இன்று (06.10.2026) மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் தலைமையில், வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.மு.மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., இணை ஆணையாளர் (கல்வி) திருமதி க. கற்பகம், இ.ஆ.ப., துணை ஆணையாளர்கள் திரு.தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், இ.ஆ.ப., (சுகாதாரம்), திருமதி சித்ரா விஜயன், இ.ஆ.ப., (வருவாய் (ம) நிதி), வட்டார துணை ஆணையாளர்கள் திருமதி ஸ்வேதா சுமன், இ.ஆ.ப., (வடக்கு), திரு.எச்.ஆர்.கௌ ஷிக், இ.ஆ.ப., (மத்தியம்), திரு.அஃதாப் ரசூல், இ.ஆ.ப., (தெற்கு) மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
#ChennaiCorporation |
#HeretoServe|
#NammaChennai
@MawsTamilNadu