues, make clear and well-considered decisions, and remain committed to them. Making hasty decisions without adequate deliberation and then reversing them immediately does not strengthen governance. I urge the government to ensure that, from now on, all decisions are taken only after thorough examination and that it remains firm in implementing them. @CMOTamilnadu
8
39
100
14,862
1000 மின்பேருந்துகள் வாங்குவதற்கான டெண்டர் முதல் நாள் ரத்து - அடுத்த நாள் மீண்டும் நடைமுறை: நிர்வாக முடிவுகளை எடுப்பதில் அரசுக்கு தடுமாற்றம் ஏன்? சென்னையில் மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு 1000 மின்சாரப் பேருந்துகளை வாங்குவற்காக கோரப்பட்ட ஒப்பந்தப் புள்ளியை கடந்த புதன்கிழமை ரத்து செய்த தமிழ்நாடு அரசு, அதற்கு அடுத்த நாளே ரத்து அறிவிப்பை ரத்து செய்து ஒப்பந்தப்புள்ளி நடைமுறை தொடரும் என்று அறிவித்துள்ளது. அரசு நிர்வாகம் தொடர்பான விஷயங்களில் தமிழக அரசு பெரும் தடுமாற்றத்தில் இருப்பதையே இந்த முடிவுகள் காட்டுகின்றன. மாநகரப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 1000 மின்சாரப் பேருந்துகளை வாங்குவதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கடந்த மார்ச் மாதம் கோரப்பட்டன. அதன்பின் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, ஆட்சி மாற்றமும் ஏற்பட்ட நிலையில், ஒப்பந்தப் புள்ளிகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு பல முறை ஒத்திவைக்கப்பட்டது இந்த நிலையில் நிர்வாகக் காரணங்களுக்காக ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரும் அறிவிக்கை ரத்து செய்யப்படுவதாக கடந்த 14-ஆம் தேதி புதன் கிழமை தமிழக அரசு அறிவித்தது. அதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், ஒப்பந்தப்புள்ளிகளை ரத்து செய்யும் அறிவிப்பு தவறுதலாக வெளியிடப்பட்டு விட்டதாகவும், அதை திரும்பப்பெற்று ஒப்பந்தப்புள்ளி நடைமுறை தொடருவதாகவும் மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. தமிழக அரசால் வெளியிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளி அரசுக்கே தெரியாமல் எவ்வாறு ரத்து செய்யப்படும் என்பது தெரியவில்லை. அரசின் எந்தவொரு முடிவாக இருந்தாலும் அது பிரிவு அலுவலர் முதல் இயக்குனர்கள்/ செயலாளர்கள் வரையிலான பல்வேறு அதிகாரிகளை கடந்து வர வேண்டும். எவரேனும் ஒருவர் தவறு செய்யலாம்; எல்லா அதிகாரிகளும் எவ்வாறு தவறு செய்ய முடியும்? எனவே, ஒப்பந்தப்புள்ளிகள் ரத்து செய்யப்படுவதில் ஏற்பட்ட குழப்பத்திற்கு அதிகாரிகள் காரணம் அல்ல... கொள்கை முடிவு எடுக்கும் நிலையில் இருப்பவர்கள் தான் காரணம் ஆகும். உலக வங்கியுடன் திமுக அரசு செய்து கொண்ட மொத்த செலவு ஒப்பந்தத்தின் (Gross Cost Contract) அடிப்படையில் தான் மாநகரப் போக்குவரத்துக் கழகங்களுக்கு மின்சாரப் பேருந்துகள் வாங்கப்படுகின்றன. இது மாநகரப் போக்குவரத்துக் கழகத்தை தனியார் மயமாக்கவே வழிவகுக்கும் என்பதால் இதை பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. இதே காரணத்திற்காகத் தான் அரசு இந்த ஒப்பந்தப்புள்ளி நடைமுறையை ரத்து செய்தது என்றால், அதில் உறுதியாக இருந்திருக்க வேண்டும். முடிவை மாற்றிக் கொண்டிருக்கக் கூடாது. ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு அந்த மாநில அரசு நன்கு ஆராய்ந்து தெளிவான முடிவுகளை எடுப்பதும், அதில் உறுதியாக இருப்பதும் அவசியம் ஆகும். அவசரக் கோலம் அள்ளித் தெளித்தது போல முடிவுகளை எடுப்பதும், அதை உடனடியாக மாற்றுவதும் நிர்வாகத்திற்கு வலிமை சேர்க்காது. இனி வரும் காலங்களிலாவது அனைத்து முடிவுகளையும் அரசு ஆராய்ந்து எடுக்க வேண்டும்; அதில் உறுதியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu
6
65
175
32,405
அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளில் அவர் கனவு கண்ட நாட்டை உருவாக்குவதற்கு உறுதியேற்போம்! இன்றைய இளைஞர்களுக்கு மட்டுமின்றி, இனிவரும் தலைமுறையினராலும் போற்றப்படக்கூடிய நாயகனான இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் 95-ஆம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், அவரை நான் வணங்கி மகிழ்கிறேன். இந்தியாவின் முன்னேற்றம் தான் அவரது இலக்காக இருந்தது. அதற்காக இளைஞர்களைத் தயார்ப்படுத்தும் முயற்சிகளில் தான் தனது வாழ்நாளின் கடைசி மூச்சு வரை அவர் ஈடுபட்டிருந்தார். அவர் கனவு கண்ட வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்காக , அவர் வகுத்துத் திட்டப்படி கடுமையாக உழைக்க அவரது பிறந்த நாளில் ஒட்டுமொத்த இந்திய மக்களும் உறுதியேற்போம்.
