முன்னாள் பத்திரிகையாளன்... கத்துக்குட்டி, உடன்பிறப்பே, நந்தன் படங்களின் இயக்குநர்...

Chennai
‘நந்தன்’ படம் பார்த்து சசிகுமாரிடம் கண் கலங்கிய தலித் பஞ்சாயத்து தலைவர்கள்… படத்தில் காட்டப்பட்டுள்ள அத்தனை காட்சிகளும் தங்கள் வாழ்வில் நடந்த நிஜங்களாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார்கள். நிஜ நந்தன்களின் கண்ணீர், நிச்சயம் உங்கள் மனதை உலுக்கும்… #Nandhan #நந்தன்
126
1,458
5,626
255,635
ஓர் எளிய படம் நிகழ்த்திய வலிமையான வெற்றி… #Nandhan #2YearsOfNandhan
3
20
87
1,482
ஒரு படத்தின் வெற்றி என்பது வசூலிலும் பாராட்டுகளிலும் மட்டுமல்ல, அது எத்தகைய விளைவை இந்த மண்ணில் ஏற்படுத்தியது என்பதிலும் இருக்கிறது… #2YearsOfNandhan #Nandhan
10
68
387
6,166
அலுவலகக் கதவு தட்டப்பட்டது. திறந்தால் எதிரே சூரி அண்ணன். ‘மண்டாடி’ சுனாமியாய் சுழற்றி அடித்துக் கொண்டிருக்கையில், அவரிடம் போனில் பேசவே அவகாசம் கிடைக்க வாய்ப்பில்லை. அப்படியிருக்க எப்படி நேரில்? அதிர்ச்சியும் வியப்புமாய் அண்ணனுக்கு வாழ்த்துச் சொன்னோம். அவருடைய போன் அலறிக்கொண்டே இருந்தது. விமான நிலையத்தில் இருந்தே நேரே வந்திருப்பார் போல… உதவியாளர் சுரேஷ் ஓடிவந்து, “அண்ணன், உங்களைச் சந்திக்க ஆபிஸ்ல நிறைய பேர் வெயிட் பண்றாங்க…” என்றார். எதையும் சட்டை செய்யாமல் சூரி அண்ணன் அரை மணி நேரத்துக்கும் மேல் அலுவலகத்தில் அமர்ந்து, உரையாடி, சிரித்து, நெகிழ்ந்து கிளம்ப மனமே இல்லாமல் காருக்கு போனார். அப்போதும் போக விரும்பாமல் ரோட்டிலேயே கையைப் பிடித்தபடி பேசிக்கொண்டே நின்றார். கூட்டம் கூடிவிட்டது. “அண்ணா, மண்டாடி சூப்பர்…” எனக் கோஷம் கிளம்பியது. புகைப்படம் எடுக்க ஆட்கள் முட்டி மோதினார்கள். “அண்ணே, நிறைய பேசனும்ணே… நேரமே இல்ல… ஓடிக்கிட்டே இருக்கேன். குடும்பத்தை பார்த்தே பல நாளாச்சுண்ணே…” கும்பிட்டபடி அண்ணன் கிளம்பினார். எத்தகைய உயரம் எட்டினாலும் இந்தத் தன்மையும் எளிமையும் சூரி அண்ணனைவிட்டு எப்போதுமே போகாது போலிருக்கிறது. ஒரு மின்னல்போல் வந்து இந்தளவுக்கு நெகிழ்த்திவிட்டுப் போன அண்ணனின் திசை பார்த்து நின்றேன். பரிபூரண அன்பின் அடையாளமாய் அந்த கருப்பு நிற கார் போய்க்கொண்டிருந்தது. #மண்டாடி #Mandaadi @sooriofficial
10
32
690
34,511
‘நந்தன்’ ரிலீஸாகி 2 வருசம் ஆச்சு… அடுத்த படம் என்ன சார்? 👇
23
47
528
19,204
‘நந்தன்’ பயணம் இன்னும் முடியவில்லை… #2YearsOfNandhan @SasikumarDir @erasaravanan @thondankani @EraEntertainment
2
38
180
52,318
இரா.சரவணன் retweeted
2 YEARS OF A STORY THAT STAYED. ❤️ From its powerful emotions to its unforgettable moments, #Nandhan continues to hold a special place in the hearts of audiences. Celebrating 2 remarkable years of #Nandhan!✨ #2YearsOfNandhan @SasikumarDir @erasaravanan @thondankani @GhibranVaibodha @suruthisamy8 @saranRV1 @EraEntertain @tridentartsoffl #BalajiSakthivel @thinkmusicindia @nelson_edit
3
15
1,422
தந்தையை இழந்தவர்களுக்குத் தந்தை நிகர் மாமனார் கிடைப்பது வரம். என் மாமனார் எனக்கு அந்த வகைக் கொடுப்பினை. “யப்பா…” என அவர் என்னை அழைக்கும்போது உயிர் உருகும். என் மனைவிக்கும் எனக்கும் பிரச்னை வந்தால் எப்போதுமே என் பக்கம்தான் நிற்பார். எல்லோர் மீதும் பேரன்பு காட்டுகிற மனிதர். சில வருடங்களுக்கு முன் காலில் ஒரு பாதிப்பு ஏற்பட்டு கேன்சராக மாறி முழங்காலுக்குக் கீழ் எடுக்க வேண்டிய சூழல். நிலைமையை மருத்துவர்கள் எங்களுக்குச் சொல்ல, மாமாவிடம் எப்படி அதனைச் சொல்வது எனத் தத்தளித்தோம். ஒருகட்டத்தில் அவருக்கே தெரியவர, அத்தனை காலம் தன்னைத் தூக்கிச் சுமந்த காலை இரு கைகளாலும் பிடித்துக்கொண்டார். விரல்களுக்குச் சொடக்கு எடுத்தார். இனி இந்தக் கால் நம் உடம்பில் இருக்காது என்பதை யார் மனம்தான் ஏற்கும்? “கவலைப்படாதீங்க மாமா… செயற்கைக் கால் வைச்சுக்கலாம்” என்றேன். நிமிர்ந்தவர், லேசாகச் சிரித்தார். “கால் போனா என்ன கை போனா என்ன? நீங்க இருக்கிறப்ப எனக்கென்னப்பா கவலை…” என்றார். அறுவை சிகிச்சை முடிந்து செயற்கைக் கால் மாட்டியதும் பழைய உற்சாகத்திற்குச் சட்டென மாறிக் கொண்டார். எதையும் இழப்பெனக் கருதாத அந்த மனநிலை என்னை எப்போதுமே வியக்க வைக்கும். வயது முதிர்வால் அவ்வப்போது மருத்துவமனை அல்லாட்டாங்கள்… ஆனாலும் எதையும் அவஸ்தையாகக் காட்டிக் கொள்ளாமல், அத்தையை மட்டுமே அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்குப் போய் வருவார். யாரையும் சிரமப்படுத்திவிடக் கூடாது என்பதில் இருவருமே அவ்வளவு கவனமானவர்கள். அத்தை, என் அப்பாவின் உடன்பிறந்த தங்கை. மரியாதை நிமித்தம் இன்று வரை அத்தையும் நானும் பேசிக் கொண்டதில்லை. நிமிர்ந்துகூடப் பார்த்ததில்லை. “தம்பி பொறந்தப்ப மொத ஆளா நாந்தான் கைநீட்டி வாங்கினேன். ஆம்பளை புள்ளைன்னு தெரிஞ்ச உடனே பரவசத்துல நர்ஸ் கையில் அம்பது ரூபா காசு கொடுத்தேன். தம்பியே எனக்கு மருமகனா வரும்னு நினைச்சதே இல்ல…” என அவ்வப்போது நெகிழ்வார் அத்தை. தீவிர வாசிப்பாளர். எப்போதும் ஏதாவது ஒரு புத்தகம் கையில் இருக்கும். இவருடைய வாசிப்புப் பழக்கம்தான் வம்சாவழியாய் எனக்கும் வந்திருக்குமோ என்னவோ… தாய் நிகர் அத்தைக்கும் தந்தை நிகர் மாமாவுக்கும் நேற்று திருமண நாள். மிக எளிமையாகக் கொண்டாடி வாழ்த்து பெற்றோம். எளிய புன்னகையில் நிறைந்திருக்கிறது 49 வருட இணை வாழ்வு!
