Press Secretary, Naam Tamilar Katchi || செய்திப்பிரிவு செயலாளர், நாம் தமிழர் கட்சி, Managing Director.

Chennai
Packiarajan.. சே.. retweeted
"திமுக செய்ததையே தவெக செய்கிறது, உண்மையான மாற்று நாங்கள் தான்" மதுராந்தகம் நாம் தமிழர் வேட்பாளர் ஜானகிராமன் நியூஸ் 18க்கு பேட்டி #NaamTamilarKatchi #Madhuranthakam #Janakiraman #NTK #News18TamilNadu
5
316
758
8,007
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! தமிழ்நாட்டில் தற்போது தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளிலும், புதுச்சேரி மாநிலத்தின் தட்டாஞ்சாவடி தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. வழக்கம்போல இந்தத் தேர்தலையும் நாம் தமிழர் கட்சி தனித்துக் களத்தில் எதிர்கொள்கிறது. தேர்தல் களத்தை விட்டு வெளியேறுவது எங்களுடைய அரசியல் அல்ல. தேர்தல் தோல்விகளை நாங்கள் நிரந்தரத் தோல்வியாகப் பார்ப்பதில்லை; தற்காலிகப் பின்னடைவாக மட்டுமே பார்க்கிறோம். எப்போதும்போல எமது மக்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கையும் பற்றும் கொண்டு இம்முறையும் தனித்துக் களத்தில் போட்டியிடுகிறோம். மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் அன்புத்தம்பி கோ.ஜானகிராமன், தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் அன்புத்தங்கை மு.கார்த்திகா, புதுச்சேரி மாநிலத்தின் தட்டாஞ்சாவடி தொகுதியில் அன்புத்தங்கை ச.கார்த்திக் குமாரி ஆகியோர் நாம் தமிழர் கட்சியின் சார்பில் களம் காண்கிறார்கள். எங்களிடம் படை இருக்கிறது; கருத்து இருக்கிறது; களத்தில் நின்று உழைப்பதற்கான வலிமை இருக்கிறது. எல்லாம் இருந்தும் எங்களுக்கிருக்கிற ஒரே பின்னடைவு பொருளாதார வலிமைதான். எப்போதுமே எமது மக்கள்தான் சிறுகச் சிறுக நிதிப் பங்களிப்பை அளித்து எங்களை வலிமைப்படுத்தி, அரசியல் களத்தில் பணியாற்ற வைத்திருக்கிறார்கள். இம்முறையும் எமது மக்கள் அதனைச் செய்ய வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். ஒரு மக்கள் இயக்கத்திற்கு இனமாகவும், பணமாகவும், வளமாகவும், வலிமையாகவும் மக்கள்தான் துணை நிற்க வேண்டும். ஏனெனில், மக்களிடமிருந்தே மக்களுக்காக வந்த அரசியல் இயக்கம்தான் நாம் தமிழர் கட்சி. நாம் தமிழர் என்பது ஒரு கட்சியின் பெயரோ, வெறும் அடையாளமோ அல்ல. அது நாம் பிறந்த பெருமைமிக்க தமிழினத்தின் அடையாளம். ஒரு இனத்தின், நிலத்தின் அரசியல் என்பது மொழி, இனம், கலை, கலாச்சாரம், பண்பாடு, வழிபாடு, நிலம், வளம் ஆகியவற்றைப் பேசாமல் இருக்க முடியாது. இந்நிலத்தில் மொழி என்றும், இனம் என்றும், இனத்தின் நலம் என்றும், நிலம் என்றும், வளம் என்றும் தொடர்ந்து பேசுகின்ற அரசியல் இயக்கமாக நாம் தமிழர் கட்சி களத்தில் நிற்கிறது. எமது மக்கள் பன்னெடுங்காலமாக அனுபவித்து வரும் துன்பங்களையும் துயரங்களையும் எடுத்துப் பேசி, அவற்றிற்கான விடிவையும் முடிவையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பும் கடமையும் எங்களுக்கு இருக்கிறது. இந்தத் தேர்தலை ஒரு சாதாரண இடைத்தேர்தலாக மட்டும் பார்க்க முடியாது. இந்தத் தேர்தல் எதற்காக வந்தது என்பதை மக்கள் ஆழ்ந்து கவனிக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய பதவியை விட்டு விலகுகிறார்கள். அதன் பிறகு வேறொரு கட்சியில், குறிப்பாக ஆளும் கட்சியில் இணைந்து, மீண்டும் அதே சட்டமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுகிறார்கள். அப்படியானால் அவர்களுக்கு மக்களுக்கான சேவை முதன்மையா? அல்லது தங்களுக்கான தேவை முதன்மையா? என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. அதே பதவி! அதே சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பு! ஆனால் கட்சியை மட்டும் மாற்றிக்கொண்டு மீண்டும் அதே பதவிக்குப் போட்டியிடுவது எந்த அளவுக்கு அவசியமானது என்பதை அறிவார்ந்த எமது மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒருவரின் பதவி விலகலால் மீண்டும் ஒரு தேர்தல் மக்கள்மீது திணிக்கப்படுகிறது. அந்தத் தேர்தலை நடத்த பல கோடி ரூபாய் மக்கள் பணம் செலவிடப்படுகிறது. நேரமும் காலமும் செலவாகிறது. அதிகாரிகள் அனைவரும் தேர்தல் பணியில் ஈடுபட வேண்டியுள்ளது. தொடர்புடைய பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளின் இயல்பு நடவடிக்கைகளும் பாதிக்கப்படுகின்றன. மக்கள் பணம் இப்படித் தேவையில்லாமல் செலவிடப்படுவதற்கு காரணமானவர்கள் அதற்குப் பொறுப்பேற்க வேண்டாமா? “ஆளும் கட்சியில் இருந்தால்தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும்” என்று கூறினால், எதிர்க்கட்சி எதற்காக? எதிர்க்கருத்து எதற்காக? ஒரு சட்டமன்றத்திற்குள் எதிர்க்கருத்தே இல்லாமல் போனால் அது எத்தகைய ஜனநாயகம்? மக்கள் மன்றத்திற்குள் மாற்றுக்கருத்தைப் பதிவு செய்ய உறுப்பினர்களே இல்லாமல் அனைவரும் ஆளும் கட்சியிலேயே இருக்க வேண்டும் என்ற நிலை உருவாவது ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல என்பதே எங்களுடைய நிலைப்பாடு. நாம் தமிழர் கட்சி முன்வைக்கின்ற அடிப்படை அரசியல் அமைப்பு மாற்றங்களில் இதுவும் ஒன்று. மக்கள் கொடுத்த பதவியிலிருந்து இடையில் விலகிவிட்டு கட்சி மாறுபவர்களுக்கு 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒருவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்றால், அவருடைய பதவி விலகலால் ஏற்பட்ட இடைத்தேர்தலுக்கான செலவை முதலில் அவரிடமே வசூலிக்க வேண்டும். ஒரு தொகுதியில் இடைத்தேர்தலை நடத்துவதற்கு பல கோடி ரூபாய் செலவாகிறது என்றால், தனிப்பட்ட அரசியல் விருப்பத்தால் அந்தத் தேர்தலை உருவாக்கியவர் அந்தச் செலவுக்குப் பொறுப்பேற்க வேண்டும். மக்கள் பணத்தில் அந்தச் செலவைச் செய்யக்கூடாது. அதன் பிறகே தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுத்தொகையைச் செலுத்த அனுமதிக்கும் விதியை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். அப்படியொரு அமைப்பு மாற்றம் வந்தால், மக்கள் கொடுத்த பதவியை எளிதில் யாரும் தூக்கி எறிய மாட்டார்கள். மக்கள் அளித்த பொறுப்பை மதித்து, அந்தப் பதவியில் இருந்து பணியாற்றுவார்கள். மக்கள் நீண்ட வரிசையில் நின்று, ஒரு நம்பிக்கையோடு வாக்களித்து ஒருவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்கள் கொடுத்த அந்தப் பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு, வேறொரு கட்சியில் சேர்ந்துவிட்டு, மீண்டும் அதே பதவிக்கு வந்து வாக்குக் கேட்பது மக்களின் தீர்ப்பை அவமதிப்பதாகும். “நாங்கள் எங்கு நின்றாலும், எதைச் செய்தாலும் மக்கள் மீண்டும் வாக்களிப்பார்கள்” என்ற மெத்தனப்போக்கோடு மக்களைக் குறைத்து மதிப்பிடுவது ஏற்புடையதல்ல. இந்தக் கருத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும் இந்த இடைத்தேர்தல் களத்தை நாம் தமிழர் கட்சி பயன்படுத்தும். பல கட்சிகளுக்கும் சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக இந்த மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் தொடர்ந்து