9
82
404
5,165
பள்ளிக்கரணையில் ஆங்கில செய்தி நிறுவனங்களுக்கு நேர்காணல் அளித்த போது.! #SavePallikaranaiWetland #Pallikaranai #PasumaiThaayagam #PMK
3
28
97
5,844
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நெய்தல் மீட்சி மற்றும் பாதுகாப்பு பணிகள் என்ற பெயரில், உலக வங்கிக் கடன் ரூ.21 கோடி செலவில், 3 கி.மீ நீளத்திற்கு சுற்றுச்சுவர் மற்றும் நடைபாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சதுப்பு நிலத்தை மீட்பதற்கு பதிலாக, அப்பகுதியில் வெள்ளத்தை ஏற்படுத்தி பேரழிவை உருவாக்கும் இத்திட்டம் நடைபெறும் பகுதியை பார்வையிட்டு, செய்தியாளர்களை சந்தித்த போது.! இடம்: சாய் கணேஷ், பள்ளிக்கரணை, சென்னை #SavePallikaranaiWetland #Pallikaranai #PasumaiThaayagam #PMK
11
50
173
8,879
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நெய்தல் மீட்சி மற்றும் பாதுகாப்பு பணிகள் என்ற பெயரில், உலக வங்கிக் கடன் ரூ.21 கோடி செலவில், 3 கி.மீ நீளத்திற்கு சுற்றுச்சுவர் மற்றும் நடைபாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சதுப்பு நிலத்தை மீட்பதற்கு பதிலாக, அப்பகுதியில் வெள்ளத்தை ஏற்படுத்தி பேரழிவை உருவாக்கும் இத்திட்டம் நடைபெறும் பகுதியை பார்வையிட்டு, செய்தியாளர்களை சந்தித்த போது.! இடம்: சாய் கணேஷ், பள்ளிக்கரணை, சென்னை #SavePallikaranaiWetland #Pallikaranai #PasumaiThaayagam #PMK
6
53
232
6,640
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நெய்தல் மீட்சி மற்றும் பாதுகாப்பு பணிகள் என்ற பெயரில், உலக வங்கிக் கடன் ரூ.21 கோடி செலவில், 3 கி.மீ நீளத்திற்கு சுற்றுச்சுவர் மற்றும் நடைபாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சதுப்பு நிலத்தை மீட்பதற்கு பதிலாக, அப்பகுதியில் வெள்ளத்தை ஏற்படுத்தி பேரழிவை உருவாக்கும் இத்திட்டம் நடைபெறும் பகுதியை பார்வையிட்டு, செய்தியாளர்களை சந்தித்த போது.! இடம்: சாய் கணேஷ், பள்ளிக்கரணை, சென்னை #SavePallikaranaiWetland #Pallikaranai #PasumaiThaayagam #PMK
6
31
107
2,603
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நெய்தல் மீட்சி மற்றும் பாதுகாப்பு பணிகள் என்ற பெயரில், உலக வங்கிக் கடன் ரூ.21 கோடி செலவில், 3 கி.மீ நீளத்திற்கு சுற்றுச்சுவர் மற்றும் நடைபாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சதுப்பு நிலத்தை மீட்பதற்கு பதிலாக, அப்பகுதியில் வெள்ளத்தை ஏற்படுத்தி பேரழிவை உருவாக்கும் இத்திட்டம் நடைபெறும் பகுதியை பார்வையிட்டு, செய்தியாளர்களை சந்தித்த போது.! இடம்: சாய் கணேஷ், பள்ளிக்கரணை, சென்னை #SavePallikaranaiWetland #Pallikaranai #PasumaiThaayagam #PMK
1
40
111
4,221
Power Cuts Affect Even the TN Govt Secretariat: War-Footing Measures Needed to Resolve Power Shortages! A power outage at the Tamil Nadu Government Secretariat this morning plunged the office rooms of ministers on the first floor into darkness. Videos of the incident are going viral on social media. It is worrying that power cuts, which have been affecting Tamil Nadu across the state, have now disrupted operations at the Secretariat, the seat of the state government. Unannounced power cuts have continued in Tamil Nadu for more than a month. Power cuts have become so widespread that hardly any area in the state appears to have been spared. The fact that power outages at events attended by ministers have now extended to the Secretariat itself clearly indicates that the situation is worsening. This situation must be rectified immediately. The primary reason for these power cuts is the significant gap between Tamil Nadu’s electricity demand and the availability of power. To address this shortage, the government announced that it would initially procure 2,000 MW of electricity and later increase the procurement to 4,500 MW. Why, then, do power cuts and interruptions continue even after these announcements? Power cuts severely affect people across all sections of society. Therefore, the Tamil Nadu government must take urgent measures on a war footing to find a lasting solution to the ongoing power crisis in the state. @CMOTamilnadu
13
30
78
8,657