35
38
490
9,535
‘மண்டாடி’ காலத்திற்கும் நின்றாடும்! ‘மண்டாடி’ கதை கேட்ட நாளில் இருந்து அதுகுறித்த சிலாகிப்பை சூரி அண்ணன் சொல்லிக்கொண்டே இருப்பார். ஷூட்டிங்கில் கயிறு அறுத்து கைகளில் ரத்தம் கொட்ட நின்றார். படகில் சறுக்கி கால் உடைந்து நூலிலையில் தப்பினார். நேரில் சந்திக்கையில் அந்தக் காயங்களைக் காட்டினார். ஆறிய காயங்களைப் பார்க்கவே அவ்வளவு பதட்டமாக இருந்தது. “இந்தளவுக்கு ரிஸ்க் எடுக்கனுமாண்ணே?” என்றேன். “இல்லண்ணே இன்னும் ரெண்டு மூணு வருசம் கழிச்சு இந்தக் கதை வந்திருந்தா என்னோட சக்திக்கு பண்ணி இருக்க முடியுமான்னு தெரியலை. உடம்புல வலு இருக்கிறப்பவே இந்த மாதிரி கதைகளைப் பண்ணிப் பார்த்திடனும்ணே…” என்றார். படத்தின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியையும் சிறுகுழந்தைபோல் சொல்லிச் சிலிர்ப்பார். இதுகாலம் வரை எந்தப் படத்தின் ரிசல்ட்டுக்கும் அவர் இந்தளவுக்குத் தவம் கிடந்ததில்லை. நேற்று இரவு பேசிக் கொண்டிருந்தபோதும் அவருக்கு அவ்வளவு பதட்டம். இன்று ‘மண்டாடி’ பார்த்தேன். அத்தனை பேரின் மாபெரும் உழைப்புக்கான மகசூலைக் கொட்டிக் கொடுத்திருக்கிறது படம். களமாய் கதையாய் பேய்த்தனமான உருவாக்கமாய் படம் சிலிர்க்க வைக்கிறது. சூரி அண்ணனின் ரத்தம் தோய்ந்த கைகளுக்கு ஆயிரம் முத்தங்கள் கொடுக்கலாம். அப்படியொரு அதிரிபுதிரி பாத்திரம். அடக்கி வாசித்து வெடிக்கும் தருணங்களில் பிரளயம் கிளப்பி இருக்கிறார். காமெடியனாக, கதை நாயகனாக, கதாநாயகனாக அடுத்தடுத்து அடியெடுத்து வைக்கும் சூரி அண்ணன் ‘மண்டாடி’ படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக உச்சம் தொட்டிருக்கிறார். நெஞ்சை நிமிர்த்துகிற வெற்றி. இயக்குநர் மதிமாறன், ஒளிப்பதிவாளர் கதிர் சார் உள்ளிட்ட உழைத்தோர் அத்தனை பேருக்கும் உளமார்ந்த பாராட்டுகள். ‘மண்டாடி’ தமிழ் சினிமாவின் அசாத்திய படைப்பாக எந்நாளும் நின்றாடும்!
