Radio Show Producer & Presenter (ATBC Australia ) | Blogger | Vlogger

New South Wales, Australia
“இங்கே notes வாசிக்கும் போது கூட வருபவர்களையும் கேட்போம், எங்களோட notes ஐத் தாண்டி வாசிக்கும் போது, வேற ஒரு magic நடக்கும், அங்கே செல்லோ வாசிக்கிறார், நாங்க வயலின் வாசிக்கிறோம், அங்கே ஓடுறாங்க பாருங்க Drums, அந்தத் தம்பி பாடுறார், பின்னாடி மணி Band வாசிக்கிறார். இதெல்லாம் கேட்கும் போது ஒரு magic நடக்கும்” “ராக்கம்மா கையத்தட்டு” சூப்பர் சிங்கரில் Chennai Strings Orchestra வயலின் விற்பன்னர் இசைஞானியின் இசை இழைகள் ❤️❤️❤️
5
17
757
முதற் பாடல் என்பது தவறு இதற்கு முன் மாட்டுக்கார மன்னாரு
#WATCH | "தேவாவின் முதல் பாடல் இதுதான்.." மறைந்த இசையமைப்பாளர் தேவாவுக்கு கானா பாடல் பாடி அஞ்சலி செலுத்திய பாடகர்கள் #SunNews | #RIPDeva | #GanaSongs
4
776
நெஞ்சமே நெஞ்சமே கொஞ்சியே சொல்லுதே ஆரீரோ…. தஞ்சமே தஞ்சமே சொந்தமாய் வந்ததே ஆராரிரோ…. இசையமைப்பாளர் ஒருவர் இன்னொரு இசையமைப்பாளரிடம் பாடுவது ஒன்றும் புதுமை அல்ல. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா போன்ற ஜாம்பவான்களோடு நீண்டு செல்லும். அந்த இரு சாதனையாளர்களோடு இணைவது பெருமையாகவும் உணர்வார்கள். ஆனால், கங்கை அமரனைப் போலவே ஒரு தோழமை உணர்வோடு நெருங்கி அழைத்துப் பாடக் கேட்டிருப்பார்கள் என்றே தேனிசைத் தென்றல் தேவாவை நினைப்பேன். “உனக்கென்ன குறைச்சல் நீயொரு ராஜா…” என்று வெள்ளி விழா படத்தில் வி.குமார் இசையில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அது போலவே அணுகுவேன் “மாமன்னன்” படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் “மாமன்னன்” படத்தில் தேவா பாடிய “நெஞ்சமே நெஞ்சமே” பாடலைக் கேட்குந்தோறும். ஒரே காலகட்டப் பகுதியில் நடிகர் மணிவண்ணனுக்காக “ஐயா வூடு தெறந்து தான் கிடக்கு” என்று இசைஞானியார் பாடியது போன்ற ஒரு பக்கம், இன்னோர் பக்கம் தேவாவும் அச்சொட்டாகப் பிரதிக் குரலாக “கோகுலத்துக் கண்ணா”, “மனிஷா போலிருப்பாளா” என்று தன் இசையில் பாடியது மட்டுமல்ல, சிற்பி அவர்களின் இசையில் கூட “உதவிக்கு வரலாமா” படத்தில் பாடியிருக்கிறார் அந்தப் பாடல் நீதான் நீதான் youtube.com/watch?v=CTQedBBG… காதல் மன்னன் படத்தில் “மெட்டுத் தேடித் தவிக்குது” மெல்லிசை மன்னர், “திலோத்தமா” பரத்வாஜ், இவர்களோடு “மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா” youtu.be/SrDeTvc-URU?si=cUzl… என்று கவலைப்படாதே சகோதரா என்று அஜித் படத்தில் முன்பே அதே சூழலில் கொடுத்த தேவாவையும் களமிறக்கி இருக்கிறார். இதே காலகட்டத்தில் இயங்கிய ஆதித்யனும் தேவாவுக்கானது என்று சப்பா சப்பா youtu.be/-LRl0i9Dh9M?si=XB5c… பாடலை “கலர் கனவுகள்” படத்துக்காகப் பாட வைத்திருக்கிறார். இங்கே ஒரு சிறப்பு இருக்கிறது, ஒரு காலத்தில் தேவா பக்திப் பாடல்களுக்கு இசையமைத்த சூழலில் அவருக்காகப் பாடிய கே.