தலைமைச் செயலகம் வரை பாதித்த மின்தடை: மின்வெட்டுக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும்! தமிழக அரசு தலைமைச் செயலகத்தின் முதல் தளத்தில் இன்று காலை ஏற்பட்ட மின் தடை காரணமாக அமைச்சர்கள் அலுவலக அறைகள் இருளில் மூழ்கின. இது தொடர்பான காணொலிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. தமிழ்நாடு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள மின்வெட்டு தமிழக அரசின் அதிகார பீடமான தலைமைச் செயலகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது கவலையளிக்கிறது. தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு கடந்த ஒரு மாதத்திற்கும் நீடித்து வருகிறது. மின்வெட்டால் பாதிக்கப்படாத பகுதிகளே இல்லை எனும் அளவுக்கு தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் ஏற்பட்ட மின் தடை இப்போது தலைமை செயலகம் வரை சென்றிருப்பது நிலைமை மோசமடைந்திருப்பதையே காட்டுகிறது. இந்த நிலைமை உடனடியாக சரி செய்யப்பட வேண்டும். தமிழ்நாட்டின் மின் தேவைக்கும், மின்சாரம் கிடைப்பதற்கும் பெரும் இடைவெளி காணப்படுவது தான் மின்வெட்டுக்கு காரணம். இதை சமாளிக்க முதலில் 2000 மெகாவாட்டும், பின்னர் 4500 மெகாவாட்டும் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதாக அரசு தெரிவித்தது. அதன் பிறகும் மின் வெட்டும், மின் தடையும் தொடர்வது ஏன்? மின்வெட்டு அனைத்துத் தரப்பினரையும் கடுமையாக பாதிக்கும் தன்மை கொண்டது. அதனால், தமிழ்நாட்டில் நிலவி வரும் மின்வெட்டுக்கு தீர்வு காண போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். @CMOTamilnadu
15
73
249
10,930
Soaring Prices of Rice and Pulses Severely Affecting People: Govt Must Act Immediately! The price of rice in Tamil Nadu has been rising steadily, with even ordinary varieties used for daily consumption reaching an alarming ₹77 per kilogram. Over the past three months, since July, rice prices have increased by as much as ₹27 per kilogram, while the price of a 26-kg bag has risen by up to ₹700. It is condemnable that, instead of taking measures to control the price rise, the State Food Minister continues to claim that there has been no increase in rice prices. In Tamil Nadu, the price of a 26-kg bag of ordinary parboiled rice, which was ₹1,100 in July, has now risen to ₹1,800. In other words, the price of this variety has increased from ₹42 to ₹70 per kilogram. Similarly, the price of a 26-kg bag of Ponni parboiled rice has risen from ₹1,400 to ₹1,900, while the price of Sona Masuri rice supplied from Andhra Pradesh and Karnataka has increased from ₹1,400 to ₹2,000 per bag. Likewise, in the Virudhunagar wholesale market, the price of a 100-kg bag of tur dal has increased by ₹600, from ₹13,200 to ₹13,800. The price of Nadu Ulundhu (urad dal) was ₹9,100–₹9,200 per 100-kg bag last week, but has risen by ₹1,100 this week to ₹10,200–₹10,400. With retail prices increasing by up to ₹27 per kilogram for rice, ₹6 for tur dal and ₹11 for urad dal, poor and middle-class families are being severely affected. I had already issued statements on July 22 and September 27, urging the Tamil Nadu Government to take steps to control the rising price of rice. However, the State Government has taken no effective action to bring down rice prices. Instead, the Food Minister has claimed that the Government is monitoring the prices of 11 essential commodities, that rice prices have not increased at all, and that the reported price rise is merely a false narrative created by the Opposition. At a time when people are suffering severely because rice prices have increased by as much as ₹27 per kilogram, claiming that there has been no increase in rice prices is highly irresponsible and dangerous. The Government must abandon this negligent approach and immediately take effective measures to control the prices of essential commodities, including rice and pulses, in order to protect the people from further hardship. @CMOTamilnadu
8
37
86
10,823