போராடி வரும் நாம் தமிழர் கட்சிக்குச் சட்டமன்றத்தில் இடம் கிடைக்கவில்லை. மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்காகத் தொடர்ந்து களத்தில் நின்றதால் என் மீது மட்டும் நூற்றுக்கணக்கான வழக்குகள் உள்ளன. எமது பிள்ளைகளும் பல்வேறு வழக்குகளையும் சட்ட நடவடிக்கைகளையும் எதிர்கொண்டிருக்கிறார்கள். கடந்த 15 ஆண்டுகளில் மக்களின் எந்தப் பிரச்சினையையும் நாம் தவிர்த்துவிட்டோம் என்று சொல்ல முடியாது. மக்களோடு மக்களாக மழையிலும், பனியிலும், வெயிலிலும் நின்று, மக்களின் துயரங்களைப் பற்றிப் பேசி, உறக்கத்தைத் தொலைத்து, அவர்களுக்காகப் போராடியிருக்கிறோம். அப்படிப்பட்ட எங்களை இன்று ஆட்சியில் இருப்பவர்கள் “ஜீரோ” என்று சொல்கிறார்கள். ஆனால், இந்த ஜீரோவைப் பார்த்துத்தான் அந்த ஹீரோக்கள் பயப்படுகிறார்கள்! எதுவுமே இல்லாதவர்கள், கட்டுத்தொகையைக்கூட பெற முடியாதவர்கள் என்று எங்களைப் பேசுபவர்கள், நாம் முன்வைத்த அரசியல் இன்று தேவையா, தேவையில்லையா என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம் பேசிய அரசியலின் தேவை இன்று மக்களுக்குப் புரிகிறது! குடிப்பதற்குத் தூய நீர் இல்லை. உணவு நஞ்சாகிறது. தூய காற்றைச் சுவாசிக்க முடியாத நிலை உருவாகிறது. புவி வெப்பமடைகிறது. பருவநிலை மாறுகிறது. இவையெல்லாம் என்ன என்பதைப் பற்றிய புரிதலே இல்லாதவர்களிடம் ஆட்சியும் அதிகாரமும் இருந்தால் அதன் விளைவுகள் என்னவாகும் என்பதையும் மக்கள் சிந்திக்க வேண்டும். இந்த நிலையிலும் நாம் தமிழர் கட்சியின் பிள்ளைகள் தொடர்ந்து இந்த அரசியலை முன்னெடுத்து வருகின்றோம். எப்போதும்போல எமது மக்கள் வலிமையாகவும், வளமாகவும், இனமாகவும், பணமாகவும் எம்மோடு இணைந்து நின்று எங்கள் கைகளை வலிமைப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன். நன்றி! திரள்நிதி திரட்டல்: donate.naamtamilar.org/let_n… - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
606
628
1,704
387,704
கடும் இடநெருக்கடியும், போக்குவரத்து நெரிசலும் உள்ள பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்கும் ‘துக்ளக் தர்பார்’ முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்! @CMOTamilnadu @TVKVijayHQ சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்கள் அறிவித்திருந்த புதிய தலைமைச்செயலகம் சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. 9 கிராம மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் பட்டினப்பாக்கத்தில் தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச்செயலகம் அமைக்க தவெக அரசு முடிவெடுத்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. தமிழ்நாடு அரசின் களஞ்சியம் காலியாக உள்ளது, அரசுக்கு 10 இலட்சம் கோடி கடன் உள்ளது, ஆண்டுக்கு ஒன்றே முக்கால் இலட்சம் கோடி கடன் வாங்கும் நிலை உள்ளது, அதனால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்று தொடர்ந்து கூறிவரும் தவெக அரசு, வட்டி கட்டவே கடன் வாங்க வேண்டிய அளவிற்குக் கடுமையான நிதி நெருக்கடி உள்ள நிலையில், 1200 கோடிகளை வாரி இறைத்து அவசரகதியில் புதிய தலைமைச்செயலகம் கட்ட வேண்டிய அவசியம் என்ன? தற்போது செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் செயல்படும் தலைமைச் செயலகத்தில் கடும் இடநெருக்கடியும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது என்பதாலேயே புதிய தலைமைச்செயலகம் அமைக்கப்படுகிறது என்றால், அதைவிட அதிக இடநெருக்கடியும், போக்குவரத்து நெரிசலும் உள்ள பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்க வேண்டிய தேவை என்ன? மக்களின் தேவைக்கா? அல்லது முதல்வரின் தனிப்பட்டத் தேவைக்கா? பரந்தூர் கிராம மக்களின் எதிர்ப்பினை ஏற்று, புதிய வானூர்தி நிலையத்தைக் கைவிட்ட நீங்கள், பட்டினப்பாக்கத்தில் 9 மீனவ கிராம மக்களின் எதிர்ப்பினைக் கருத்திற்கொள்ளாதது ஏன்? 9 மீனவ கிராம மக்களின் வாழ்வாதாரத்தைவிடவும் உங்களின் தனிப்பட்ட வசதிதான் முதன்மையானதா? இதுதான் மீனவ மக்களின் நலன் மீதான உங்களின் அக்கறையா முதல்வர் விஜய் அவர்களே? உலகப் புகழ்பெற்ற சாந்தோம் தேவாலயம் உள்ளிட்ட வழிபாட்டுத்தலங்கள், பத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள், தொழில் மையங்கள் மற்றும் மீனவ மக்களின் வியாபாரத்தலங்கள் எனப் பட்டினப்பாக்க குறுகிய சாலைகளை ஒவ்வொரு நாளும் பல்லாயிரம் மக்கள் ஒரே நேரத்தில் பயன்படுத்துவதால், இப்போதே அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இந்நிலையில், புதிய தலைமைச்செயலகமும் அங்கு அமைக்கப்பட்டால் பட்டினப்பாக்கம் பகுதியே கடுமையாகத் திணற நேரிடும். ஒவ்வொரு நாளும் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் வருகைக்காகப் பல மணி நேரங்கள் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்படுகின்ற அவலமும் நடைபெறும். இதனால் பொதுமக்கள் குறிப்பாகப் பள்ளி குழந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்படும் நிலை உருவாகும். அதுமட்டுமின்றி, பல்வேறு அரசுத் துறைகளின் அலுவலகங்கள், சட்டமன்றம், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தங்கும் விடுதிகள், பொதுமக்கள் காத்திருப்புக்கான இடங்கள், வாகன நிறுத்துமிடங்கள், குடிநீர் மற்றும் கழிப்பிடங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் இத்தனை குறுகிய இடத்திற்குள் எப்படி அமைக்க முடியும்? அப்படியே வலிந்து திணித்து அமைத்தாலும், மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்ததுபோல அடுத்த 100 ஆண்டுகளுக்கு விரிவுப்படுத்துவதற்கு இக்குறுகிய இடம் எப்படிப் போதுமானதாக இருக்க முடியும்? இதுதான் தவெக அரசின் தொலைநோக்கு சிந்தனையா? எல்லாவற்றிற்கும் மேலாக, சென்னை பட்டினப்பாக்கம் பகுதியானது கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமி பேரலை தாக்கிய ஆபத்தான பகுதிகளில் ஒன்றாகும். எதிர்காலத்திலும் சுனாமியால் தாக்குதலுக்கு ஆளாகும் வாய்ப்புகளும் உண்டு. மேலும், புவிவெப்பமயமாதலால் பனிப்பாறை உருகி, கடல் மட்டம் தொடர்ந்து உயர்வதால், எதிர்வரும் 2040-2070 வரையிலான காலகட்டத்தில் கடல்மட்டம் 30 செமீ அளவிற்கு உயர்ந்து சென்னை கடற்கரை பரப்பில் 1.6 கிமீ அளவிற்கு (ஏறத்தாழ 71ச.