7
31
257
9,342
ஒருமுறை ஜோதி சீசனில் நண்பன் இயக்குநர் அ.வினோத்துடன் சபரிமலைக்குப் போயிருந்தேன். கூட்டம் ஆரவாரித்தது. ‘சாமியே சரணம் ஐயப்பா’ என்கிற கோஷம் பெரிதாக, ஜோதி தெரியத் தொடங்கியது. வினோத் ஜோதி பார்க்க, நான் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது நான் எடுத்த புகைப்படம் இது… அறைக்கு வந்த பிறகு வினோத்திடம் காட்டினேன். எதைப் பார்த்தும் ரசிக்கிற சிலிர்க்கிற வழக்கம் இல்லாத வினோத், அந்தப் புகைப்படத்தை நெடுநேரம் பார்த்துக் கொண்டிருந்தார். வேறேதும் சொல்லவில்லை. அடுத்த இரண்டாவது வருடம்… அவர் பிறந்த நாளில் வினோத் கழுத்தில் நான் ஒரு பிரமாண்ட மாலை போட, “இதெல்லாம் வேணாம். சபரிமலையில் நீ எடுத்த போட்டோவை எனக்கு வாட்ஸாப் பண்ணு. அதுதான் எனக்கு நீ கொடுக்கும் சிறந்த பரிசு” என்றார். கொஞ்சமும் தாமதிக்காமல் அவருக்காக நான் பிரேம் செய்து எடுத்து வந்திருந்த அந்தப் புகைப்படத்தை நீட்டினேன். “அதான்யா நீ…” என ஆரத் தழுவிக் கொண்டார் வினோத். இன்று வினோத் பிறந்த நாள். பார்க்கவில்லை, பேசவில்லை, வாழ்த்தவில்லை; எந்தப் பரிசும் கொடுக்கவில்லை. நண்பன் நினைவாய் என் தென்னந்தோப்பில் இன்று நடப்படுகிற ஒரு மாங்கன்றில் ஜோதி தெரிகிறது. சாமியே சரணம் ஐயப்பா…
11
36
675
31,179
இயக்குநர் சற்குணம் சாரின் ‘களவாணி’ படம் பார்த்த நாளில்தான் இப்படி வியந்து போனேன். கதை, களம், கதாபாத்திர வார்ப்பு என அத்தனையிலும் முத்தாய்ப்பு பண்ணுகிற படமாக என்னை கொண்டாட வைத்துவிட்டது ‘மொத ராத்திரி’ படம். “இவர்கள் யாருமே நடிகர்கள் அல்ல… அப்படியே அந்தக் கிராமத்து மக்கள்…” எனச் சொல்கிற அளவுக்கு கதாபாத்திரங்களைத் தேர்வு செய்த விதம் மகத்தானது. அழகும் சிவப்பும் நாயக பிம்பமும் கொண்ட நட்சத்திரங்களின் பின்னால் அலையாமல், அவர்களின் தேதிக்காகக் காத்திருக்காமல் இயல்பு மாறாத மனிதர்களை அப்படியே திரையில் உலவ விட்டிருக்கிறார்கள். கதாநாயகன் ரிஷிகாந்த் சாதாரண ஒரு பையனாக நமக்கு அறிமுகமாகி, படிப்படியாக நம் மனதில் நின்று நெருக்கமாகி கலங்கடிக்கிறார். ‘சிறை’ படத்திலேயே நெஞ்சம் ஈர்த்த அனீஷ்மாவுக்கு இந்தப் படம் இன்னுமொரு மைல்கல். தத்தளிக்க வைக்கிற நடிப்பில் பட்டையைக் கிளப்பி இருக்கிறார். சேத்தன் சார் தொடங்கி இயக்குநர் ஏ.வெங்கடேஷ் சார் வரை எல்லா கதாபாத்திரங்களும் அந்தக் கிராமத்தின் இன்னோர் ஆல மரங்கள். மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டார் என இரு தரப்பிலும் நடக்கும் களேபரங்கள் அனைத்துமே நம் எல்லோர் வாழ்விலும் வந்து போனவைதான். அதனைக் கலகலப்பும் கொண்டாட்டமுமாய் இயக்கி இருக்கிறார் தம்பி ராஜா கருப்பசாமி. அவர் இதில் முன்வைத்திருக்கும் அரசியலும் சாதாரணமானது அல்ல. பெண் கல்வி தொடங்கி சாதிச் சங்கடம் வரை எண்ணற்ற விஷயங்களைச் சமூகப் பொறுப்போடு பேசி இருக்கிறார். பரப்புரையாக இல்லாமல் நியாயத் தராசை நம் நெஞ்சுக்குள் தானாக நிறுத்திப் பார்க்கிற காட்சிகள் அவை. “இப்போகூட பைக்ல தள்ளிதானே சார் உட்கார்ந்து இருக்கீங்க?” என ஏ.வெங்கடேஷிடம் ஓர் இளைஞன் கேட்கிற கேள்வி, எப்பேர்ப்பட்ட சாதி வெறியர்களையும் கலங்கடிக்கும். இயக்குநருக்கு நிகராய் இந்தப் படத்தில் கோலோச்சி இருக்கும் இன்னொரு தூண் இசையமைப்பாளர் பரத் சங்கர். யார்க்கர் பந்தில் சிக்ஸர் அடிக்கும் சாமர்த்தியத்துடன் மிக சிக்கலான கதையில் பேயாட்டம் ஆடி இருக்கிறார். ஹீரோயின் பாத்ரூமிலிருந்து தப்பிக்க முயல்கிற காட்சி ஒரு சோறு உதாரணம். தம்பி பரத் சங்கர் வாழ்வில் மிக முக்கிய படமாக ‘மொத ராத்திரி’ நிச்சயம் நிலைத்திருக்கும். இயக்குநர் ராஜா கருப்பசாமி உள்ளிட்ட மொத்த படக்குழுவினரையும் அழைத்து வந்து கிடா வெட்டி விருந்து வைத்தாலும், இந்தப் பரவச மனநிலை ஆசுவாசம் அடையுமா எனத் தெரியவில்லை. இப்பேர்ப்பட்ட படத்தை மக்கள் மத்தியில் ஊடகங்கள் இன்னும் பெரிதாகக் கொண்டுபோய்ச் சேர்த்திருக்க வேண்டும். இப்போதும் தாமதமில்லை… எப்படியாவது ‘மொத ராத்திரி’ படத்தைத் திரையில் பார்த்துக் கொண்டாடி விடுங்கள்… #மொதராத்திரி #RajaKaruppasamy @MythriOfficial @iam_rishikanth #AnishmaAnilkumar @bharathsankar12 @TSeries @Ags_production
