எல் கே ஜி படத்தில் ஆர் ஜே பாலாஜி ஒரு வசனம் பேசுவார். அவர் உயரத்தை பிடிப்பதற்கு எனக்கு 30 வருடம் தேவை… ஆனால் அவரை இழிவுபடுத்தி என் உயரத்திற்கு கொண்டு வர 3 மாதம் போதும் என்று சொல்லி விட்டு தரம் கெட்ட வேலைகளைத் தொடங்குவர்… இன்று விஜய் அதைத்தான் செய்கிறார். இது இன்று தொடங்கியதும் அல்ல…
இது ஆரியத்தின் நீண்ட கால செயல் திட்டம்…
அரசியலில் ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாம் இருக்கும் அது போல் தளபதி என்றால் ஸ்டாலின் என்பதே தமிழக மக்கள் அறிந்தது… விஜயை வைத்து அதை முதலில் உடைக்க தொடங்கியது ஆரியம்… இளைய தளபதி இப்படித்தான் தளபதி ஆக்கப்பட்டார்.
கலைஞரின் மிகப்பெரிய பலமே அவரது தமிழும் இலக்கியமும் அவர் தமிழ்ச் சமூகத்திற்கு குறிப்பாக பெண்கள் ஒடுக்கப்பட்டோர் , சிறுபான்மையினருக்கு செய்த திட்டங்களே.. நீங்கள் நன்கு கவனியுங்கள் ஆரியம் இவற்றைத்தான் கலைஞருக்கு எதிராக மாற்றியது.. அவரை தமிழ்ச் சமூகத்தின் எதிரி போல் சித்தரித்தது.. சாராய விற்பனையை தமிழ் நாட்டில் மீண்டும் தொடங்கிய , டாஸ்மாக் நிறுவனத்தை தொடங்கிய எம்ஜிஆரை பெண்களின் காவலராகவும், பெண்களுக்கு சொத்துரிமை தந்து அவர்களின் கல்வி மேம்பட திட்டங்களைத் தீட்டியவரை பெண்களுக்கு எதிரியாகவும் சித்தரித்தது.
அதேதான் ஆரியம் ஸ்டாலினுக்கு இப்போது செய்கிறது.. Stalin is More Dangerous than Karunanidhi என்று சொன்னது ஸ்டாலின் ஆரியத்திற்கு எதிரான சண்டையை அதி தீவிரப்படுத்தியதாலேயே..
அதற்கான எதிர்வினையைத்தான் ஆரியம் விஜயைக் கொண்டு செயல்படுத்துகிறது.. விஜய் திரைத்துறையில் இருந்து வந்தவர். ஸ்டாலின் மிசாவை எதிர்கொண்டவர் என்று சொல்லத் தொடங்கும் போது அதையே சிதைக்கிறேன் பார் என்கிறது ஆரியம்…
அசுரன் படத்தில் ஒரு வசனம் வரும் என்னனு வழக்கு போட்டுருக்கானுவ என்று கேட்பார் தனுஷ்
அதற்கு பசுபதி, நீங்க அரு^வா* காட்டி வடக்கூரான் மோதிரம் செயினை மிரட்டி புடுங்குனீங்களாம். சிதம்பரம் உருண்டைய எறிஞ்சானாம்.. என்பார்
அப்போது தனுஷ் சொல்வார், “ அதான இந்த செறு….கி புள்….ளேளுக நாம மானத்திற்காக சண்டை போட்டோம்னு ஒத்துக்கவே மாட்டானுங்களே என்பார்
அதுதான் இங்கே இப்போது நடக்கிறது…
எதெல்லாம் திமுக வின் பெருமையோ அவையெல்லாம் காலம் காலமாக சிதைக்கப்பட்டிருக்கின்றன..
மொழி காக்க நடந்த கல்லக்குடி போராட்டத்தை மலினப்படுத்தாத நாக்குகளும் உண்டா ?
இட ஒதுக்கீட்டிற்காக
பெண் முன்னேற்றத்திற்காக
மொழி காக்க
மாநில சுயாட்சி காக்க என எல்லா சூழல்களிலும் சண்டை செய்த செய்கின்ற திமுகவை மலினப்படுத்துவதன் நோக்கம் திமுக பேசும் அரசியலை இனி வேறு யாரும் துணிவுடன் பேசக் கூடாது என்பதாலேயே..
சனாதனத்தை ஒழிப்பேன் என்று
உதயநிதி சொன்னதே உதயநிதி குறிவைக்கப்படுவதன் பின்னனி…
இனி யார் ஒருவரும் சனாதன ஒழிப்பை பேசக் கூடாது என்று அச்சமூட்டுவதே அதன் நோக்கம்..
விழித்துக்கொண்டால் பிழைத்துக்கொள்வோம்…