‘நந்தன்’ சிறந்த கதையாகத் தேர்வாகி இருக்கிறது. ஆனால், அது நம் கண்முன்னே இன்றளவும் நடக்கிற நிஜம். பலநூறு பட்டியலினப் பஞ்சாயத்து தலைவர்கள் பதவிக்கு வந்தும் உரிய அங்கீகாரத்தை அடைய முடியாமல் அனுபவிக்கும் தத்தளிப்பு… அந்தத் துயர வாழ்வின் தொகுப்புதான் ‘நந்தன்’ கதை… காகிதமாகவே முடங்கியிருக்க வேண்டிய கதை, ஆயுதமாக மாற சசிகுமார் சார்தான் காரணம். எதுகுறித்தும் யோசிக்காமல் கொடுமணலில் நிர்வாணமாய் உடல் கிடத்திக் கிடந்த சசிகுமார் சாருக்கே அனைத்தும் சமர்ப்பணம்! அங்கீகரித்த விகடனுக்கும் ஆதரிக்கும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி 🙏