கீ நிலப்பரப்பு) கடல்மட்டத்திற்கு கீழ் சென்று, நிரந்தரமாக வெள்ளம் சூழ் பகுதியாக மாறும் என்று "காலநிலை மாற்றத்திற்கான சென்னை செயல்திட்ட அறிக்கை"குறிப்பிடும் பகுதிக்குள்ளும் பட்டினப்பாக்கம் வருகிறது என்பதால், அடுத்த 100 ஆண்டுக்கான தொலைநோக்கு பார்வையுடன் தலைமைச்செயலகம் அமைக்க பட்டினப்பாக்கம் எப்படி சரியான தேர்வாக இருக்க முடியும்? தான் முதலமைச்சர் ஆவதற்கு முன்பே அனைவரையும் வீட்டிற்கு அழைத்துச் சந்தித்த முதல்வர் விஜய் அவர்கள், தற்போது தலைமைச்செயலகத்தையே தன் வீட்டிற்கு அருகில் அமைத்து அரசு ஊழியர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவருமே அங்கு வாருங்கள் என்று துக்ளக் தர்பார் நடத்த முயல்வது வெட்கக்கேடானது. ஆகவே, முதல்வர் விஜய் அவர்களின் தனிப்பட்ட நலனுக்காக, நாட்டு மக்களின் வரிப்பணத்தை வீணடித்து, கடும் இடநெருக்கடியும், போக்குவரத்து நெரிசலும், சுனாமி ஆபத்தும் உள்ள பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இல்லையென்றால், பாதிக்கப்படும் பட்டினப்பாக்கம் 9 கிராம மீனவமக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த 9 மீனவ கிராம மக்களுக்கு நான் சொல்லிக்கொள்வது, நீங்கள் எது குறித்தும் அச்சம் கொள்ள வேண்டாம்; விளைநிலங்களை அழித்து சேலம் எட்டுவழிச்சாலை அமைக்கவிடமாட்டோம் என்று கூறினோம். அமைக்கவில்லை. விளைநிலங்களை அழித்து பரந்தூரில் வானூர்தி நிலையம் அமைக்கவிடமட்டோம் என்றோம். அமைக்க முடியவில்லை; சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வகையில் கடலில் பேனா சிலை வைக்கவிடமாட்டோம் என்றோம்; வைக்க முடியவில்லை. அதுபோல 9 மீனவ கிராம மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் பட்டினப்பாக்கத்தில் தலைமைச்செயலகத்தை ஒருபோதும் அமையவிடமாட்டோம். மக்களின் துணையுடன் உறுதியாக தடுத்து நிறுத்துவோம். பட்டினப்பாக்கம் மீனவச்சொந்தங்கள் மிகுந்த நம்பிக்கையோடு இருங்கள்!. - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
54
500
921
32,157
மக்களுக்கு ஒன்று என்றால் நான் முன்னால் வருவேன் என்று சொன்ன முதல்வர் விஜய், கர்நாடகாவில் 3 தமிழர்கள் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டது உடற்கூறாய்வில் உறுதியாகியும் வராமல் எங்கே சென்றார்? @CMOTamilnadu @TVKVijayHQ கர்நாடக மாநிலத்தின் வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டது திட்டமிடப்பட்ட படுகொலை என்பது உடற்கூறாய்வு அறிக்கையின் மூலம் உறுதியான பிறகும்கூட, தமிழ்நாட்டின் முதல்வர் விஜய் அவர்கள் அமைதியாகக் கடந்து செல்வது பெருத்த ஏமாற்றமளிக்கிறது. மூன்று தமிழர்களின் படுகொலை குறித்து நீதிவிசாரணை வேண்டுமெனக் கூறி, கர்நாடகத்தைச் சேர்ந்த எதிர்க்கட்சிகளே குரலெழுப்பி வரும் நிலையில், தமிழ்நாட்டை ஆளும் தவெக அரசு அதுகுறித்த எவ்வித அக்கறையுமில்லாது அலட்சியப் போக்கோடு இதுவரை எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. சுடப்பட்ட மூன்று தமிழர்களும் 10 அடிக்கும் குறைவான தூரத்திலிருந்து சுடப்பட்டுள்ளனர் என்பதும், சுடப்பட்டவர்களில் ஒருவரான ஜான்ரோஸ் பீட்டரின் இடதுகாதுப் பகுதியிலிருந்து நெஞ்சுப்பகுதி வரை 25 செ.மீ. நீளத்திற்கு ஆழமான காயம் கண்டறியப்பட்டுள்ளது என்றும், மற்ற இருவரின் நெஞ்சு, தொடை போன்ற பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது என்றும் உடற்கூறாய்வு அறிக்கையில் வெளியாகியிருக்கும் தகவல்கள் நடந்திருப்பது திட்டமிடப்பட்ட படுகொலை என்பதை உறுதி செய்கிறது. மேகதாது அணை விவகாரத்தில் இரு மாநிலங்களுக்குள் சிக்கல் உருவாகியிருக்கும் இந்நேரத்தில் இது தமிழ்த்தேசிய இனத்தின் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலை. இது தமிழ்த்தேசிய இனத்திற்கு நேர்ந்த அவமானம் . 2023ஆம் ஆண்டுப் பீகாரைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாகப் பரவிய பொய்ப்பரப்புரைக்குப் பீகாரிலிருந்து அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் ஏற்பாட்டின் பெயரில், கூட்டுக்குழு தமிழ்நாட்டுக்கு வந்து பீகாரிகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிபடுத்திவிட்டுச் சென்றது. உண்மைக்குப் புறம்பான செய்தியென்றாலும், தனது இன மக்களின் பாதுகாப்புக்கும், நல்வாழ்வுக்கும் அவ்வளவு முக்கியத்துவம் அளித்தார் அன்றைய பீகார் முதல்வர் நிதிஷ்குமார். 2014ஆம் ஆண்டுச் சென்னை, மௌலிவாக்கத்தில் ஏற்பட்ட கட்டிட விபத்தில் ஆந்திராவைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிக்குண்டபோது தமிழ்நாட்டுக்கு ஓடோடி வந்தார் அன்றைய ஆந்திராவின் முதல்வர் சந்திரபாபு நாயுடு. காயம்பட்டுச் சிகிச்சைப் பெற்ற தெலுங்கு இன மக்களை மருத்துவமனையில் சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறி தேற்ற முனைந்தார். விபத்துதானென்றாலும், தனது இன மக்களுக்கு ஒரு இன்னலென்றவுடன் தமிழ்நாட்டுக்கு விரைந்து வந்தார் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு. ஆனால் தமிழர்கள் மூன்றுபேர் கர்நாடக வனப்பகுதிக்குள் வைத்துத் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய் அவர்கள் அதனையொரு பொருட்டாகவே கருதவில்லை. மக்களுக்கு ஒன்று என்றால் நான் முன்னால் வருவேன் என்றவர் இப்பொழுது எங்கே சென்றார் எனத் தெரியவில்லை? இப்படுகொலையைச் செய்த வனத்துறையினர் மேல் கொலைவழக்கு பதிந்து கைதுசெய்யப்பட்டு உடனடியாகச் சிறையில் அடைக்க  வேண்டுமெனக் கேட்காது, விசாரணைக்குழு அமைக்க வேண்டுமென தமிழக முதல்வர் கோருவது மோசடித்தனம்! விசாரணைக்குழு அமைக்கப்பட்டால் அக்குழு வருடங்கள் கடந்து அறிக்கையைத் தாக்கல் செய்யும் முன் நீதிகேட்கும் குரல்கள் மறைக்கப்பட்டுவிடும். விசாரணைக்குழு அமைக்கக்கோருவது இதிலிருந்து தப்பிக்கக் கர்நாடக அரசுக்குப் பாதை அமைத்துக் கொடுக்கும் படுபாதகச் செயல். தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளைப் பெற்று வென்ற முதல்வர் விஜய் அவர்கள், எதற்காகக் கர்நாடக அரசுக்கு ஆதரவாக நிற்கிறார்? தமிழர்கள் மூவரை மான் வேட்டையாடியதாகக் கூறி, சுட்டுக்கொன்றுவிட்டு, ‘எங்கள் மாநிலத்தின் நிர்வாகத்தில் தலையிடாதீர்கள்’ என ஆணவத்தோடும், அகம்பாவத்தோடும் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் பேசிய பிறகும்கூட, முதல்வர் விஜய் எதிர்ப்பையோ, எதிர்வினையையோ ஏன் ஆற்ற மறுக்கிறார்? ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தமிழ்நாட்டில் நடைபெற்ற தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாட்டில் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார், மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை முழுமையாக நியாயப்படுத்திப் பேசுகையில், தமிழ்நாட்டின் முதல்வர் விஜய் அவர்கள் மூன்று தமிழர்கள் படுகொலை குறித்தோ, மேகதாது அணை அமைக்கப்பட்டால் அதன்மூலம் தமிழ்நாட்டுக்கு விளையும் ஆபத்து குறித்தோ ஒரு வார்த்தைகூடப் பேசாதது ஏன்? இதுதான் தமிழர்களுக்காக நீங்கள் குரல்கொடுக்கிற முறையா முதல்வரே? ஆகவே, மூன்று தமிழர்களைப் படுகொலை செய்த வனத்துறையினர் மீது கொலைவழக்குத் தொடுத்து, அவர்களைக் கைதுசெய்து சிறைபடுத்தவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா ஒரு கோடி ரூபாய் துயர்துடைப்புத்தொகையைப் பெற்றுத் தரவும் தமிழ்நாடு அரசு கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் சார்பாக தவெக அரசை வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
127
899
1,876
82,088
Packiarajan.. சே.. retweeted
வெற்றி ஆட்சி அல்ல வெத்து ஆட்சி.. தூய ஆட்சி அல்ல ப்ளாக் மெயில் ஆட்சி.. ஊழல் இல்லா ஆட்சி அல்ல ஊதாரி ஆட்சி... பக்கா மாஸ் ஆட்சி அல்ல பக்கா பல்டி ஆட்சி..