பி.சுந்தராம்பாளை நினைவுபடுத்தும் கோவை கமலாவும் இணைந்து பாடியுள்ளார். தேவா இசையில் ஹரிஹரன் குரல் தனித்துவமானது. அது குறித்து முழு நீளக் கட்டுரையே வரைந்துள்ளேன். இங்கே ஹரிஹரன், லெஸ்லி, லூயிஸ் கூட்டணியில் மோதி விளையாடு (மோதி விளையாடு) youtube.com/watch?v=ZP6y3F3G… என்று கூட்டணியில் ஒருவராகப் பாடினார். தேவாவின் குரலை வேறு பரிமாணத்தில் கொண்டு போன முக்கியமான பாடல் வரிசை உண்டு. அதில் வாழ் திரைப்படத்துக்காக பிரதீப்குமார் இசையில் இவர் பாடிய Feel Song (வாழ் ) – பிரதீப் குமார் youtube.com/watch?v=FoC2wmBc… பாடலைக் கேட்டுப் பாருங்கள். புதுமையாக இருக்கும். தேவாவை நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஜனரஞ்சகமாக அடையாளப்படுத்தியவர் ஜி.வி.பிரகாஷ்குமார். தெறி படத்துக்காக ஜித்து ஜில்லாடி youtube.com/watch?v=9lkT6Hnw… தெறிக்க விட்டது. பின்னர் கேப்டன் மில்லரிலும் பாட அழைத்தார். இளையராஜா தன் புதல்வர்கள் இசையில் பாடியது போலவே தேவாவும் தன் மகன் ஶ்ரீகாந்த் தேவா இசையில் “வள்ளியம்மா வள்ளியம்மா” youtube.com/watch?v=uH8zHrPv… பாடலை “தீ” படத்துக்காகப் பாடியிருக்கிறார். இளைய தலைமுறை இசையமைப்பாளர்களில் தேவா மீது நேசமும் பாசமும் கொண்டவர் அநிருத். அவரும் மான் கராத்தே படத்தில் Open The Tasmac youtube.com/watch?v=yJehMbu4… பாடலுக்காக இவரை அழைத்தார். கர்ணன் படத்துக்காக சந்தோஷ் நாரயணன் இசையில் மஞ்சனத்தி புராணம் youtube.com/watch?v=OQGRugYy… இன்னொரு முக்கியமான பாடல். இதில் நாட்டுப்புறத் தெம்மாங்குக் குரலாய் ஒலித்திருப்பார். தேவாவுக்கு இன்னொரு அழகான பக்திப் பாட்டு “சாமி குலசாமி” (மூக்குத்தி அம்மன்) – கிரிஷ் கோபாலகிருஷ்ணன் youtube.com/watch?v=w4brafYU… ரஹ்மானுக்கு மெல்லிசை மன்னர் குரலுக்குப் பிரதியீடாக தேவாவை நினைத்திருப்பார் போல, “லால் சலாம்” படத்தில் “அன்பாளனே” என்று மீண்டும் அழைத்தார். மேலும் தமன், கோபி சுந்தர், ஹிப் ஹாப் தமிழா, ஷான் ரால்டன், ஜிப்ரான் என்று நீண்டு செல்கிறது புதுப் புது இசையமைப்பாளர் இசையில் தேவாவின் குரலில் ஒலித்த பாடல்கள். இவ்விதம் நீண்டு செல்லும் பாடகர் தேவா இன்னொருவருக்காகப் பாடிய பாடல்களில் சமீபத்தில் வெளிவந்த ஈழத்துத் திரைப்படம் “போராட்டம்” படத்தில் “சோறு தான் முக்கியம்” youtube.com/watch?v=tFxiDagM… என்ற பாடலைத் துள்ளிசையாக ஈழத்து இசை இளவல் மதீசன் இசை வழங்கப் பாடியிருக்கிறார். இன்றைய கணக்கில் தேவா