4
28
217
16,685
2014 காலகட்டம். நான் கத்துக்குட்டியாய் ‘கத்துக்குட்டி’ படத்தை இயக்கிக் கொண்டிருந்தேன். ஜிஞ்சர் என்கிற பாத்திரத்தில் #சூரி அண்ணன் நடித்துக் கொண்டிருந்தார். படம் முடிகிற நிலையில் ஒருநாள் இருவரும் காலாற நடந்தோம். “அண்ணன், இனி உங்களுக்கு காமெடி கேரக்டர்ஸ் செட்டாகாது. ஹீரோவா பண்ண ஆரம்பிச்சிடுங்க…” என்றேன். இரண்டு அடி தூரம் பின்னே போன சூரி அண்ணன், “ஏண்ணே ஏம்பொழப்புல மண்ண போடப் பாக்குறீங்க?” என்றார் பதறிப்போய். “அண்ணே, நான் உங்களை உசுப்பேத்தவோ புகழ்ந்து தள்ளவோ இப்படி சொல்லலை. என் படத்துல மட்டுமில்ல… பல படங்களில் நீங்க நடிக்கிறப்பவும் நான் உங்களைக் கவனிக்கிறேன். எதுவுமே உங்களுக்குப் போத மாட்டேங்குது. இன்னும் நல்லா பண்ணி இருக்கனும்கிற உணர்வுல நீங்க தத்தளிக்கிறீங்க. உங்களுக்கு இருக்கிறது பெரிய பசி. அதுக்கு காமெடி பாத்திரங்கள் சரியான தீனியா இருக்காது. ஒரு முழுப் படத்தையும் தாங்கிப் பிடிக்கக்கூடிய சக்தி உங்க நடிப்புக்கு இருக்கு. அதனால ஹீரோவா பண்ணினாத்தான் உங்க பசி அடங்கும்ணே…” என்றேன். “அண்ணே, எச்சியை முழுங்கிற மாதிரி நாம இப்படி பேசிக்கிட்டதையும் முழுங்கிடுவோம். ஒன்றிரண்டு ஹீரோக்கள் தயவுல ஒரு காமெடியனா என் வாழ்க்கை நல்லா ஓடிக்கிட்டு இருக்கு. அதுக்கு பங்கம் வந்திடக் கூடாதுண்ணே” எனக் கும்பிட்டார் சூரி அண்ணன். ஆனாலும் நான் அடங்கிய பாடில்லை. ‘கத்துக்குட்டி’ பட புரோமோஷனுக்கு எனச் சொல்லி ஸ்டைலிஷான உடைகளை அண்ணனுக்காக வாங்கி வந்து அவர் லுக்கையும் மாற்றி ஸ்டில் ஷூட் எடுத்தோம். ஜீன்ஸ், டீ ஷர்ட்டில் அண்ணன் ரகளையாக இருந்தார். ‘யாரிடமும் காட்டக் கூடாது’ என அண்ணனிடம் உத்திரவாதம் கொடுத்து எடுத்திருந்த புகைப்படங்களை அவருக்குத் தெரியாமல் அவர் பிறந்த நாளுக்கான போஸ்டர்களாக மாற்றினோம். பலதரப்பட்ட ஆட்களும் போன் பண்ணி, “சூரி, போஸ்டர் நல்லா இருக்கு…” எனச் சொல்ல, அலறியடித்து அண்ணன் தெரு பக்கம் வந்து பார்த்திருக்கிறார். அடுத்த அரை மணி நேரத்தில் என் வீட்டுக்கு வந்தார். “இந்த வருச பிறந்த நாளை நான் மறக்க முடியாதுண்ணே… என்னோட போட்டோஸ் பார்க்க எனக்கு சந்தோஷமாத்தான் இருக்கு. ஆனா, இந்தப் பயலுக்கு இதெல்லாம் ஒரு கேடான்னு யாரும் சொல்லிடுவாங்களோன்னு பயமா இருக்குண்ணே…” என்றார் கலங்கிப்போய். அவர் தரப்பிலான ஆட்கள் மூலமாக அவருடைய போஸ்டர்களை அவரே கிழிக்கவும் செய்தார். விவரமறிந்து நான் வருத்தப்பட்டபோது, “வேணாம்ணே…” என்றார் சங்கடத்துடன். இன்று திரும்பிய திசையெங்கும் சூரி அண்ணன் கதாநாயகனாகக் காட்சியளிக்கும் ‘மண்டாடி’ போஸ்டர்கள்… கதை நாயகனாக, கதாநாயகனாக, தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகனாக ஆன்லைன் முழுக்க சூரி அண்ணனின் முகம்… எவரையும் மிதிக்காமல், எவர் கண்ணையும் உறுத்தாமல் உழைப்பும் அர்ப்பணிப்புமாய் உயர்ந்து நிற்கும் @sooriofficial அண்ணனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். ‘மண்டாடி’ படம் உங்களின் உச்ச வெற்றியாக அமைய முருகப்பெருமானிடம் மன்றாடி வேண்டுகிறேன் அண்ணன்🙏
8
30
512
40,717
இரா.சரவணன் retweeted
ஒரு நீண்ட காத்திருப்பின் கடைசி இரவு. வீட்டைக் காலி செய்த பிறகும் சில நாட்களுக்கு அந்தச் சாவியை நம்மிடம் வைத்திருப்போம். அந்த வீட்டில் இனி நம்முடைய பொருட்கள் எதுவும் இருக்காது. ஆனாலும் பழக்கத்தில் கை பாக்கெட்டுக்குள் போகும். கடந்த சில வருடங்களாக என் மனதிலும் அப்படி ஒரு சாவி இருந்தது. திறக்க முடியாத ஒரு கதவின் சாவி. தூங்கும்போதும் இருந்தது. சாப்பிடும்போதும் இருந்தது. வேறு சந்தோஷங்களின் நடுவிலும் இருந்தது. சில சமயம் அது இருப்பதையே மறந்துவிட்டேன் என்று நினைப்பேன். ஆனால் வாழ்க்கை கொஞ்சம் அமைதியாகும் ஒவ்வொரு முறையும், பாக்கெட்டுக்குள் இருந்து அதன் சத்தம் கேட்கும். இன்னும் முடியவில்லை. அவ்வளவுதான். முடிக்கப்படாத