🚨 SPOILER ALERT 🚨
Dorothy படம் பார்க்காதவங்க இந்த review-ஐ skip பண்ணிக்கோங்க. முக்கியமான கதையும் twists-ம் இருக்கு.
#Dorothy (2026) பார்த்து முடிச்சேன்⚧️
@cineeloop - 3.5⭐
Karthik Subbaraj-ஓட 10வது படம்.
இந்த முறை வழக்கமான violence, gangster zone-ஐ தாண்டி, ஒரு friendship-க்குள்ள இவ்வளவு வலி, கோபம், மனப்போராட்டம் இருக்குமான்னு காட்டியிருக்காரு.
சின்ன வயசுல இருந்து உயிருக்கு உயிரா நண்பர்களா இருக்குற Karthi (Rishikanth) - Subbu (Sananth), வளர்ந்ததும் ஊருக்குள்ள ரௌடிகளா சுத்திக்கிட்டு இருக்காங்க.
ஆனா Subbu-வோட அப்பா, Karthi-யை நண்பனா பார்க்காம வேற சாதிக்காரனா தான் பார்க்குறாரு.
அதுமட்டுமில்லாம, Subbu-வோட அம்மா, தங்கையை கூட அவர்தான் ஆணவக்கொலை பண்ணியிருக்காரு.
இந்த சூழல்ல Subbu-வோட அண்ணன் Dorothy-யை (Keerthy Suresh) கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வர்றாரு.
Dorothy-க்கும் Subbu-க்கும் கொஞ்சம் கொஞ்சமா நல்ல bonding உருவாகுது.
ஆனா ஒரு நாள்…
Dorothy தூக்கிட்டு இறந்துடுறா.
இது தற்கொலை இல்லன்னு தெரிஞ்சதும் Subbu உடைஞ்சு போறான்.
“என் அப்பனும் அண்ணனும் தான் அவளைக் கொன்னிருக்காங்க!”
அங்க இருந்து படம் இன்னும் heavy ஆகுது.
ஏற்கனவே தன்னோட அம்மா, தங்கைன்னு வீட்டுல இருந்த பெண்கள் ஒவ்வொருத்தரையும் ஆண்கள் கொலை பண்ணியதை பார்த்துட்டு இருக்குற Subbu, ஒரு கட்டத்துல தான் திருநங்கையாக வாழ விரும்புறதை வெளிப்படுத்துறான்.
அதையும் குடும்பத்தால ஏத்துக்க முடியல.
குடும்ப மானத்துக்காக Subbu-வையே கொலை செய்ய Karthi-கிட்ட சொல்றாங்க.
அதுக்கப்புறம் தான் Karthi-யோட மிகப்பெரிய போராட்டம்.
தன்னோட நண்பனை ஏத்துக்குவானா?
இல்ல… குடும்பத்துக்காக அவனையே கொலை பண்ணுவானா?
இந்த conflict-ஐ தான் படம் முழுக்க ரொம்ப emotional-ஆ கொண்டு போகுது.
Rishikanth 🔥
Subbu-வை ஏத்துக்க முடியாம தவிக்குறது, அவரை வேற மாதிரி பார்க்குறது, கடைசில தன்னோட நண்பனையே எப்படி கொலை பண்ணுறதுன்னு போராடுறது…
இந்த scenes-ல ரிஷிகாந்த் நல்லா நடித்திருக்காரு.
Sananth ⚧️❤️🔥
திருநங்கையாக மாறிய பிறகு body language, expressions எல்லாமே நல்லா work ஆகியிருக்கு. குறிப்பா அந்த transformation scenes ரொம்ப impact-ஆ இருக்கு.
Keerthy ❤️
கொஞ்ச நேரம்தான் வர்றாங்க. ஆனா Dorothy கதாபாத்திரம் கதைக்குள்ள விட்டுட்டுப் போற impact ரொம்ப பெருசு.
அதுக்கு மேல Ilaiyaraaja BGM 🥹❤️🔥
இந்த படத்துல இருக்குற சில sensitive scenes-க்கு பின்னணி இசை வேற level-ல வேலை செய்திருக்கு.
அன்றும்… இன்றும்… என்றும்…
ராஜா ராஜாதான். ❤️
சில இடங்கள்ல படம் கொஞ்சம் over-emotional-ஆ போற மாதிரி feel ஆகுது. Runtime-ம் கொஞ்சம் நீளமா இருக்கு.
ஆனா overall…
Dorothy ஒரு raw-ஆன, emotional-ஆன, மனசுல நிக்குற படம்.
Friendship-ஐ மட்டும் பேசாம, ஒருத்தன் எப்படி வாழணும்னு இந்த society முடிவு பண்ணுறதைப் பற்றியும் கேள்வி கேக்குது.
வித்தியாசமான ஒரு emotional experience வேணும்னா Dorothy-வை theatre-ல பாருங்க. ❤️🔥
#Dorothy #KarthikSubbaraj #KeerthySuresh