21
162
478
6,736
Packiarajan.. சே.. retweeted
2018 ஆம் ஆண்டு IPL போராட்டத்திற்கு பின் கட்சியினரை தேடி தேடி காவல்துறை கைது செய்த பொழுது இந்த தம்பி வீட்டுக்கு காவல்துறை வரப்போகிறது என கேள்விப்பட்டு இரவு வீட்டுக்கு போகாமல் வெளிய தங்கினான். அதிகாலை வீட்டுக்கு போன காவல்துறை இந்த தம்பிக்கு பதிலாக இந்த தம்பியின் தம்பியை காவல்நிலையம் கூட்டிக்கொண்டு சென்றுவிட்டது. அன்றைக்கு காலையில் இருந்து இந்த தம்பியின் தம்பி வீடு திரும்பிய மாலை வரை அண்ணன் சீமான் என்ன பாடுபட்டார் என்று எனக்கு தெரியும். எக்காரணத்தைக் கொண்டும் இந்த தம்பி கைதாகிவிடக்கூடாது என நிமிடத்திற்கு நிமிடம் பதறினார் அண்ணன் சீமான். ஆனால் இன்று... இந்த அரசியல் உறவுகளை உணர்வுகளை சிதைத்துவிடுவது கொடுமை...
30
302
879
26,533
Packiarajan.. சே.. retweeted
ஒரு ஊடக கருத்தரங்கம் சென்று பேசாமல் திரும்பி ஓட்டமெடுத்த ஒரே முதலமைச்சர் விஜய் தான்.. பேசாம இருந்ததை கூட ஏத்துகலாம் ஆன அதுக்கு ஒரு வாசகம் எழுதி சமாளிச்சானுங்க பாருங்க… கேவலம்!!!! முடியல!!!!
26
119
468
7,408
Packiarajan.. சே.. retweeted
ஒழுங்கற்ற நிர்வாகம்… தான்தோன்றித்தனமான செயல்பாடுகள்… வெற்று விளம்பர அறிவுப்புகள்… இதுதான் 100 நாள் ஆட்சி.. இந்த ஒரு விஷயம் அதற்கு சாட்சி…
Contrary to the TVK govt’s claim and promise of transparency in tenders, the 5.54 crore tender for chief minister C Joseph Vijay’s 10th floor Sea-View office at Namakkal Kavignar Maligai is shrouded in secrecy and has deviated from mandatory tender rules. First, none of the three tenders was floated online. Second, even before the tender process began, dismantling and other works had started, indicating finalisation of a contractor, before any tender was floated. Third, the tenders were published in newspapers and went online four days later, that too after TOI sought responses from officials about the absence of an e-tender. And finally, the print and e-version of the tenders were different, with the former specifying 5.54 crore as tender value, while the latter was silent on the sum mentioning NA. The delay in floating tenders online was striking PWD had floated 135 tenders online between Aug 12 and 17, while the three CMO tenders remained offline until TOI raised the issue.
7
124
224
2,679
Packiarajan.. சே.. retweeted
ஒரு தலைவன் என்பவன்..... நிலையான தீர்வை நோக்கி நகர்த்த வேண்டும். அதுதான் Vision, Dream செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி
36
216
478
6,195
நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேட்டை விசாரிப்பது மட்டுமல்ல; இம்முறைகேடான நீட் தேர்வு முறையையே முற்றாக நீக்க வேண்டும். நீட் எனப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத்தேர்வில் நடந்த முறைகேடுகளுக்கும், குளறுபடிகளுக்கும் எதிராக டெல்லியில் நடைபெற்ற இளைஞர் கூட்டத்தினுடைய மாபெரும் போராட்டத்தின் நீட்சியாக, வடமாநிலங்களில் போராட்டம் பற்றிப் படர்கையில், தமிழ்நாட்டிலும் மாணவர்களும், இளைஞர்களும் வீதியில் இறங்கிப் போராட முனையும்போது, அதனைக் காவல்துறையினர் மூலம் ஒடுக்கும் தவெக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. நீட் தேர்வை எதிர்ப்பதாகக் கூறிவிட்டு, அத்தேர்வுக்கு எதிராக இளைய தலைமுறையினரின் தன்னெழுச்சியான போராட்டத்தை அடக்கி ஒடுக்க முயலும் மாநில அரசின் போக்கு சனநாயகத்துரோகமாகும். திரையில், ‘ஜனநாயகன்’ எனப் பெயர் சூட்டிக் கொள்ளும் முதல்வர் விஜய், தரையில் மாணவர்கள், இளைஞர்கள் மீது காவல்துறையின் மூலம் அரச வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு, சனநாயகத்தைப் பச்சைப்படுகொலை செய்யலாமா? திரைப்படத்தில் மட்டும்தான் ஜனநாயகனா? வடநாட்டு இளைஞர்கள் டெல்லி வீதிகளில் கல்வியுரிமைக்காகக் களத்தில் நிற்கையில், தமிழ்நாட்டு இளைஞர்களைத் திரையரங்க வாசலில் நிறுத்தி இருப்பதெல்லாம் ஏற்கவே முடியாத பெருங்கொடுமை. ஒருபக்கம், டெல்லியில் நடைபெறும் இளைஞர்களின் போராட்டம் மீதான பாஜக அரசின் அடக்குமுறையைக் கண்டிப்பதாகக் கூறிக் கொண்டு, தமிழ்நாட்டில் நடைபெறும் நீட் தேர்வுக்கு எதிரான இளைஞர்களின் போராட்டங்களை தவெக அரசு ஒடுக்க நினைப்பது இரட்டை வேடமில்லையா? பாஜகவைக் கொள்கை எதிரியெனக் கூறிவிட்டு, பாஜகவுக்காக தவெக அரசு செய்யும் மறைமுகச் சேவகமில்லையா இது? கேலிக்கூத்து! வடமாநிலங்களில் நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளைக் கண்டித்துப் போராடுகையில், தமிழ்நாட்டில் மட்டும்தான் நீட் தேர்வு முறையே ஒரு முறைகேடு என்பதை வலியுறுத்திப் போராட்டங்கள் நடக்கின்றன. ஏற்கனவே, இருந்த முறையைவிட நீட் தேர்வின் மூலம்தான் தரமான மருத்துவர்களை உருவாக்க முடியும் எனக் கூறிக் கொண்டு வரப்பட்ட முறையிலேயே இவ்வளவு முறைகேடுகள், குழப்பங்கள், குளறுபடிகள் என்றால், இந்தத் தேர்வு முறை எதற்கு? இதே நீட் தேர்வு முறையில் கடந்த காலங்களில் முறைகேடு ஏற்பட்டிருக்காது என்பதற்கு என்ன உறுதிப்பாடு இருக்கிறது? ஆகவே, நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேட்டை விசாரிப்பது மட்டுமல்ல; இம்முறைகேடான நீட் தேர்வு முறையையே முற்றாக நீக்குவது என்பதே இந்நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பைத் தற்காப்பதற்கான பெருவாய்ப்பாகும். ஒரே மாதிரியான கற்றல் வாய்ப்புகளும், வசதிகளும் இல்லாத நாட்டில் ஒரே மாதிரியான நுழைவுத்தேர்வு என்பதே அசமத்துவமானது. ஆகவே, சமத்துவத்துக்கு எதிரான நீட் தேர்வு முறையை நாம் தமிழர் கட்சி வலிமையாக எதிர்க்கிறது. நீட் தேர்வை எதிர்த்து அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் போராட்டங்களை முன்னெடுக்கிறபோது அவைகள் அடையாளப் போராட்டங்கள் என்றளவில்தான் கருதப்படும். அதேசமயம், மாணவர்களும், இளைஞர்களும், பொதுமக்களும் வீதிக்கு வந்து போராடுகிறபோது, அது சனநாயகப்புரட்சியாக வெடித்து, ஆளும் வர்க்கத்தை அடிபணியச்செய்து, கோரிக்கை முழக்கத்தை நிறைவேறச் செய்யும். அதனை நோக்கிய இளையோர் கூட்டத்தின் அறப்போராட்டத்தை முழுமையாக ஆதரித்து, வரவேற்கிறேன். தமிழ்நாட்டில் நடைபெறும் இளையோர் கூட்டத்தின் அறப்போராட்டம் வெல்லட்டும்! நீட் எனும் நுழைவுத்தேர்வு முறை முழுமையாக நீக்கப்படட்டும்! அநீதிக்கு எதிராகப் போர்க்குணத்தோடு களத்தில் நின்றுப் போராடும் என்னுடைய தம்பி, தங்கைகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சிகரமான வாழ்த்துகளும், அன்பும்! - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