பாடி திரைக்கு வெளிவந்த இறுதிப் பாடல் இதுதான். ஒரு “கானா” பாடகரை எல்லாவித பரிமாணங்களிலும் அலங்கரித்துப் பாட வைத்திருக்கிறார்கள். அதற்குக் காரணம் அவரது நெகிழ்வுப் போக்கு அவர்தம் குரலிலும் மிளிர்ந்ததே. ❤️❤️❤️ இந்தப் பதிவை இன்று காலை ரயில் பயணத்தில் எழுத வேண்டும் என்று எண்ணிக் கொண்டே இலக்கியாவைப் பள்ளிக்கூடத்துக்கு அழைத்துப் போகும் காரில் ஏறும் போது “நெஞ்சமே நெஞ்சமே” பாடலை முணுமுணுத்தேன். “அப்பா! எனக்கு இந்தப் பாட்டுப் பிடிக்கும் காரில் போகும் போது போடுங்கோ” என்றார் இலக்கியா பிறகென்ன வழி நெடுக நெஞ்சமே…நெஞ்சமே… தான் ❤️❤️❤️ அன்பு தான் வெல்லுமே எந்த நாளும் ஒளி எங்கு போகும் உனை வந்து சேரும் நெஞ்சமே நெஞ்சமே கொஞ்சியே சொல்லுதே ஆரீரோ…❤️ கானா பிரபா 20.10.2026
6
20
114
6,438
நியாயமாகப் பார்த்தால் தேவா இசையமைப்பாளராகி, அடுத்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் நிறைவு கொள்கிறது. இசையமைப்பாளர் சந்திரபோஸ் குடும்பக் கட்டுப்பாட்டு நாடகங்களில் நடிக்கும் போது, அவரோடு தேவாவின் அறிமுகம் அமைகின்றது. போஸஸ் – தேவா இரட்டையரின் மெல்லிசைக் குழு பிறக்கிறது. தென்னிந்தியாவின் “லஷ்மிகாந்த்- பியாரிலால்" என்ற அடைமொழியோடு மேடைக் கச்சேரிகள் மட்டுமல்ல, மேடை நாடகங்கள், வானொலி நாடகங்கள் என்று இருவரும் இசையமைத்துப் புகழீட்டுகிறார்கள். அடுத்த கட்டமாக திரைப்படங்களில் இசையமைப்பாளராக வாய்ப்புத் தேடும் போது, இயக்குநர் வி.சி.குகநாதன் அறிமுகம் கிட்டவும், அவர் ஒன்றல்ல இரண்டு அடுத்தடுத்து வாய்ப்புகளை இருவருக்கும் வழங்குகிறார். அதில் ஒன்று தான் “மதுர கீதம்", இன்னொன்று “மச்சானைப் பார்த்தீங்களா”. இந்த இரண்டு படங்களின் பாடல் மெட்டு உருவாக்கத்தில் (composing) தேவாவும் இணைந்தே பணி புரிந்தார். ஆனால் சந்திரபோஸுக்கோ நடிப்பின் மேல் தீராத ஆசை, அவரை நம்பி எப்படி முழுதாகத் திரைத்துறையில் இறங்குவது என்ற அவ நம்பிக்கையில் தூரதர்ஷனில் சேர்கிறார் தேவா. இது குறித்து அவர் சந்திரபோஸ் பிறந்த நாள் சிறப்பு நிகழ்வில் வழங்கிய பகிர்வைப் பார்க்க youtube.com/watch?v=6Oh0YQpD… தேவா இசையில் சந்திரபோஸ் “தாமரை” படத்துக்காக “அத்திமரம் பூத்ததே” youtube.com/watch?v=lP8iqYfl… பாடலைப் பாடியிருக்கிறார். கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் சந்திரபோஸ் முதலில் (80 களில்) அடுத்து தேவா (90 களில்) என்று இயங்க வைத்தது. ஒளிப்படங்கள் நன்றி : கலைமாமணி சந்திரபோஸ் தளம் கானா பிரபா 19.10.2026
1
39
260
20,196