ஒன்று நம்மிடம் தினமும் பேச வேண்டியதில்லை. அது பேசாமல் இருப்பதே போதும். நம்முடைய எல்லா சந்தோஷங்களுக்கும் பின்னால் ஒரு காலியான நாற்காலியைப் போட்டு வைத்துவிடும். நாம் சிரிப்போம். அது அங்கேயே இருக்கும். வேறு வெற்றிகளைக் கொண்டாடுவோம். அப்போதும் அது அங்கேயே இருக்கும். உலகம் நம்மை பல மைல்கள் முன்னால் அழைத்துச் சென்றிருக்கும். ஆனால் நமக்குள் மட்டும் ஒரு மனிதன் தொடங்கிய இடத்திலேயே நின்று, “இதை மட்டும் முடித்துவிட்டு வா…” என்று காத்துக்கொண்டிருப்பான். அவனைத் தாண்டி நம்மால் முழுமையாக வாழ முடியாது. ஏனென்றால் சில பயணங்கள் இலக்கை அடைவதற்காக ஆரம்பிப்பதில்லை நம்மிடமிருந்து இறங்கிப்போவதற்காக ஆரம்பிக்கின்றன. இன்று #OnceMore திரையரங்குகளுக்கு வருகிறது. இதை எழுதும்போது hit, flop என்ற இரண்டு வார்த்தைகளும் எனக்கு மிகவும் தொலைவில் கேட்கின்றன. நாளை அவை முக்கியமாக இருக்கலாம். இன்று இல்லை. இன்று நான் நிற்பது ஒரு முடிவின் அருகில். பல வருடங்களாக இறுக்கமாகப் பிடித்திருந்த ஒன்றை விட்ட பிறகும், உள்ளங்கை மட்டும் இன்னும் அதே வடிவத்தில் மூடியிருப்பதுபோல் இருக்கிறது. சில பாரங்கள் இறங்கியதை உடல் உடனே நம்புவதில்லை. நிம்மதி வருவதற்கு முன்பு ஒரு வெறுமை வருகிறது. இத்தனை நாளும் இதைச் சுமந்த நான், இனி எதைச் சுமப்பேன்? அந்தக் கேள்வியின் அருகில்தான் இப்போது உட்கார்ந்திருக்கிறேன். இந்தப் பயணத்தில் எத்தனை இரவுகள் என்னிடமிருந்து போயின என்று தெரியாது. எத்தனை முறை “எல்லாம் சரியாகிவிடும்” என்று எனக்கே தெரியாமல் மற்றவர்களிடம் சொல்லியிருக்கிறேன் என்றும் தெரியாது. ஆனால் ஒன்று தெரியும். நான் தொடங்கிய இடத்தில் இருந்த மனிதனும், இன்று இங்கே நிற்கும் மனிதனும் ஒரே ஆள் இல்லை. இந்தப் படம் திரைக்கு வருவதற்குள், அதோடு சேர்ந்து என்னுடைய சில வருடங்களும் தயாராகியிருக்கின்றன. அவற்றையும் இன்று release செய்கிறேன். நான் இழந்த தூக்கங்களை. யாரிடமும் சொல்லாத பயங்களை. தனியாக விழுங்கிய அவமானங்களை. நடக்கும் என்று தெரியாமலேயே நம்பிக்கொண்டிருந்த முட்டாள்தனத்தை. “இன்னும் கொஞ்சம்” என்று சொல்லிச் சொல்லி என்னிடமிருந்து நானே கடன் வாங்கிய நாட்களை எல்லாவற்றையும். இன்று theatre கதவு திறக்கும்போது ஒரு படம் மட்டும் உள்ளே போகவில்லை. இத்தனை வருடங்களாக வீடு திரும்பாமல் இருந்த என்னுடைய ஒரு பகுதியும் அதற்குள் போகிறது. அதனால்தான் இன்று சத்தமாக அழ வேண்டும் போலிருக்கிறது. துக்கம் இல்லை. மகிழ்ச்சி மட்டும் என்றும் சொல்ல முடியவில்லை. சில கண்ணீருக்கு பெயர் வைக்க முடியாது. ரொம்ப நேரம் மழையைத் தாங்கிக்கொண்டிருந்த மேகம், கடைசியில் உடைந்து பெய்யுமே அவ்வளவுதான். நாளை இந்தப் படத்திற்கு உலகம் என்ன தீர்ப்பு எழுதினாலும் எழுதட்டும். இன்று இரவு எனக்கான தீர்ப்பை மட்டும் நான் எழுதிக்கொள்கிறேன். நீ விட்டுவிடவில்லை. நீ தொடங்கியதை முடித்து வைத்துவிட்டாய். பல வருடங்களாக என் பாக்கெட்டுக்குள் சத்தமிட்ட அந்தச் சாவியை இன்று கதவிலேயே விட்டுவிட்டு வருகிறேன். திரும்பி வருவதற்காக அல்ல. இனி அந்தக் கதவு எனக்காகத் திறக்க வேண்டியதில்லை என்பதற்காக. #OnceMore இன்று முதல் உங்களுடையது. ❤️🧿
14
27
235
11,410
பேரன்பைத் தாண்டிய பேய் ஒன்றுமில்லை. எல்லாமுமாய் இருந்து நெகிழ்ந்து உருகிக் கரைந்த அன்பு, சட்டென நம்மை விட்டுப் போனால், உயிரே போய்விடும்தானே… ‘இத்தோடு வாழ்வு முடிந்தது’ என்கிற இக்கட்டை ஏதோவொரு பிரிவு நிச்சயம் நமக்குள் நிகழ்த்தி இருக்கும்தானே… அவ்வளவு பெரிய நெருக்கடியை எப்படி கடந்தோம் என இப்போது நினைத்தால் மலைப்பாக இருக்கும். அப்படி என்னை நினைத்து நெகிழ வைத்த படம் ‘ஒன்ஸ்மோர்’! அர்ஜூன் தாஸ், அதிதி ஷங்கர் நடிப்பில் அன்புத் தம்பி விக்னேஷ் ஶ்ரீகாந்த் இயக்கத்தில் பேரன்பன் ‘மில்லியன் டாலர்’ யுவராஜ் தயாரித்திருக்கும் ‘ஒன்ஸ்மோர்’ படம் பார்த்தேன்; பைத்தியமானேன். கடந்துவந்த எல்லா நினைவுகளுக்குள்ளும் நம்மைக் கொண்டுபோய்ச் செறுகி, கலங்கவும் குலுங்கவும் செய்துவிட்டது