தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இருந்து அதிக மக்கள் வளைகுடா நாடுகளில் வேலை செய்கிறார்கள்..வடமாநில மக்களும் அங்கே வேலை செய்கிறார்கள்..
இப்போது துபாயில் மருந்து சீட்டுகளில் தமிழில் எழுதவேண்டுமா அல்லது ஹிந்தியில் எழுத வேண்டுமா..
எது பொது மொழி என்பதே இங்கே பிரச்சினை..அது புரியாம🤡
Long Post 🚨
இந்த கேவலமான அரசியலைப் பேசக்கூடாதுன்னு நினைச்சு தான் அரசியல் பதிவுகள் போடுறதே இல்லை. ஆனா சமீபகாலங்கள்ல இந்த ஹிந்தி எதிர்ப்பு என்ற பெயரில் நடக்குற selective outrage மட்டும் எனக்கு புரியவே மாட்டேங்குது.
இதை இப்போ பேசுவதற்குக் காரணமே, அரசு மருத்துவமனைகளில் மருந்து கொடுக்கும் cover-ல் தமிழ், ஆங்கிலத்துடன் Hindi-யும் இருக்கிறது என்று ஒரு அரசியல் பிரச்சனை கிளப்பியது தான்.
இதில் எனக்கு புரியாதது என்னவென்றால், Hindi அதிகம் பேசப்படும் தொழில் நகரங்கள், பெருநகரங்களில், English கூட தெரியாத ஒருவருக்கு அவர் புரிந்துகொள்ளும் மொழியிலும் மருந்து எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அச்சிட்டு கொடுப்பதில் என்ன தவறு இருக்கிறது?
அதில் Hindi இருப்பதால் தமிழ் அழிந்துவிடும் என்று எனக்கு தோன்றவில்லை.
நான் Hindi-யை திணிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. எல்லா இடங்களிலும் Hindi பெயர் பலகை வைக்க வேண்டும் என்றும் சொல்லவில்லை. தமிழுக்கு உரிய இடம் இருக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
ஆனா நம்மைச் சுற்றி நடக்குற நிதர்சனத்தையும் ஏற்றுக்கொள்ளணும்.
இன்று Chennai-யில் Metro வேலைகளாக இருக்கட்டும், கட்டுமான வேலைகளாக இருக்கட்டும், பல physical வேலைகளில் வடமாநிலத் தொழிலாளர்களின் உழைப்பு இல்லாமல் இந்த வளர்ச்சி நடந்திருக்காது.
Madras படத்துல ஒரு பாடலில் வரும் ஒரு வரி நினைவுக்கு வருகிறது. Ripon Building, High Court எல்லாம் வெறும் செங்கல், மணல் மட்டும் இல்ல, அதை கட்டியவர்களின் ரத்தமும் வியர்வையும் சேர்ந்ததுதான்.
அதே போல் தான் இன்று தமிழகத்தில் நடக்கும் மிகப்பெரிய Project -களில் ஒன்றான சென்னை மெட்ரோ 95% கட்டப்பட்டது ஹிந்தி workers ஆல் தான். அவர்களுடைய வியர்வையும் ரத்தமும் சாவும் அதில் அடங்கியிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
அவர்களின் உழைப்பு நம்முடைய வளர்ச்சிக்கு தேவை. ஆனால் அவர்களுடைய மொழி மட்டும் வந்துவிட்டால் அது அரசியல் பிரச்சனையாகி விடுகிறது.
அதேபோல எந்த ஒரு குறிப்பிட்ட கட்சியையும் சொல்லவில்லை. எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி. அவர்கள் நடத்தும் கடைகள், நிறுவனங்களில் குறைந்த சம்பளத்தில் அதிக நேரம் வேலை செய்யக்கூடிய Hindi-speaking workers-ஐ வைத்திருக்கிறார்களா இல்லையா என்று மனசாட்சியைத் தொட்டுக் கேட்டுப் பாருங்கள்.?
தமிழை அதிகமாக நேசிக்கும் இந்த போராளிகள் ஏன் தமிழை மட்டும் பேசும் தொழிலாளர்களை வேலைக்கு வைக்கவில்லை?
அதைவிட முக்கியமான கேள்வி - தமிழை உண்மையிலேயே வளர்க்க கடந்த பத்து வருடங்களில் நம்முடைய அரசாங்கங்கள் என்ன செய்திருக்கின்றன?
பெரிய பெரிய தமிழ் போட்டிகள், தலைவர்களின் பிறந்தநாள் விழாக்கள், பேச்சுகள் எல்லாம் வேண்டாம். சாதாரணமாக நம்மைச் சுற்றிப் பாருங்கள்.
இன்று பல குழந்தைகளுக்கு தமிழில் ஆர்வம் குறைந்து கொண்டிருக்கிறது. சில குழந்தைகளுக்கு தமிழ் எழுத்துக்களே சரியாக தெரியவில்லை. பல பெற்றோர்கள் குழந்தைகளை மெட்ரிக், CBSE என்று சேர்க்கிறார்கள். அதில் அவர்கள் குறைவான மதிப்பெண் எடுப்பது எந்த படத்தில் என்றால் நிறைய பேருக்கு தமிழ் தான் இருக்கும். இதே பெற்றோர்களில் நிறைய பேர் தங்கள் குழந்தைகளுக்கு Hindi classes சேர்த்து Hindi Langugage exam எழுத வைக்கிறார்கள்.
இது எல்லாமே நம்முடைய கண் முன்னாடி நடக்குற நிதர்சனம்.
இங்கே வேலை பார்க்க வரும் பலருக்கு English தெரியாது. சிலருக்கு தமிழ் தெரியாது. Hindi மட்டுமே தெரியும். அவர்களுடைய வாழ்வாதாரத்துக்காக Hindi-யில் பேசிக்கொள்வதும், அவர்களுக்கு புரியும் வகையில் சில விஷயங்களை Hindi-யில் கொடுப்பதும் தவறு என்று எனக்கு தெரியவில்லை.
அவர்களின் உழைப்பை நம்முடைய வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கிட்டு, அவர்களின் மொழியை மட்டும் நம்முடைய அரசியலுக்காக எதிர்க்காதீங்க.
தமிழை வளர்க்க வேண்டுமென்றால் தமிழை குழந்தைகளுக்கு பிடிக்க வைக்க வேண்டும். தமிழில் படிக்கவும், எழுதவும், பேசவும் பெருமையை உருவாக்க வேண்டும்.
ஒரு medicine cover-ல் Hindi இருந்ததால் தமிழ் அழியாது. ஆனால் தமிழ் மீது அக்கறை இருப்பதாக சொல்லிக்கொண்டே, தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல என்ன செய்கிறோம் என்பதைப் பற்றி பேசாமல் இருப்பது தான் எனக்கு உண்மையான கவலை.
இது Hindi-க்கு ஆதரவான பதிவு இல்லை. இது selective outrage-க்கு எதிரான பதிவு.
நாகரிகமான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அசிங்கமாக comment செய்ய நினைப்பவர்கள், தயவு செய்து நீங்களே என்னை block செய்துகிட்டு போயிடுங்க.