மனசுக்கேத்த மகராசா படத்தின் தயாரிப்பாளர்களுக்குத் தன் மேல் நம்பிக்கை வராத சூழலில், அங்கே வந்த கவிஞர் வாலி கொடுத்த பாடல், தயாரிப்பாளர்களில் ஒருவரான கெளரி குருக்களைத் திருப்திப்படுத்தியதாகவும், எனவே கவிஞர் வாலியே தன் வாழ்வில் ஒளி விளக்கு ஏற்பட இன்னொரு முக்கிய காரணி என்றும் நெகிழ்ந்திருப்பார் தேனிசைத்தென்றல் தேவா. அந்தப் பாடல் மனசுக்கேத்த மகராசா படத்தில் இடம்பெறவில்லை என்பதுதான் இங்கே கவனிக்க வேண்டியது. இந்தப் படத்தில் புலவர் புலமைப்பித்தனும், திருப்பத்தூரானும் (கவிஞர் காளிதாசன்) தான் பாடல்களை எழுதினார்கள். அப்படியென்றால் அந்தப் பாடலுக்கு என்னாகிற்று. இந்தப் பாடல் "நீலக்குயிலே நீலக்குயிலே" என்ற படத்துக்கு இடம்மாறியது. அந்தப் படமும் வெளிவரவில்லை. இந்தப் படத்துக்காக இசையமைத்த இன்னொரு அருமையான பாட்டு "ராகம் ஒன்று அது சுகமானது". youtube.com/watch?v=0QaJCsol… அப்படியே "பொண்டாட்டி ராஜ்ஜியம்" படத்தில் பின்னர் பயன்பட்டது. இதை அதிகாலை சுபவேளை படத்துக்காகவும் இசையமைத்ததாக அதே இசை நிறுவனம் பதிந்திருக்கிறது அதுவும் வெளிவராத படம் இசையமைப்பாளர் தேவா மேல் தயாரிப்பாளருக்கு நம்பிக்கை எழுவதற்குக் காரணமாக அமைந்த தன்னம்பிக்கை வரிகளோடு அமைந்த பாடல் இதுதான், “ஆரம்பம் நல்லாருக்கு வயலெல்லாம் நெல்லாருக்கு பொதுவாக நேரம் காலம் வாய்ச்சுது வெதச்சது எண்ணம் போல காச்சுது” youtube.com/watch?v=XE_LhCy9…
1
14
68
5,130
இந்த வார சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் டோரதி பின்னணி இசையோடு The Chennai Strings Orchestra கலக்க, கங்கை அமரன் சிறப்பு விருந்தினர் 😍
4
20
1,010
அனிருத் ஐ முதன்முதலில் அடையாளப்படுத்தியதும் சன் டிவி தான்
அனிருத் ❤️ இன்றைய கணக்கில் இந்திய அளவில் மாநிலங்கள் தாண்டிய ஒரு வெற்றிகரமான இசையமைப்பாளர் அனிருத் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஏனெனில் அவருக்குக் கிடைத்த வாய்ப்புகளும் அவற்றை அவர் தக்கவைத்து வெற்றி கண்டதும் கண் முன் கிடக்கும் உதாரணங்கள். இங்கே அவரின் இசையை முன்னோர்களோடோ சமகாலத்தவரோடோ ஒப்பிடுவதைத் தாண்டியது இது. சன் தொலைக்காட்சி ஈராயிரங்களில் “ஊலலல்லா” என்ற பெயரில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை நடுவராக வைத்து அப்போது பள்ளி, கல்லூரி மாணவர்களின் இசைக் குழுக்களிடையே போட்டி நிகழ்த்தியது. Zinx என்ற குழுவோடு அனிருத்தும் வந்தார் சின்னப் பையனாக கீபோர்ட் பிளேயர்களில் ஒருவர் அவர். நடுவர்களில் ஏ.ஆர்.ரஹ்மானின் ஆரம்பகால ஒலி வல்லுநர் H.ஶ்ரீதரும் வந்திருந்தார். அந்தப் போட்டியில் வென்றது அனிருத் குழுவினரின் Zinx தான். அனிருத்துடன் லியோன் ஜேம்ஸ் சக வாத்தியக்காரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் திரையுலகத்தில் மூத்த இயக்குநர் கே.சுப்ரமணியம் அனிருத்தின் கொள்ளுத்தாத்தா, இசை மற்றும் விளம்பரத்துறை ஆளுமை ஏவி.