121
508
961
77,089
நீட் தேர்வில் முறைகேடு செய்த குற்றவாளிகளைக் கைதுசெய்யாமல், நீதிவிசாரணை கோரிப் போராடும் இளைஞர் கூட்டத்தின் மீது அரச வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவதா? நீட் எனப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கெதிராக, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி எனும் அமைப்பின் சார்பாக டெல்லி, ஜந்தர் மந்தரில் 20 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் அறப்போராட்டத்தை முழுமையாக ஆதரிக்கிறேன். அப்போராட்டத்தின் நீட்சியாக, நேற்றையதினம் அக்கட்சியின் செயற்பாட்டாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என யாவரும் நாடாளுமன்றம் நோக்கிப் பேரணியாய் செல்ல முயன்ற நிலையில், அவர்கள் மீது கொடும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டு, காவல்துறையின் மூலம் கண்மூடித்தனமாகத் தாக்கியிருக்கும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். நீட் தேர்வில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்காமல், அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்து, கைதுசெய்யாமல், முறைகேட்டுக்கு நீதிவிசாரணை கோரி, அறவழியில் போராடும் இளைய தலைமுறையினர் மீது தாக்குதல் தொடுப்பது ஏற்கவே முடியாத பேரவலம்; சகித்துக் கொள்ள முடியாத அரச வன்முறையாகும். மதக்கலவரம் ஏற்பட வாய்ப்பிருந்தும் பாபர் மசூதியை நோக்கிச் செல்ல மதவெறியர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட இதே நாட்டில், நாடாளுமன்றம் நோக்கி அறவழியில் பேரணியாய் செல்லக்கூட இளைஞர் கூட்டத்துக்கு அனுமதி அளிக்கப்படாதது கேலிக்கூத்தானது. நாடாளுமன்றம் என்பது நாட்டின் குடிமக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்களின் அவை. அந்த அவை மக்களுக்கான நீதியையும், சமவாய்ப்பையும் நிலைநாட்டாதபோது, அந்த அவையை நோக்கிச் சென்று, நீதிகேட்பதைத் தவிர, எளிய மக்களுக்கு வேறு வழியென்ன இருக்கிறது? மன்னராட்சிக்காலத்தில்கூட மன்னனின் அரசவைக்குள்ளேயே சென்று, சாதாரண குடிமக்களால் நீதிகேட்க முடிந்தது; அரசனை நோக்கி விரல்நீட்டிக் கேள்வியெழுப்ப முடிந்தது. ஆனால், மக்களாட்சிக்காலத்தில் பாராளுமன்றத்தை நோக்கிப் பேரணியாய்கூட செல்ல முடியவில்லை என்பது வெட்கக்கேடானது இல்லையா? வெள்ளையர்களுக்கு எதிராக, பாராளுமன்றக் கட்டிடத்திற்குள் குண்டுவீசி, ‘புரட்சி ஓங்குக’ என வீரமுழக்கமிட்ட இளையப் புரட்சியாளர் பகத் சிங்கைக் கொண்டாடும் திருநாட்டில், பாராளுமன்றத்தை நோக்கிப் பேரணியாய் செல்வதற்குக்கூட ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு தடைவிதித்து, போராடுவோர் மீது ஒடுக்குமுறையைப் பாய்ச்சுமென்றால், இது சனநாயகப்பேரவலம் இல்லையா? இவ்வளவு நடந்தும் நாட்டின் நிர்வாகத் தலைவரான பிரதமர் நரேந்திரமோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் வாய்மூடி மௌனமாக இருப்பது அதிகாரத்திமிர் இல்லையா? நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளுக்கும், குளறுபடிகளுக்கும் எதிராகப் போராடும் இளையோர் கூட்டத்தின் அறச்சீற்றம் நியாயமானது. அதேசமயம், நீட் தேர்வு என்பதே மிகப்பெரும் முறைகேடு; மோசடி. அதனை முற்றாகத் துடைத்தெறிய வேண்டும் என்பதற்காகவே தமிழர் நிலத்தில் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆகவே, நீட் தேர்வுக்குரிய வினாத்தாள்கள் கசிவு எனும் கல்வித்துறையின் முறைகேடுகளுக்குத் தார்மீகப் பொறுப்பேற்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவிவிலக வேண்டும் எனும் கோரிக்கை முழக்கம் மிகச் சரியானது. அதனை நாம் தமிழர் கட்சி முழுமையாக வரவேற்கிறது. நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேட்டுக்கு எதிராகப் போராடும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் மீது ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு அரசப்பயங்கரவாதத்தை ஏவிவிட்டு, போராட்டக்களத்தை வன்முறைக்களமாக மாற்றியது ஒட்டுமொத்த நாட்டுக்குமானப் பேரவமானம்; வரலாற்றில் கறுப்புப்பக்கங்களாகப் பதிவுசெய்யப்படும் கோர நிகழ்வாகும். ஆகவே, நீட் எனப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத்தேர்வுகளில் ஏற்பட்ட முறைகேடுகளுக்கும், குளறுபடிகளுக்கும் முறையான நீதிவிசாரணை செய்ய வேண்டுமெனவும், ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானைப் பதவிநீக்கம் செய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
49
708
1,472
27,711
தன்னிகரற்ற கலைத்திறனால் நாட்டுமக்களின் உள்ளத்திலும் இல்லத்திலும் ஒருசேர நிறைந்தவர்! சிம்மக்குரலால் செந்தமிழ்ப்பேசி அன்னைத் தமிழுக்கு அழகு சேர்த்தவர்! வணங்கும் கடவுளையும், வரலாற்று நாயகர்களையும், விடுதலைப் போராட்ட வீரர்களையும் நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்திய கலை உலகச் சிற்பி! வாழ்வின் துன்பங்களை மறக்கடித்து, மக்களின் மனங்களை மகிழ்விக்கும் நடிப்புக்கலையின் பிதாமகன், உடலசைவில் நவரசங்களையும் வெளிப்படுத்தும் வல்லமை பெற்ற தமிழ்ப் பேரினத்தின் பெருமைமிகு கலை அடையாளம், நடிகர் திலகம் என எல்லோராலும் பெருமையோடு அழைக்கப்பட்ட நம்முடைய ஐயா சிவாஜி கணேசன் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்! அந்த மகத்தான மேதைக்குப் பெருமையோடு நம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்! நாம் தமிழர்!
19
193
600
14,199
நீட் தேர்வு முறைகேடுகளை எதிர்த்து உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அறப்போராளி சோனம் வாங்சுக்குடன் உடனே பேச்சுவார்த்தை நடத்தி அவரது உடல் நலனை உறுதி செய்வதோடு மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும். @narendramodi @AmitShah @dpradhanbjp @EduMinOfIndia தலைநகர் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில், கடந்த 18 நாட்களுக்கும் மேலாக உணவு உட்கொள்ளாமல் தனது உடலை வருத்தி, சாவின் விளிம்பில் நின்று அறப்போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார் லடாக் மண்ணின் கல்விப் புரட்சியாளரும், சூழலியல் அறிஞருமான மதிப்புக்குரிய சோனம் வாங்சுக் அவர்கள். ஒரு நாட்டின் எதிர்காலமாகத் திகழக்கூடிய கோடிக்கணக்கான ஏழை, எளிய, நடுத்தரக் குடும்பத்து மாணவர்களின் கல்வி உரிமையைக் காப்பதற்காக, தன்னுயிரைத் துச்சமென மதித்து அவர் மேற்கொண்டு வரும் இந்த உண்ணாநிலை அறப்போர், ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்தின் ஆன்மாவையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்த நாட்டின் ஆளும் வர்க்கமோ எவ்வித சலனமும் இன்றி, ஒரு