இந்தப் படம். காதலை, பேரன்பை, பிரிவை, வலியை, போராட்டத்தை ஒருசேர அர்ஜூன் தாஸ் நடித்துக் குவித்திருக்கும் விதம் அவரை அப்படியே கட்டிக்கொள்ள வைக்கிறது. அர்ஜூன் தாஸ் வில்லனாக நடித்தாலே கொண்டாட பெரும் கூட்டமிருக்கிறது. கதாநாயகன்… அதுவும் இரண்டு ஹீரோயின்களுக்கான நாயகன் என்றால் சொல்லவா வேண்டும்? படம் பார்க்கும் அவருடைய ரசிகர், ரசிகைகள் அப்படியே அவர் கன்னத்தைக் கிள்ளி தின்றுவிடுவார்கள். அப்படியொரு ஆத்மார்த்தமான நடிப்பு. அதிதி ஒவ்வொரு காட்சியிலும் படபடக்கிறார். காதலுக்குச் சம்மதம் கிடைக்கிற பொழுதில் முகத்தை மூடிக்கொண்டு கலங்கிய கண்களோடு அவர் காட்டுகிற ஒரு ரியாக்‌ஷன்… கோடி தகும்! எப்படி தேடிக் கண்டுபிடித்துக் கொண்டு வந்தார்களோ இந்தத் தேவதையை… ‘அறிமுகம்’ சோனா அவ்வளவு பாந்தம்; காந்தம்! ‘மில்லியன் டாலர்’ கம்பெனிக்காகவே ஒரு கதையை எழுதிக்கொண்டு வந்தவர் போல் இயக்குநர் விக்னேஷ் ஶ்ரீகாந்த் அத்தனை கதாபாத்திரங்களையும் முக்கியத்துவமாக்கி பேரற்புதமான படைப்பைக் கொடுத்திருக்கிறார். எந்த இடத்திலும் இது ஒரு படம் என்கிற எண்ணமே வராதபடி ஒரு வாழ்வுக்குள் நம்மைக் கொண்டு செல்வதுபோல் இழுத்துப் போகிறார். கவிதையாய் நகர்கின்ற ஒவ்வொரு காட்சியும் அப்படியே நம்மோடு ஒட்டிக்கொள்ளும். அத்தனை பாடல்களையும் இயக்குநரேதான் எழுதி இருக்கிறார். ‘செந்தாழம் பூ நிறத்தி’ இந்த ஒற்றை உவமை போதும் அவர் வரிகளின் அற்புதம் சொல்ல… இசையும் பாடலும் சாரல் மழை. படமே இசைதான். ஒவ்வொரு பாடலும் கூச்சசுபாவிகளைக்கூட ஆட்டம் போட வைக்கும். ‘மில்லியன் டாலர்’ நிறுவனத்தின் தங்க டாலராய் மின்னப் போகிற படம் ‘ஒன்ஸ்மோர்’ படம் பார்த்து வெளியே வந்து தம்பி யுவராஜின் கைகளைக் குலுக்கி ஏதும் பேச வார்த்தைகளற்று நின்றேன். இந்தச் சிறு வயதுக்குள் எப்படி இவ்வளவு ரசனையும் உழைப்பும் திட்டமிடலும்… நம்பியோரை ஜெயிக்க வைக்க, அவர்களின் வெற்றியில் ஆசுவாசமாக, அவர்களை உயர்த்திப் பிடித்து உளமகிழ்வு கொள்ள எவ்வளவு பெரிய மனம் வேண்டும். “இந்தப் படம் மிகப்பெரிய மேஜிக்கை நிகழ்த்தும் தம்பி…” எனக் கட்டிக் கொண்டேன். என் தோள்களில் விழுந்தது அவர் கண்ணீர்த் துளி… @HeshamAWmusic @iam_arjundas @AditiShankarofl @OlickalSona @editorNash @Foxy_here03 @Yuvrajganesan @thinkmusicindia @MillionOffl @proyuvraaj
1
5
35
10,884
இரா.சரவணன் retweeted
நேற்று #OnceMore @iam_arjundas Girls Special Screening முடிந்த பிறகு நடந்த இந்த சில நிமிடங்கள் எனக்கு ரொம்ப personal-ஆ இருந்தது. ஒரு படம் எடுக்க ஆரம்பிக்கும்போது, அதற்குப் பின்னால் ஒரு intention இருக்கும். நாம் சொல்ல நினைத்த ஒரு உணர்வு இருக்கும். ஆனால் அந்த உணர்வு திரையிலிருந்து இறங்கி, நமக்குத் தெரியாத ஒருவருடைய வாழ்க்கைக்குள் போய் சரியான இடத்தில் உட்காரும் நிமிடத்தை நம்மால் அடிக்கடி பார்க்க முடியாது. நேற்று பார்த்தேன். காதலில் ஒருமுறை காயப்பட்ட பிறகு, பல பேர் காதலை வெறுப்பதில்லை. மீண்டும் நம்புவதற்குத்தான் பயப்படுகிறார்கள். அந்தப் பயத்தை ஒரு படம் முழுமையாக எடுத்துவிட முடியாது. ஆனால் பல வருடங்களாக மூடியிருக்கும் ஒரு மனதின் ஜன்னலை கொஞ்சம் திறந்து, “வெளியே இன்னும் காற்று இருக்கிறது…” என்று நினைவுபடுத்த முடியும். ஒருவேளை Once More எடுக்கப்பட்டதற்கான காரணமும் அதுதான். Second chance என்பது பழைய ஒருவர் திரும்பி வருவது மட்டும் இல்லை. நமக்குள் முடிந்துவிட்டதாக நினைத்த ஒரு நம்பிக்கை மீண்டும் திரும்பி வருவதும் second chance தான். @isrikanthmv சொல்ல நினைத்த ஒரு உணர்வு, யாரோ ஒருவருடைய வாழ்க்கையில் ஒரு சின்ன நம்பிக்கையாக மாறியதை நேற்று என் கண் முன்னால் பார்த்தேன். அந்தக் கண்ணீர் எனக்கு ஒரு review இல்லை. நான்கு வருடங்களாக காதலுக்கு மூடியிருந்த ஒரு கதவு, “Once More…” என்று கொஞ்சம் திறந்த தருணம் அது. ❤️ ஒருவேளை ஒரு படத்திற்குக் கிடைக்கக்கூடிய அழகான வெற்றி இதுவாகத்தான் இருக்கும்.