ரமணன் அனிருத்தின் தாத்தா. 20 வருடங்களுக்கு முன்னர் அனிருத் நினைத்திருப்பாரா இதே சன் டிவியின் பிரமாண்ட வெற்றிகளில் தானும் பங்காளி ஆவேன் என்று? இல்லை ஏ.ஆர்.ரஹ்மான் தொடங்கி முக்கிய இசையமைப்பாளர்களின் முக்கிய பாடகக் குரல் ஆவேன் என்று? அனிருத் மெலடி ஏரியாவில் கலக்குவார் என்பதை நாள் முழுக்கக் கேட்டாலும் அலுக்காத “மின் வெட்டு நாளில்”, “நீயும் நானும்” “நீ பார்த்த விழிகள்”, “நான் பிழை” என்று இளையராஜா ரசிகர் நம்மையே அசைத்துப் பார்க்கிறாரே? கானா பிரபா @anirudhofficial @arrahman #AnirudhRavichander #arrahman
2
29
6,952
கண்ணதாசனை அழைத்து வரிகள் எழுதிய தேவா “கண்ணதாசனே கண்ணதாசனே வந்து விடு உன் காதல் கவிதைகளின் வரிகளைக் கொஞ்சம் திருப்பிக் கொடு” இந்தப் பாடல் வந்த நாள் தொட்டு இந்த ஆரம்ப வரிகளில் கண்டிப்பாக இசையமைப்பாளரின் பங்கு இருக்க வேண்டுமென்றே எண்ணிக் கொண்டேன். அதையே சில ஆண்டுகளுக்கு முன் Chai with Chithra பேட்டியில் உறுதி செய்தார் தேனிசைத் தென்றல் தேவா. இயக்குநருக்குத் தான் கொடுத்த மெட்டு ஒன்றும் திருப்திப்படாமல் போகவே, தானே டம்மி வரிகளை இட்டுப் போட்ட பாட்டு இது என்றார். பாடலின் சரணத்தை பாடலாசிரியர் காமகோடியன் எழுதி முடித்தார். “கண்ணதாசனே கண்ணதாசனே வந்து விடு” சமீபத்தில் கூட பாடல் இசை இசைஞானி இளையராஜா என்று ஒரு பண்பலை வானொலி உச்சரிக்கக் கேட்டேன். 😀 “கண்ணதாசனே கண்ணதாசனே வந்து விடு” போலவே தேவாவின் 50 வது படமான சோலையம்மா வில் “ராசா இளையராசா பாட்டுப் படிக்க்கிறேன் கேளு நா மதுரைப் பக்கத்து ஆளு” என்று கங்கை அமரன் & எஸ்.ஜானகியை வைத்து ஒரு அழகிய பாடலைக் கொடுத்தையும் இங்கே நினைவுபடுத்த வேண்டும். “மரிக்கொழுந்து” படம் வருவதற்கு முன்பே பெரிய எதிர்பார்ப்பைக் கிளப்பி விட்ட படம். அந்தக் காலத்தின் அழகு தேவதை ஐஸ்வர்யாவுக்கு முகமெல்லாம் கரி பூசி வித்தியாசப் “படுத்தி” பொம்மை, பேசும் படம் சினிமா இதழ்களில் காட்சிப்படுத்தி எதிர்பார்ப்பை எகிற வைத்திருந்தார்கள். இந்தப் படத்தில் தாய், மகள் என்று இரட்டை வேடம் போட்ட ஐஸ்வர்யாவுக்கு இதுவே அவரின் வாழ்நாளில் பேர் சொல்லும் படமாகவும் இருக்கக் கூடும். இயக்குநர் புதியவன் தன் குரு நாதராக பாரதிராஜாவையும், பார்த்திபனையும் வணங்கி முதல் மரியாதை படத்தின் புல்லாங்குழல் இசையோடே படத்தை ஆரம்பிக்கும் போதே தடுமாற்றம் தட்டுகிறது. இந்தப் படத்தில் ஐஸ்வர்யா, ரமேஷ் அர்விந்த், கவுண்டமணி உட்பட நட்சத்திரப் பட்டாளம் இருந்தாலும் படத்தின் திரைக்கதையோட்டமும், காட்சி வடிவமைப்பும் கை கொடுக்கவில்லை. இன்று வரை படத்தை நினைவில் வைத்திருக்க ஒரே காரணம் தேனிசைத் தென்றல் தேவா கொடுத்த தேனான பாடல்கள் தான். மரிக்கொழுந்து படத்தில் மொத்தம் ஒன்பது பாடல்கள். கவிஞர் வாலி மற்றும் காமகோடியன் பங்கிட்டுக் கொண்டார்கள். இயக்குநர் புதியவன் பாடல் விஷயத்தில் மகா ரசனைக்காரர் போல. கண்ணதாசனே பாடலோடு, எஸ்.