மனிதனின் உயிர் போகும் நிலையைக் கண்டும் காணாமல் மௌனம் சாதிப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. ஒன்றிய பாசக அரசு கொண்டு வந்த இந்த 'நீட்' (NEET) போன்ற ஒற்றைச் சாளரத் தேர்வு முறையானது, தகுதி, திறமை என்ற பெயரால் ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் ஒரு பெரும் பகற்கொள்ளை என்பதை நாம் தொடக்கம் முதலே எச்சரித்து வருகிறோம். இந்த ஆண்டு அரங்கேறிய வினாத்தாள் வெளியீடுகளும், முறைகேடுகளும் நமது எச்சரிக்கையை முற்றிலும் உண்மையாக்கியுள்ளன. மாதக்கணக்கில், ஆண்டுகணக்கில் தூக்கத்தைத் தொலைத்து, படித்த லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் ஒரு மாபெரும் கல்விச் சந்தையாக இந்தத் தேர்வு வாரியம் மாறியிருக்கிறது. இது வெறும் நிர்வாகத் தோல்வி அல்ல, இந்த நாட்டின் ஒட்டுமொத்தக் கல்வி அமைப்பின் மீதும், எதிர்காலத் தலைமுறையின் மீதும் நடத்தப்பட்ட ஒரு வன்முறை. இந்த அநீதிக்கு எதிராகவும், வினாத்தாள் வெளியீட்டிற்குப் பொறுப்பேற்று ஒன்றிய பாசக அரசின் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியும்தான், டெல்லியில் போராடும் இளம்தலைமுறையினரோடு கைகோர்த்து சோனம் வாங்சுக் களம் கண்டுள்ளார். 18 நாட்களைக் கடந்த உண்ணாநிலையின் காரணமாக அவரது உடல் எடை 9 கிலோவுக்கும் மேல் குறைந்து, தசை இழப்பு ஏற்பட்டு, இதயம் பலவீனமடைந்து கவலைக்குரிய நிலையில் உள்ளார். அவருடைய வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட '3 Idiots' திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, "கல்வி என்பது மனப்பாடம் செய்வதல்ல, அது சிந்தனையைத் தூண்டுவது" என்று கைதட்டி இரசித்த இந்த நாடு, உண்மை வாழ்க்கையில் அதே சிந்தனைக்காக ஒரு மாமனிதன் சாவின் விளிம்பில் போராடும்போது, தொலைக்காட்சி அலைவரிசைகளை மாற்றிக் கொண்டு வேடிக்கைப் பார்ப்பது பெரும் அவமானம். அதே படத்தின் தமிழாக்கத்தில் நடித்து வெற்றிகண்ட முதலமைச்சர் விஜய் அவர்கள் பாசக அரசின் கொடுங்கோன்மைக் குறித்து அமைதி காப்பதும், சோனம் வாங்சுக் குறித்து குரல் எழுப்பாததும் பெரும் வருத்தமளிக்கிறது. ஒன்றிய அரசு இனியும் காலங்கடத்தாமல், ஜந்தர் மந்தரில் போராடி வரும் சோனம் வாங்சுக் மற்றும் மாணவர் பிரதிநிதிகளுடன் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். நீட் போன்ற ஆதிக்கத் தேர்வு முறைகளை முற்றிலும் கைவிட்டு, வினாத்தாள் வெளியீட்டிற்குக் காரணமானவர்கள் மீதும், அதற்குப் பொறுப்பான கல்வி அமைச்சகத்தின் மீதும் கடுமையான சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன். கல்வி என்பது வர்த்தகப் பண்டமல்ல அது எளிய மக்களின் வாழ்வாதார உரிமை! உண்ணாநிலை போராட்ட முறையை கைவிட வேண்டும் எனும் கோரிக்கையோடு நம் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் காக்கப் பாடுபடும் சோனம் வாங்சுக் அவர்களின் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தனது முழுமையான ஆதரவை வழங்குகிறது. - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
23
331
621
33,566
Packiarajan.. சே.. retweeted
நாம் தமிழர் கட்சி திருப்போரூர் சட்டமன்ற தொகுதி சுற்றுச்சூழல் பாசறை மாமல்லபுரம் கடற்கரையில் நெகிழிகள் அகற்றும் பணி சிறப்பாக நடைபெற்றது.
8
135
312
3,676
Packiarajan.. சே.. retweeted
தமிழ்நாட்டுச் சட்டமன்றம்! நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட பேரவை! தமிழ்நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் தலைமைக்கூடம்! மாண்புமிகு பிரதிநிதிகள் மக்களுக்காக முழக்கமிடும் மாமன்றம்! பெருந்தலைவர் காமராசரும், பேரறிஞர் அண்ணாவும், பேராசான் ஜீவானந்தமும், கண்ணியமிகு காயிதே மில்லத்தும், நாவலர் நெடுஞ்செழியனும், பெருமகன் சங்கரய்யாவுமென பெரும் பெரும் தலைவர்களும், அறிஞர்களும், ஆளுமைகளும், மேதைகளும் உரையாற்றிய மகத்தான மன்றமிது. இங்குதான் அரும்பெருந்தலைவர்கள் சமூக மாற்றத்துக்கான வாதப் பிரதிவாதங்களை எடுத்து வைத்தார்கள்; மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகப் போட்டிப் போட்டுக் கொண்டு விவாதித்தார்கள்; சமூக அவலங்களை நாடறிய எடுத்துரைத்தார்கள்; கடைக்கோடி மக்களின் கனவுகளை ஈடேற்றத் திட்டங்களையும், சட்டங்களையும் தீட்டினார்கள். எப்பேர்ப்பட்ட அவை? எப்படிப்பட்ட ஆளுமைகள் உரையாற்றிய இடம்? எப்படிப்பட்ட தலைவர்களைக் கண்ட மன்றம்? அதனை எங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள் ஆச்சர்யக்குறி ஆட்சியாளர்? ‘ஒரு கோமாளி அரண்மனைக்குச் சென்றால் அவன் அரசனாகி விடுவதில்லை, அரண்மனைதான் சர்க்கஸ் கூடாரமாகிவிடும்’ என்கிறது துருக்கியப் பழமொழி. அதனை தமிழ்நாட்டில் மெய்ப்பித்துக் காட்டிய பெருமை முதல்வர் விஜய்யையே சாரும். சட்டமன்றத்துக்கென்று ஒரு கண்ணியம் இருக்கிறது; சட்டமன்றத்தில் இருப்பவர்களுக்கென்று ஒரு பொறுப்புணர்வு இருக்கிறது. முதலமைச்சர் பதவிக்கென்று ஒரு மாண்பு இருக்கிறது. அமைச்சர் பெருமக்களுக்கென்று ஒரு மரபு இருக்கிறது. அவை யாவற்றையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, கைகொட்டிச் சிரித்து, விசிலடிக்கும் பொழுதுபோக்குக் கூடாரமாக சட்டமன்றத்தை மாற்றி, சந்திச் சிரிக்க வைத்திருக்கிறார் முன்னாள் நடிகரும், இந்நாள் முதல்வருமான விஜய். திரைப்படங்களில் நடிப்பதைவிட்டவர், நடிப்பதை மட்டும் ஏனோ விட மறுக்கிறார்? சபாநாயகரை இயக்குநராகவும், அமைச்சர்களை துணை நடிகர்களாவும் நினைத்து, சட்டசபையை நாடகசபா ஆக்கியிருக்கிறார். நான்கு நாட்கள் சட்டமன்றக் கூட்டத்தொடரில், மூன்று நாட்கள் மௌனவிரதம்; இல்லை! இல்லை! மௌனப் புரட்சி! தனக்கு இன்றைக்கு, ‘Scene இல்லை’ என்று நினைத்தாரோ என்னவோ, கால்கள் மரத்து போனாலும் சரி! மறந்தும், எந்திரிக்க மாட்டேன்; ‘எந்திரித்தால் பேசச் சொல்லிவிடுவார்கள்’ என மந்திரித்துவிட்டவர் போல, சபையை வெறித்துப் பார்த்தபடியே உட்கார்ந்திருந்தார். சட்டமன்றத்தில் முன்வைக்கப்படும் எல்லா அமைச்சகங்கள் குறித்தக் கேள்விகளுக்கும் பதில் சொல்லக் கடமையும், உரிமையும் கொண்ட தலைமை நிர்வாகிதான் முதல் அமைச்சர். தன்னுடைய நேரடிக்கட்டுப்பாட்டில் இருக்கும் துறைகள் மட்டுமல்லாது, மற்ற துறைகள் தொடர்பான கேள்விகளுக்கும் முதல்வரே பதில் சொல்லலாம். அதற்கான எல்லா உரிமையும் அவருக்குண்டு. ஆனால், ‘வாய்ல நல்லா வந்துரும்’ என்று வாயில் வருவதற்கும் எழுதிக் கொடுக்க வேண்டிய பரிதாப நிலையிலிருக்கும் முதல்வரிடம் போய், அதையெல்லாம் எதிர்பார்க்க முடியுமா? தர்க்க ஆற்றல், சமயோசிதத்திறன் எல்லாம் பனையூரிலிருந்து பல கோடி கிலோமீட்டர் தூரத்தில் இருப்பதால்தானே ஊடகங்களைக் கண்டாலே உதறல் எடுத்து, ‘மெர்சல்’ ஆகிறார் மாண்புமிகு ‘மக்கு’ முதல்வர். இதனால், முதல்வரின் துறை