15
36
225
72,443
இரா.சரவணன் retweeted
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை. கோயம்பேடு பக்கம் ஒரு காய்கறிக் கடையில் நின்றிருந்தேன். ஞாயிற்றுக்கிழமை காலை காய்கறிக் கடைகளில் ஒரு தனி கூட்டம் இருக்கிறது. வாரம் முழுக்க இந்தப் பக்கம் வராதவர்கள் எல்லாம் இரண்டு பெரிய பைகளோடு நின்றிருப்பார்கள். எனக்கு முன்னால் ஐம்பது வயது இருக்கும் ஒருவர். ஒரு கையில் பெரிய துணிப்பை. இன்னொரு கையில் போன். “தக்காளி எடுத்துட்டேன்.” மறுபக்கம் ஏதோ சொன்னார்கள். “வெங்காயமும் எடுத்துட்டேன் மா.” கொஞ்ச நேரம் அமைதியாகக் கேட்டார். “பீன்ஸ் எவ்வளவு?” மறுபடியும் ஏதோ பதில். “அரை கிலோவா? சரி.” போனை தோளுக்கும் காதுக்கும் நடுவில் வைத்துக்கொண்டு பீன்ஸை எடுத்தார். அடுத்தது இஞ்சி அடுத்தது பச்சை மிளகாய். ஒவ்வொன்றையும் எடுக்கும்போதும் phone-ல் confirm பண்ணிக்கொண்டே இருந்தார். கடைக்காரர் அவரைப் பார்த்துச் சிரித்தார். “சார், ஒரு list எழுதி வாங்கிட்டு வந்திருக்கலாம்ல?” அவர் உடனே pocket-லிருந்து மடித்து வைத்திருந்த ஒரு paper-ஐ எடுத்துக் காட்டினார். “List இருக்கு.” கடைக்காரர் சிரித்தார். “அப்புறம் எதுக்கு சார் phone?” அவரும் சிரித்துக்கொண்டே, “எழுதுனதுக்கப்புறம் நாலு item சேர்த்திருப்பா. கேக்காம வாங்கிட்டுப் போனா மறுபடியும் நான்தான் வரணும்.” என்றார். அங்கிருந்த இரண்டு பேர் சிரித்தார்கள். அவரும் சிரித்தார்.nShopping கிட்டத்தட்ட முடிந்தது. Phone-ஐ வைத்துவிட்டு இரண்டு பைகளையும் தூக்கினார். கடையை விட்டு வெளியே போகும்போது மீண்டும் phone அடித்தது. எடுத்தார். “சொல்லு…” ஒரு நொடி கேட்டார். திரும்பி கடைக்குள் வந்தார். “அண்ணே, கொத்தமல்லி விட்டுட்டேன்.” கடைக்காரர் சிரித்துக்கொண்டே கொத்தமல்லியை எடுத்துக் கொடுத்தார். “இதான் சார் நான் சொன்னது. List-ஐ follow பண்ணுங்க.” அவர் அதை வாங்கிப் பைக்குள் வைத்துக்கொண்டு, “List-ல அது இல்லண்ணே.” என்றார். மறுபடியும் எல்லோரும் சிரித்தோம். அவர் இரண்டு பைகளையும் எடுத்துக்கொண்டு நடந்துபோனார். பெரிய சம்பவம் ஒன்றுமில்லை. ஆனால் அவர் போன பிறகும் அந்த conversation மட்டும் எனக்கு நினைவில் இருந்தது. நிறைய வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த பிறகு காதல் பேசப்படும் மொழி கொஞ்சம் மாறிவிடுகிறது போல. “I love you” என்று தினமும் சொல்லிக்கொண்டிருக்க மாட்டார்கள். “பீன்ஸ் அரை கிலோ போதுமா?” “இஞ்சி வாங்கிட்டேன்.” “வேற ஏதாவது வேணுமா?” என்று பேசிக்கொண்டிருப்பார்கள். அவர் கடைசியாகத் திரும்பி வந்து வாங்கிப்போன அந்தக் கொத்தமல்லியை நினைத்துக்கொண்டேன். சில திருமணங்களில் காதல் பெரிய பரிசுகளாக வீட்டுக்கு வருவதில்லை. ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை, இரண்டு காய்கறிப் பைகளுக்குள் கொஞ்சம் கொத்தமல்லியாகவும் வீட்டுக்குப் போகிறது.
27
93
726
76,906
இரா.சரவணன் retweeted
‘Oncemore’ ஆரம்பிச்ச நாள்ல இருந்து இன்றைக்கு வரைக்கும்… journey நினைச்ச மாதிரி எதுவுமே easy-ஆ நடக்கல.. ஒரு விஷயம் சரியானா இன்னொரு problem. சில நாட்கள் நல்ல hope இருக்கும், சில நாட்கள் “எப்படிடா இதை முடிச்சு release வரைக்கும் கொண்டு போகப் போறோம்?”ன்னு தோணும். ஆனா somehow, ஒவ்வொரு நாளா manage பண்ணி, கொஞ்சம் கொஞ்சமா முன்னாடி வந்துட்டோம். Today is our Audio Launch. ❤️ திரும்பிப் பார்த்தா, இவ்வளவு தூரம் வந்ததே ஒரு small happiness மாதிரி இருக்கு. And one thing I’m genuinely very happy about 13 Tracks. ஒரு படத்துக்கு இவ்வளவு பெரிய musical album கிடைக்கிறது ரொம்ப special. இந்தப் படத்தோட emotions-ஐ அழகான இசையா மாற்றிக் கொடுத்த @isrikanthmv -க்கு big congratulations. Still a few more days to go. இன்னும் நிறைய ஓடணும். But today, just want to enjoy this little moment. We came a long way to reach here. 13 tracks out today. #Oncemore from August 28 World Wide in Theatres ❤️
9
10
119
25,897
இரா.சரவணன் retweeted
சில படங்களை சந்தோஷமாக இருக்கும்போது பார்க்கிறோம். சில படங்களை, சந்தோஷமாக இருக்க முடியாதபோது பார்க்கிறோம். எனக்கு ‘தர்மதுரை’ அப்படித்தான். 2016 ஆகஸ்ட் 19. அப்போது வாழ்க்கை மீது ஒரு சின்ன வெறுப்பு இருந்த காலம். நினைத்தது எதுவும் நடக்கவில்லை. அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. யாரிடமும் சொல்லத் தோன்றாத ஒரு சோர்வு. அந்த மனநிலையில்தான் AVM Theatre-ல் 40 ரூபாய் டிக்கெட் வாங்கி, “கடுப்பா இருக்கு… படம் பார்த்துட்டு வரலாம்” என்று உள்ளே போனேன். படம் முடிந்தது. என் பிரச்சனைகள் எதுவும் முடியவில்லை. வாழ்க்கையும் அடுத்த நொடியே சரியாகிவிடவில்லை. ஆனால் அன்று நிம்மதியாகத் தூங்கினேன். அதுதான் அந்தப் படம் எனக்குச் செய்தது. ஒரு நல்ல சினிமா எல்லா நேரமும் நம்முடைய வாழ்க்கையை மாற்ற வேண்டியதில்லை. சில நேரங்களில் இரண்டு மணி நேரம் நம்முடைய பாரத்தை வாங்கி வைத்துக்கொண்டு, “பரவாயில்லை… நாளைக்கு பார்த்துக்கலாம்” என்று நம்மைத் தூங்க வைத்தாலே போதும். அதற்குப் பிறகு எப்போது ‘தர்மதுரை’ பார்த்தாலும் எனக்கு அந்த முதல் நாள் நிம்மதி திரும்பக் கிடைக்கும். தவறிப்போன காதல். கைநழுவிப்போன வாழ்க்கை. புரிந்துகொள்ளாத குடும்பம். தன்னையே தொலைத்துவிட்டு திரும்பத் தேடும் ஒரு மனிதன். அதனால்தானோ என்னவோ, தர்மதுரையைப் பார்க்கும்போது ஒரு கதையைப் பார்க்கிற உணர்வு வருவதில்லை. நம்மைவிட கொஞ்சம் அதிகமாகத் தொலைந்துபோன ஒருவன் எப்படியோ வீடு திரும்புவதைப் பார்க்கிற நிம்மதி வருகிறது. “எந்தப் பக்கம் காணும்போதும் வானம் ஒன்று…” பத்து வருடங்களுக்கு முன்பு அது எனக்குப் பிடித்த பாடல் வரி. இப்போது புரிகிறது எந்தப் பக்கம் வாழ்க்கை நம்மைத் திருப்பிவிட்டாலும், மேலே கொஞ்சம் வானம் மிச்சமிருக்கிறது. சில திரைப்படங்களுக்கு பத்து வயதாகிறது. சில திரைப்படங்களோடு நாமும் பத்து வருடங்கள் வாழ்ந்திருக்கிறோம். #தர்மதுரை 10 ஆண்டுகள். அன்று AVM-ல் 40 ரூபாய்க்கு வாங்கிய டிக்கெட் இன்னும் என் நினைவில் இருக்கிறது. ஏனென்றால் சில படங்களுக்கு நாம் காசு கொடுக்கிறோம். சில படங்கள் திருப்பி நமக்குக் கொஞ்சம் நிம்மதி கொடுக்கின்றன.