ஜானகியின் “என் பாட்டு தான்”, சித்ரா பாடிய “பூங்குயில் நித்தம்”ஆகியவை சம காலத்தில் ஹிட்டடித்தன. தேவா இசையில் அதிசயமாக எஸ்.பி.சைலஜா “எனக்கென்ன குறைச்சல்” என்ற விரகதாபம் சொட்டும் பாடலைப் பாடியிருக்கிறார். அந்தக் காலத்தில் பெரும் புள்ளி படத்தில் “பொன்மகள் வந்தாள்” பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் பாடியது போல இங்கே “துள்ளுவதோ இளமை” பாடலை எஸ்.ஜானகி பாடி ரீமிக்ஸியிருக்கிறார். “தொடத் தொடத் தொடங்கும் பூஜை தான்” அமைதியாக வந்து ஆக்கிரமிக்கும் கிராமியத் தெம்மாங்கு. இன்று வரை தேவா இப்படியொரு குரல் தொனியில் பாடவில்லை என்று அதிசயப்படுமளவுக்கு ஒரு பாட்டு இருக்கிறது. அது “ஆலமரமாம் ஆலமரமாம் ஊருக்குள்ள, ஆசைக் குயிலாம் ஆசைக்குயிலாம் சோகத்துல” என்று அமையும் பாட்டு. ஏனோ பலர் கவனத்தை ஈர்க்கவில்லை இது. ஆரம்பத்தில் தத்தகாரத்தில் தேவா கொடுக்கும் மெட்டுகளைப் புரிந்து கொள்ளாமல் இயக்குநர்கள் சிரமப்படவும், குறிப்பாக மரிக்கொழுந்து படத்தில் ஐந்து மெட்டுப் போட்டும் திருப்தி காணாத இயக்குநருக்காக தேவா கொடுத்த உபரி வரிகள் தான் இந்த "கண்ணதாசனே கண்ணதாசனே வந்து விடு" அதாவது தேவா டம்மி வரிகளை எழுத ஆரம்பிக்கத் தொடக்கி வைத்த பாட்டு. கவியரசு கண்ணதாசன் மறைந்த தினத்தில் தேனிசைத் தென்றல் தேவாவும் மறைந்து விட்டார். 18.10.2026
1
28
144
12,273
உடற்பயிற்சி ஓட்டம் இனிதே நிறைந்தது ❤️🏃‍♂️ 10 km
5
368
இந்தக் கட்டற்ற இணையம் பரந்து விரிந்து விரல் நுனியில் எவ்வளவுக்கு எவ்வளவு பரந்து பட்ட தகவல்களைத் தருகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு பரந்த மனது கொண்டோரை வளர்த்திருக்கிறதா என்றால் இல்லை என்றே வேதனையோடு சொல்ல வேண்டும். தேனிசைத் தென்றல் தேவாவின் இறப்பில், இசைஞானி இளையராஜாவை வம்புக்கு இழுத்து இவரின் வயதை அவரின் வயதோடு ஒப்பிட்டு அபத்தமாகப் பேசுவது, காப்புரிமை “அறிவைக்” காட்டுவது, ஆணவம் பற்றி முற்றும் துறந்த மகான்கள் போலப் பாடமெடுப்பது, இளையராஜாவின் பழைய பேட்டிகளை நோண்டுவது என்று ஒரு பக்கமும், இனி காப்பி எடுக்க ஆளில்லை என்று வக்கிரமாகப் பேசும் கூட்டமுமாக ஒரு பெரிய மனப் பிறழ்வு கொண்ட சமுதாயத்தை இன்னும் இணையம் வெளிச்சம் காட்டுகிறது. படிப்புக்கும், வளர்ப்புக்கும் கூட பண்பும், அறிவும் சம்பந்தமில்லைப் போல. உங்களுக்கெல்லாம் சொல்வது ஒன்றே தான், இந்த மாதிரிச் செய்கைகளை இறந்து போனவரின் ஆன்மா கூட மன்னிக்காது.