சார்ந்த கேள்விகளுக்கு பதில்சொல்கிறேன் பேர்வழியென அரைவேக்காடு அமைச்சர்கள் கிளம்பி வாய்க்கு வந்ததை அடித்துவிட, சபாநாயகரே அவைக்குறிப்பிலிருந்து நீக்க உத்தரவிடும் அளவுக்கு விபரீதமாகிப் போனது சபையின் நிலை. கூட்டத் தொடரின் கடைசி நாளில் முதல்வர் பதில் சொல்வார் என முந்தைய நாட்களிலேயே அறிவித்துவிட, கேள்விகளும், விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் முன்பே வைக்கப்பட்டுவிட வசதியாய் போனது ஆளுமையே இல்லாத ஆளுங்கட்சிக்கு. பதில்களை எல்லாம் பல பக்கத் தாள்களில் எழுதிக் கொடுத்துவிட, அதனை அள்ளிக் கொண்டு வந்து, அள்ளி அளந்து வாசித்தார் ஆச்சர்யக்குறி ஆட்சியாளர். அதிலாவது ஏதாவது உருப்படியாக, ஆக்கப்பூர்வமாகப் பேசினாரா? இல்லை! தவெக ஆட்சிப் பொறுப்பேற்று அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் ஒன்றரை மாதத்தில் ஓராயிரம் சட்டம் ஒழுங்குச் சிக்கல்கள். கொலை, கொள்ளை, பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை, வன்முறை என சமூக அமைதி சகட்டுமேனிக்கு சிதைக்கப்பட்டிருக்கிறது. அதற்குப் பொறுப்பேற்று, சிக்கலின் வேர் முதல் தீர்வுவரை எதுகுறித்தாவது உருப்படியாகப் பேசினாரா? இல்லை! மின்வெட்டு பூதாகரப் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. இப்போதுவரை பிரச்சினைத் தீர்ந்தபாடில்லை. உழைத்துக் களைத்த மக்கள் இரவில் ஓய்வெடுக்க முடியாது, வீதிக்கு வந்து போராடுகிறார்கள். வெப்பத்தால் அழும் குழந்தைகளை ஆசுவாசப்படுத்த முடியாது நள்ளிரவில் பெற்றோர்கள் புலம்பித் தவிக்கிறார்கள். எதனால் மின்வெட்டு? நியாயமானக் காரணத்தைச் சொல்ல முடிந்ததா? அமைச்சர் ஒரு பதில்! அதிகாரிகள் ஒரு பதில்! இப்போது முதல்வராவது பிரச்சினையைத் தெளிவுப்படுத்தினாரா? இல்லை! நீட் தேர்வினால் இறந்த தங்கை அனிதாவைக் குறிப்பிட்டு, தன்னுடைய உடன்பிறந்த தங்கை வித்யா மரணம் அளவுக்குப் பாதித்ததாக விக்கிரவாண்டி மாநாட்டிலேயே மனமுருகினார் இன்றைய முதல்வர் விஜய். அணுகீர்த்தனா, கோபிகா, ரோஷினி, வெற்றியானந்தம் என 10 நாட்களுக்குள் நான்கு பிஞ்சுகள் கருகியிருக்கின்றன. அவர்களுக்கு இரங்கல் கூறவாவது வாய்திறந்தாரா? அவர்கள் இறந்தது தெரிந்தாவது மனமிரங்கினாரா? இல்லை! பெரியப்பாளையம் அருகே, கன்னிகைப்பேரில் 9 பெண்கள் அமோனியா கசிவால் உயிரிழந்திருக்கிறார்கள். 60க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்கள். செய்தியைக் கேட்டதும் பதறித் துடித்து நேரில் செல்லத்தான் மனமில்லை. அவர்களது குடும்பத்தினருக்கு உரிய துயர்துடைப்புத்தொகை அளிக்கப் பணமுமா இல்லை? சுயவிளம்பரத்துக்காக காசைக் கரியாக்கும் முதல்வருக்கு இறந்துபோன தொழிலாளர்கள் மீது கரிசனம் வந்ததா? இல்லை! ‘விவசாயியாக அடுத்தப் பிறவியில் பிறக்க வேண்டும்’ எனப் பரப்புரைக் கூட்டத்தில் அள்ளி அளந்துவிட்டுவிட்டு, இப்போது தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி பயிர்க்கடனைக்கூட தள்ளுபடி செய்யாது தட்டிக் கழித்து, விவசாயிகளை வேதனையின் விளிம்பில் தள்ளுகிறார் முதல்வர் விஜய். போதாதென்று, எதிர்க்கட்சிகள் தூண்டிவிட்டுத்தான் விவசாயிகள் போராடுவதாகக் கொச்சைப்படுத்தவும் செய்கிறார். அவர்களுக்கான உரிய தீர்வும், நீதியும் கிடைக்கச் செய்தாரா? இல்லை! காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டத் துடிக்கிறது கர்நாடகா. அதனை எதிர்ப்பதாகக் கூறி, நடுவர் மன்றம் அமைக்க வேண்டுமெனத் தீர்மானம் இயற்றுகிறார் முதல்வர் விஜய். நடுவர் மன்றம் என்பது நயவஞ்சக முடிவெனத் தனக்குத் தெரியவில்லை என்றால், எழுதித் தருபவரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டாமா? சுயபுத்திதான் இல்லையென்றால், சொல்புத்திகூடவா இல்லை? கர்நாடகத்தின் அடாவடித்தனத்தை எதிர்த்துப் போரிட போர்க்குணம்தான் இல்லை; சட்டமன்றத்தில் ஒழுங்காக ஒரு தீர்மானம் இயற்றவாவது திறன் இருந்ததா? இல்லை! மொத்தத்தில், முதல்வரின் பேச்சில் சுரத்தும் இல்லை; சரக்கும் இல்லை. முதல்வரைக் குறைசொல்வதா? எழுதிக் கொடுத்தவரைத் திட்டித் தீர்ப்பதா என இரட்டைக்குழப்பம்! முதல்வரின் உரையில், சமகால மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் இல்லை. ஆனால், ‘Theme Music’ போடும் அளவுக்கு வசனங்களுக்குக் குறைவில்லாது இருந்தது. மாநில உரிமைகள் சார்ந்த பொறுப்புணர்வுக்குரல் இல்லை; ஆனால், பொறிபறக்கும் அளவுக்கு ‘Herioc Mannerism ’ இருந்தது. விமர்சனங்களுக்கு உரிய விளக்கம் இல்லை; ஆனால், வில்லனைத் மிரட்டும் கதாநாயகனின் ‘Body Language’ இருந்தது. கேள்விகளுக்கு உரிய பதில்கள் இல்லை; ஆனால், ‘Catchy’ வார்த்தைகள் மட்டும் உரை முழுமைக்கும் விரவிக் கிடந்தது. ஆக்கப்பூர்வக் கருத்துகள் இல்லை; ‘Audience Engaging’ அம்சங்கள் அளவில்லாது இருந்தது. மொத்தத்தில், .OTTயில் ஓசியில் படம் போட்டதுபோல, பேரவையை நேரலையில் ஆக்கியிருக்கிறார் வரலாறு கண்டிராத விசித்திர முதல்வர்! ‘வெட்டிக்கதைகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறாரே’ என்று நினைத்தால், கடைசியில் குட்டிக்கதை வேறு! அதுசரி! ‘Vulgar warriors ’ Goosebumbs ஆகவும், Fire விட்டு Reels போடவும் ‘Content’ தேற்ற வேண்டாமா? ‘அப்பாவைக் காணும்’ என்று யாரையோ தேடுகிறார். அதுசரி! உங்கள் கதையில் அப்பாவைக் காணாதது போல, சபையில் உங்களிடம் ஆளுமை என்பதையே காண முடியவில்லையே, ஏன் முதல்வரே? சொந்தத் துறையைச் சார்ந்தக் கேள்விகளுக்கும் சொந்தமாகப் பதில் சொல்ல வக்கற்று நிற்கிறீர்களே? தமிழ்நாட்டுச் சட்டமன்றம் காணாத கந்தர்வக்கோலமாக அல்லவா இருக்கிறது! யாரோ எழுதிக் கொடுத்ததை ஏற்ற இறக்கமாக வாசித்து, உடல்மொழி காட்டுவதில் மட்டும்தானே வீரம் இருக்கிறது உங்களிடம்! மற்றபடி, ‘ A4 Paper’ இல்லையென்றால், முதல்வரே! நீங்களே Waste Paperதானே! ஆளுவதென்பது குற்றமில்லை; ஆளுமையே இல்லாதிருப்பதுதான் குற்றம்! அறியாமை குற்றமில்லை; அறிந்துகொள்ள நினையாமைதான் குற்றம்! எழுதிக் கொடுத்ததைப் பார்த்துப் பேசுவதுப் குற்றமில்லை; எழுதிக் கொடுத்தால் மட்டும்தான் பேசுவேன் என்பதுதான் குற்றம்! புரிந்துகொள்ளுங்கள் முதல்வரே! கொஞ்சமாவது திருந்திச் செயல்படுங்கள். ஆட்சியைப் பிடிக்க Reels போட்டிருக்கலாம். ஆட்சியைப் பிடித்தப் பிறகும், Reels மட்டுமே போட்டுக் கொண்டிருந்தால் நல்லாவா இருக்கு? ஆச்சர்யக்குறி ஆட்சியாளரே! மாண்புமிகு ‘மக்கு’ முதல்வரே! ‘சுறா’ படத்தையும் ‘Super’ எனும் சொல்லுமளவுக்கு உங்களுக்கு ரசிகர்கள் இருக்கலாம். ஆனால், சுமாருக்குக் கீழான உங்களது படுபாதக ஆட்சியையும் ‘Blockbuster’ எனப் பாராட்டுமளவுக்கு தமிழ் மக்கள் ரசிக மனப்பான்மையிலேயே மூழ்கிக் கிடக்க மாட்டார்கள் என்பதை இனியாவது புரிந்துகொள்ளுங்கள்!
