அண்ணே SP வேலுமணி… நீங்க சொல்றதெல்லாம் சரின்னே கூட வச்சுக்கலாம்! ஆனா தேர்தல் முடிஞ்ச உடனே, தலைமையை மீறி TVK-வுக்கு ஆதரவு கொடுக்கச் சொன்னது யாரு? அதை மட்டும் சொல்லுங்க அண்ணே…compromise பண்ணிக்கலாம்!
1972ஆம் ஆண்டு துவங்கப்பட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 55ஆம் ஆண்டு தொடக்க விழாவை இன்று சிறப்பாகக் கொண்டாடி வருகிறோம். ஒட்டுமொத்த தமிழக மக்களின் இதயங்களில் குடிகொண்டுள்ள புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களால் இந்த இயக்கம் துவங்கப்பட்ட இரண்டு வார காலத்திலேயே, பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த காஞ்சி மண்ணில் கழகத்தின் மாபெரும் முதல் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. (கழகத்தின் நிறுவனர், புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள் 17.01.1917 இலங்கை, கண்டி மாவட்டத்தில் கள்ளாரை அருகில் உள்ள நாவலப்பட்டி என்ற கிராமத்தில் மருதூர் கோபாலன் மேனன் மற்றும் சத்யபாமா தம்பதியினருக்கு 5வது மகனாக பிறந்தார்).
இக்கூட்ட ஏற்பாடுகளை எம்.ஜி.ஆர். அவர்களின் சத்யா மூவிஸ் பட நிறுவனத்தை நிர்வகித்தவரும், புரட்சித்தலைவர் அவர்களுக்கு திரைத்துறை மற்றும் அரசியல் பயணத்தில் பக்க பலமாக இருந்தும், புரட்சித்தலைவர் அவர்களின் மறைவுக்குப் பிறகு மாண்புமிகு அம்மா அவர்களின் தலைமையிலான முதல் அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றியவருமான திரு. ஆர்.எம்.வீரப்பன் அவர்கள், முன்நின்று கவனித்தார்.
அவருடன் காஞ்சி பன்னீர்செல்வம், மிட்டாய் கடை பாலாஜி, இஸ்லாமிய சகோதரர் ஒருவர் ஆகியோர் உறுதுணையாக இருந்தனர். அன்றைய ஆளுங்கட்சியான தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெறுவதை தடுக்க தீவிரமாக முயற்சி செய்தனர். அன்றைய தினம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். பொதுக்கூட்டத்தை ரத்து செய்யும் சூழ்நிலையில், மிகவும் சோர்வுடன் இருந்தார். மருத்துவரும் இதை ஆமோதித்தார்.
இதையறிந்து திரு.ஆர்.எம். வீரப்பன் மற்றும் கழக முன்னோடிகள் மருத்துவரின் அனுமதியைப் பெற்று புரட்சித்தலைவர் அவர்களை நேரில் சந்தித்து, பொதுக்கூட்ட மைதானத்தில் லட்சக்கணக்கான தொண்டர்களும் பொதுமக்களும் கூடியுள்ளனர், பொதுக்கூட்ட மேடைக்கு செல்லும் வழிநெடுங்கிலும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்களும் பொதுமக்களும் குவிந்துள்ளனர், ஆகவே, அவசியம் இந்தப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு 15 நிமிடங்களாவது உரையாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். அதனைத் தொடர்ந்து புரட்சித்தலைவர் அவர்கள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
சென்னையில் இருந்து பொதுகூட்டமேடைக்கு செல்ல சுமார் 5 மணி நேரமானது. தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் உற்சாக வரவேற்பினை பெற்று இல்லம் திரும்பும் போது விடிந்துவிட்டது என்பதை நினைவு கூர்வதோடு, கடும் காய்ச்சலால் உடல் நலம் பாதிக்கப்பட்ட சோர்வுற்ற நிலையிலும் இயக்கத்தின் நலனுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் தன் நலம் மறந்து உழைத்தவர் புரட்சித்தலைவர் அவர் எம்.ஜி.ஆர். அவர்கள்.
அவரது மறைவுக்குப் பிறகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பல்வேறு சோதனைகளைக் கடந்து, இந்தியாவில் மூன்றாவது பெரிய இயக்கமாக கழகத்தை உருவாக்கி, தமிழகத்தில் தொடர் பொற்கால ஆட்சியை பெற்று தந்தார்.
இந்த இனிய வேளையில் இருபெரும் தெய்வங்களின் தியாகத்தினால் இன்று இந்த இயக்கமா அருகு போல் வளர்ந்து, ஆல் போல் தழைத்து வேரூண்றி உள்ளது என்பதை பெருமையோடு நினைவு கூர்கின்றேன்.
கேரள மாநிலம் பாலக்காடு அருகில் உள்ள வடவனூர் கிராமத்தில் எம்.ஜி.ஆர். மற்றும் சத்தியபாமா ஆகியோர் வாழ்ந்த இல்லத்தை சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் திரு. சைதை துரைசாமி அவர்கள் தனது மனிதநேய அறக்கட்டளை மூலம் புதுப்பித்து மேம்படுத்தி 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கேரள மாநிலம் முன்னாள் ஆளுநர் திரு. சதாசிவம் அவர்களால் பொதுமக்களின் பார்வைக்கு திறந்து வைத்து பெருமை சேர்த்தார்.
அந்த வழியில் மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் பிறந்த இடமான கண்டி, நாவலப்பட்டி என்ற கிராமத்தில் உள்ள இல்லத்தை புனரமைத்து நினைவுச் சின்னமாக மாற்ற இலங்கை அரசின் அனுமதி வேண்டி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய பாஜக அரசு முயற்சி மேற்கொண்டு அனுமதி பெற்றுத் தர வேண்டுகோள் வைக்கின்றேன். இலங்கை அரசு அனுமதி அளிக்க வேண்டும்.
இந்த அரிய முயற்சிக்கு பெரும் பங்களிப்பை அளித்து வருபவர் MGR Pictures திரு. ரமேஷ் அவர்களுக்கு வாழ்த்துகள். கூடிய விரைவில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும். இந்த நன்நாளில் உறுதி மொழி ஏற்று அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.