ஒருமுறை ஜோதி சீசனில் நண்பன் இயக்குநர் அ.வினோத்துடன் சபரிமலைக்குப் போயிருந்தேன். கூட்டம் ஆரவாரித்தது. ‘சாமியே சரணம் ஐயப்பா’ என்கிற கோஷம் பெரிதாக, ஜோதி தெரியத் தொடங்கியது. வினோத் ஜோதி பார்க்க, நான் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது நான் எடுத்த புகைப்படம் இது… அறைக்கு வந்த பிறகு வினோத்திடம் காட்டினேன். எதைப் பார்த்தும் ரசிக்கிற சிலிர்க்கிற வழக்கம் இல்லாத வினோத், அந்தப் புகைப்படத்தை நெடுநேரம் பார்த்துக் கொண்டிருந்தார். வேறேதும் சொல்லவில்லை. அடுத்த இரண்டாவது வருடம்… அவர் பிறந்த நாளில் வினோத் கழுத்தில் நான் ஒரு பிரமாண்ட மாலை போட, “இதெல்லாம் வேணாம். சபரிமலையில் நீ எடுத்த போட்டோவை எனக்கு வாட்ஸாப் பண்ணு. அதுதான் எனக்கு நீ கொடுக்கும் சிறந்த பரிசு” என்றார். கொஞ்சமும் தாமதிக்காமல் அவருக்காக நான் பிரேம் செய்து எடுத்து வந்திருந்த அந்தப் புகைப்படத்தை நீட்டினேன். “அதான்யா நீ…” என ஆரத் தழுவிக் கொண்டார் வினோத். இன்று வினோத் பிறந்த நாள். பார்க்கவில்லை, பேசவில்லை, வாழ்த்தவில்லை; எந்தப் பரிசும் கொடுக்கவில்லை. நண்பன் நினைவாய் என் தென்னந்தோப்பில் இன்று நடப்படுகிற ஒரு மாங்கன்றில் ஜோதி தெரிகிறது. சாமியே சரணம் ஐயப்பா…

Sep 5, 2026 · 1:31 PM UTC

11
36
675
31,275
Sort replies: Relevant Recent Liked
Replying to @erasaravanan
🌺♥️♥️♥️
173
Replying to @erasaravanan
லோகேஷ்-க்கு எப்டி @MrRathna -வோ வினோத்க்கு இவரு
6
1,265
Replying to @erasaravanan
வினோத் ஜோதி பார்க்க, நான் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன் .. யார் சாமி நீங்க 😳😂..
1
208
Replying to @erasaravanan
Happy Monday to respected director Era Saravanan sir from an auto driver Chennai
5
Replying to @erasaravanan
Looks knowledge and learning curve you have, even then how you slip away in movies...
749
Replying to @erasaravanan
ஐயா உங்களின் அடுத்த படைப்புக்கு நான் மிகவும் ஆவலாக காத்திருக்கிறேன்
1
1,217
Replying to @erasaravanan
Matravar pugazh paduvathai first niruthunga oru vati solalaam rendu vati solalam ela vatiyum ethana solinee iruka kudathu neengalum Director thana Nala script oda vanga ... Photo potu praise pandra velaya first vidunga ayya..
778
Replying to @erasaravanan
கிராமத்து சப்ஜெக்ட்ல முரட்டு படம் குடுக்கலாம் நீங்க
1,136
Replying to @erasaravanan
❤️
667