93
289
511
50,877
உலக குருதிக்கொடையாளர் நாள் இன்று! நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடைப் பாசறையில் தங்களை இணைத்துக்கொண்டு, உயிர்காக்கும் அவசரத்தேவை எனும்போதெல்லாம் மறுக்காது, இரவு - பகல் பாராது தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் ஓடோடிச் சென்று தங்கள் குருதியைக் கொடுத்து உயிர் காக்கும் என் அன்பிற்கினிய தம்பி-தங்கைகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சிகர வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். நாம் தமிழர் கட்சி குருதிக்கொடைப் பாசறை கடந்த 16 ஆண்டுகளில் ஏறத்தாழ 4 இலட்சம் அலகுகள் அளவிற்கு குருதியைக் கொடையாக வழங்கி பல்லாயிரக் கணக்கான மக்களின் இன்னுயிரைக் காத்துள்ளது. கொடையாக நாம் தரும் ஒவ்வொரு துளி குருதியும் உயிர் காக்கும் பேராற்றல் கொண்ட அருமருந்தாகும்! காலத்தினாற் செய்த உதவி ஞாலத்தை விடவும், செய்யாமற் செய்த உதவி வையகத்தையும் - வானகத்தையும் விடவும் பெரிதென்ற நம் வள்ளுவப் பெரும்பாட்டனின் குறளுக்கிணங்க ஒவ்வொரு முறையும் நீங்கள் அளிக்கும் குருதிக்கொடையானது காலத்தினால் செய்த உதவி மட்டுமல்ல; செய்யாமல் செய்த பேருதவியும் கூட! தன்னலம் சிறிதுமின்றி பிறர் உடல் நலம் பேணவும், பேராபத்தில் உள்ள உயிர் நலம் காக்கவும், தேவை ஏற்படும் போதெல்லாம் குருதியைக் கொடையாக தந்துதவும் குருதிக்கொடையாளர்களின் பெரும்பணி மிகுந்த போற்றுதற்குரியது; வணங்கத்தக்கது! ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவில் அதிக குருதிக்கொடை வழங்கும் அமைப்பிற்கான பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து நம்முடைய பாசறை உறவுகள் பெறும்போதெல்லாம் மிகுந்த பெருமிதமும் மனநிறைவும் கொள்கிறேன். தொடரட்டும் உயிர்காக்க குருதிக் கொடை தரும் உங்கள் உன்னதப் பெருந்தொண்டு! மலரட்டும் இப்பூவுலகம், பொதுநலம் பேணும் உங்கள் மாசற்ற பேரன்புகொண்டு! “ஒவ்வொரு துளியும் உயிர் காக்கும், கொடுப்பவர் உள்ளம் உயர்வாகும், உன்னத கொடையாம் குருதிக்கொடை!” என் பேரன்பிற்குரிய குருதிக்கொடையாளர்கள் அனைவருக்கும் உலக குருதிக்கொடையாளர் நாள் நல்வாழ்த்துகள்! - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி #WorldBloodDonorDay
11
652
1,311
9,731
Packiarajan.. சே.. retweeted
அறிவிப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்கள் இவை மட்டுமே இந்தப் பக்கங்களில் வரும் அறிக்கைகள் மட்டுமே அதிகாரப்பூர்வ செய்திகள். இதைத் தவிர்த்து தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் பெயரைப் பயன்படுத்தி இயங்கும் சமூக வலைதளப் பக்கங்களில் வரும் செய்திகளுக்கு கட்சி பொறுப்பாகாது. அனைவரும் அதிகாரப்பூர்வப் பக்கங்களைப் பின்தொடர்ந்து, கட்சியின் அறிவிப்புகள் மற்றும் செய்திகளை அறிந்துகொள்ளுங்கள். கீச்சு/X: x.com/Seeman4TN வலையொளி/Youtube: youtube.com/@seemanofficial?… படவரி/instagram: instagram.com/seeman4tn_offi… முகநூல்/Facebook: facebook.com/SenthamizhanSee… WhatsApp Channel/ பகிரி பக்கம்: whatsapp.com/channel/0029Vav…
4
155
284
3,844
இறைத்தூதர் நபி பெருமானரின் அருள்மொழியின் வழிநடந்து, உள்ளன்போடு இறைவனை வணங்கி, மனநிறைவோடு வறியவர்களுக்கு உதவி, ஈகைத்திருநாளாம் பக்ரீத் பெருநாளினைக் கொண்டாடும் என்னுடைய பேரன்பிற்குரிய இசுலாமியச் சொந்தங்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்! அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பாளனுமாகிய ஏக இறைவன் அல்லாவின் பேரருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்!
10
399
1,021
8,991
Packiarajan.. சே.. retweeted
கோபிச்செட்டிபாளையத்தில் இன்று அண்ணன் பரப்புரையின் போது எடுத்த புகைப்படம் இது🫡 அடுத்த தலைமுறைக்கானதுடா எங்க அரசியல்💥 நாதக வளர்வதையும் அதிகாரத்தை நோக்கி நகர்வதையும் எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது #நாம்_தமிழர்_கட்சி
12
296
966
5,945
Packiarajan.. சே.. retweeted
எனக்கு இவரும் இவரின் தம்பி தங்கைகளும் சட்டசபை செல்ல வேண்டும் என தோன்றுகிறது... ஏனெனில் இவர்களின் நோக்கம் மக்களுக்கு நல்லது செய்வது, சமூக தீங்குகளை ஒழிப்பது.. நல் வளர்ச்சி திட்டங்களை முன்னெடுப்பது.. ஊழல் குற்றங்கள் நடக்காமல் மக்களின் பணம் சூறையாடப்படாமல் தடுத்து அதை நல்ல திட்டங்களுக்கு பயன்படுத்த ஆலோசனைகள் வழங்குவது... எல்லா மேடைகளிலும் இவர் முழக்கம் எதிர்கால வாழ்வியல் பற்றியே இருப்பதால் இவர்கள் சட்டமன்றத்தில் இருந்தே ஆகவேண்டும்.. ஆக்கப்பூர்வமாக சிந்திக்கும் ஆற்றலை கடந்த அரசுகள் கைவிட்டுவிட்டு வெறும் இலவசங்களை ஆசை காட்டி வாக்கு வாங்கி , தேர்தலில் முதலீடாக ஒவ்வொரு வேட்பாளரும் கோடிக்கணக்கில் செலவு செய்துவிட்டு அதை நூறு மடங்காக எப்படி எடுப்பது என திட்டம் தீட்டும் அரசாகவே நாம் இதுவரை பார்த்திருக்கிறோம்.. கொள்ளையையும் அலட்சியங்களையும் போதை புழக்கத்தையும் வன்முறைகளையும் தட்டிக்கேட்க ஒரு அழுத்தமான குரல்கள் தேவை... அந்த குரல் சீமானின் குரலாகவும் சீமானின் தம்பி தங்கைகளின் குரலாகவும் இருந்தால் அரசையும் அரசு அதிகாரிகளையும் நல்வழிப்படுத்தும் மேய்ப்பாளர்களாக மாறுவார்கள்.. ஆகவே இந்த தேர்தலில் நாதக வேட்பாளர்களில் யாரெல்லாம் தங்களது கருத்துக்களை முன்வைத்து அழுத்தமாக போராடுகிறார்களோ அவர்களை அடையாளம் காணுங்கள்.. அந்த குரல்கள் நமக்கான குரல்கள்... வெற்றி பெற்று அவர்கள் உள்ளே சென்றால் நமக்குத்தான் நல்லது செய்யப்போகிறார்கள்.. இளைஞர்களின் ஆற்றலை வீணாக்கிவிட வேண்டாம்.. தலைமுறை தலைமுறையாக ஆட்சி நடத்துபவர்களும் அடுத்த தலைமுறைக்கு பதவிகளையும் அதிகாரங்களையும் தாரை வார்ப்பவர்கள் இனி வேண்டாம்.. நம் பிள்ளைகள் முதலில் வாரிசு அரசியலை புறந்தள்ளி நல்லதோர் மாற்று அரசியலை முன்னெடுக்க நினக்கும் இளைஞர்களை உருவாக்க்கொள்ள வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.. சிந்திப்போம்.. நம்மை நாமே ஆள்வோம்.. கைகட்டி அடிமைகளாக நிற்கபோகிறோமா?... நல்ல திசையை நம் பிள்ளைகளுக்கு கைகாட்டி நாமே தலைவர்களாய் வாழப்போகிறோமா?...
271
1,851
4,098
91,566