2
36
168
3,642
சுதந்திர தின நல் வாழ்த்துகள்… #நந்தன்
4
27
230
4,465
‘துணிவு’ படம் ரிலீஸான நாளில் இயக்குநர் ஹெச்.வினோத் எதுகுறித்த சலனமும் இல்லாமல், சபரிமலையில் பாய் விரித்துத் தூங்கிய காட்சியைச் சட்டெனப் புகைப்படம் எடுத்தேன். எதையுமே சட்டை செய்யாத அவருடைய மனநிலை குறித்து அந்தப் புகைப்படத்துடன் அப்போது நான் எழுதிய பதிவு பெரும் கவனத்தைப் பெற்றது. ‘ஜனநாயகன்’ கதை விவாதம் முடிந்த நாளில் ஒரு பாறை மீது வினோத் படுத்துத் தூங்கிய காட்சியையும் அவருக்குத் தெரியாமல்தான் புகைப்படம் எடுத்தேன். ‘ஜனநாயகன்’ ரிலீஸான நாளில் அந்தப் புகைப்படத்துடன் எதையுமே மண்டைக்கு ஏற்றிக்கொள்ளாத அவருடைய மனநிலையைப் பதிவிட்டிருந்தேன். அடுத்த அரை மணி நேரத்திற்குள் பதறிப்போய் போன் பண்ணி, “தயவுசெஞ்சு அதை ரிமூவ் பண்ணிடு” என்றார் வினோத். “நீங்க தூங்குற வீடியோவே என்னிடம் இருக்கு. இதை ரிமூவ் பண்ணச் சொன்னீங்கன்னா, அந்த வீடியோவை அப்லோட் பண்ணிடுவேன்” எனச் சிரித்தேன். போனை வைத்துவிட்டார். கோரைப் பாயிலும், மலையிலும் வினோத் படுத்துத் தூங்கும் புகைப்படங்களை நான் எடுக்கக் காரணம், அந்தத் தூக்கத்தில் தெரிந்த நிம்மதி. நல்ல தூக்கத்திற்காக அவர் ஏங்கிய நாட்களை நான் கவனித்திருக்கிறேன். சினிமா பண்ணுவதற்கு முன்னரே வினோத் எனக்கு நல்ல பழக்கம். “குடிசையா இருந்தாலும் சரி, கொசுக்கடி இல்லாத வீட்ல வாழ்ந்துட்டா போதும்” என்பார் அடிக்கடி. கோயம்பேடு மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் கொசுக்கடியால் படாதபாடு பட்ட அவருடைய அனுபவம் அப்படிப்பட்டது. இன்று வினோத் அடைந்திருக்கும் உச்சம் மகத்தானது. சமீபத்தில் கலாட்டா சேனலில் ‘ஜனநாயகன்’ படத்தின் வெற்றியைக் கொண்டாடிய நாளில் வினோத்தின் நெருங்கிய நண்பனாக என்னை அழைத்திருந்தார்கள். நாங்கள் இருவரும் பேசிச் சிரிப்பது போன்ற புகைப்படத்தை திரையில் காட்டி பேசிக்கொள்ளச் சொன்னார்கள். “நாங்க ரெண்டு பேரும் பேசுறதை நீங்க ஒளிபரப்ப முடியாதே…” என்றார் வினோத். பிறகு வினோத்தை நான் பேட்டி எடுக்கும் வகையில் கேள்வி கேட்க ஏற்பாடானது. சட்டெனக் கேட்டேன்… “கொசுக்களே இல்லாத தேசத்தில்கூட உங்களால் இப்போது குடிபோக முடியும். ஆனால், கொசுக்கடி காலத்தில்கூட நிம்மதியாகத் தூங்கிய நீங்கள், இப்போ நிம்மதியா தூங்குறீங்களா?” என்றேன். நொடியும் தாமதிக்காமல், “இல்லை” என்றார் வினோத்!
7
18
259
35,497
இரா.சரவணன் retweeted
ஒரு படம் எடுப்பது பெரிய விஷயம். ஆனா அதை மக்களிடம் கொண்டு போய், Theatrical Release பண்ணுவது… அதைவிட பெரிய விஷயம். குறிப்பா ஒரு சின்ன படத்துக்கு, Release Date announce பண்ணிட்டா எல்லாமே அதன்படி நடந்துரும்னு சொல்ல முடியாது. சில நேரங்களில் நம்ம கையில இல்லாத காரணங்களால் plans மாறும். Release date தள்ளிப் போகும். மறுபடியும் சரியான தேதியைத் தேடி, அந்தப் படத்தை திரையரங்கிற்கு கொண்டு வர நிறைய patience-உம், waiting-உம் தேவைப்படும். Director தன் படத்தை நம்புவார். Producer தன் படத்தை நம்புவார். அது இயல்புதான். ஆனா… “Once More எப்போது?” இந்த ஒரு கேள்வியை கடந்த சில மாதங்களாக எங்க போனாலும் கேட்டீங்க. தொடர்ந்து வந்த messages… நிறைய posts… நிறைய comments… இந்தப் படம் கண்டிப்பா Theatre-ல பார்க்கணும் என்ற உங்கள் எதிர்பார்ப்பு… உண்மையா சொல்லணும்னா… அதுதான் இந்தப் படத்தை இவ்வளவு தூரம் கொண்டு வந்திருக்கிறது. இந்தப் படத்தின் மீது நீங்கள் வைத்த அன்புக்கும், பொறுமைக்கும், நம்பிக்கைக்கும்… இதயப்பூர்வமான நன்றி. ❤️ We’re Ready. #OnceMore August 28 Only in Theatres.
7
23
189
14,248