3
18
81
2,252
சிட்னியில் காலை இனிதே விடிந்தது
1
980
உன்னருகே நான் இருந்தால் தினம் உன்னருகே நான் இருந்தால் ❤️🙏
1
8
56
860
தேவாவின் பின்னணி இசையை பிரமிப்போடு பார்த்தது "சூரியன்" படத்தில் தான். தேவா இசையமைத்து திரையரங்கில் பார்த்த முதல் படம் என்பதால் இன்னும் கூடுதல் ஆச்சரியத்தையும் அது எழுப்பியது. அதுவரை பட்ஜெட் தயாரிப்பாளர்களின் ஆபத்பாந்தவனாக இருந்தவர் ஒரு பிரமாண்டப் படத்திலும் தன் வித்தையை எப்படிக் காட்டலாம் என்று நிரூபித்தார். அதன் பின்னரும் சிறு முதலீட்டுத் தயாரிப்பாளர்களை அவர் கைவிடவில்லை. சூரியன் பாடல்களில் கூட, பின்னாளில் அவர் நிகழ்த்தியிருந்த பன்முகப் பரிமாணத்தை ஒரே ஆல்பத்தில் கொண்டு வந்திருந்தார், கானா, காதல், சோகம், துள்ளிசை என்று வாலியாரோடு ஒரே அமர்க்களம் இந்தப் பாடப் பாட்டுகள். என் தந்தையின் நினைவில் நான் அடிக்கடி நினைவுபடுத்தும் பாட்டு, இன்று தேவா மறைந்த கணத்தில் இருந்து இந்தப் பாட்டைத்தான் மனசுக்குள் எஸ்பிபி பாடிக் கொண்டிருக்கிறார் மன்னாதி மன்னன்கள் கதை கேட்டுப் பாரு youtube.com/watch?v=-x36o89x… @Dir_Pavithran
4
25
124
5,977
நாம் வாழும் காலத்தில் நாம் நேசிப்பவர்கள் நம் கூடவே இருக்க வேண்டும் என்று எப்போதும் நினைப்பேன். இப்படித் திடீரென்று போய் விட்டாக் நம் எஞ்சிய காலம் இவர்கள் இல்லாத வெறுமையே எஞ்சியிருக்கும். இவர்கள் காலத்தவராகவே பிறந்திருக்கக் கூடாதா, அப்படியென்றால் தானே காலக் கணக்கும் ஒரு சேரப் பயணிக்கும் என்றும் கணக்குப் போடும் மனசு. சிங்கீதம் போல நூறை எட்டும் வரையாவது பயணிக்க வேண்டும் என்று ஒரு நப்பாசையும் எழும். SPB, தேவா இருவருக்கும் பொது இலக்கணம் ஜன ரஞ்சகமாகவே நம்மில் ஒருவராக வாழ்ந்தவர்கள். கமல் சிங்கீதம் மறைவுக்குச் சொன்னது போலத்தான் இவர்களும் இளைஞர்களாகவே மறைந்து விட்டார்கள். அவர்கள் கலை இலக்கணம் கடந்து நம்மில் ஒருவராக இருந்தவர்கள். பேரிழப்பு என்பது வெறும் வார்த்தை அல்ல, வலி!
2
15
78
2,522
தேனிசைத் தென்றல் தேவா 🙏 விண்ணேகினார் 🙏 ஆழ்ந்த இரங்கல்கள் வேதனையும் வெறுமையுமாய் என் மனது
9
9
54
1,420
கவியரசு கண்ணதாசன் வரிகளில் இசைஞானி கொடுத்த தேவன் தந்த வீணை ❤️ பாடல் பிறந்த கதை ✍️ 🎙️ கானா பிரபா கதைக்கிறேன் #sjanaki #spb #Ilaiyaraaja #Kannadasan #kanapraba
15
34
1,213
உடற்பயிற்சி ஓட்டம் இனிதே நிறைந்தது 🩵🏃‍♂️ 10 km
2
396
சிட்னியில் காலை இனிதே விடிந்தது
5
1,000